விக்கிமூலம் பேச்சு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3/பங்குபெறுபவர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

@Neyakkoo: நேயக்கோ அவர்களே வணக்கம். விக்கிமூல தொடர் தொகுப்பில் தங்கள் ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். தங்கள் மாணவர்களின் பெறும் பங்களிப்புகளையும் எதிர்ப்பார்க்கிறோம். விக்கிமூலத்தில் பல விதமான பக்கங்களில் பல விதமான நுணுக்கங்கள் உள்ளது. அவை பலவற்றை பல பக்கங்களை மெய்ப்பு செய்வதின் மூலமே நமக்கு பயிற்சி வரும். அது போல் விக்கிமூலம் மற்றும் மற்ற விக்கித் திட்டங்களிலும் பல விதிமுறைகள்/செயல்முறைகள் உள்ளது. விக்கித்திட்டங்களுக்கும் அடிப்படை நோக்கங்கள் உள்ளது. இது யாவும் தொடர்ந்து பல விதமாக விக்கி பங்களிப்புகள் மூலமாகவே அறியக் கிடைக்கும். விக்கிமூலத்தொடர் தொகுப்பு போட்டியில் நடுவராக பணியாற்றுவது மிகவும் அயர்ச்சியான பணி. பலரும் இப்பணியில் ஈடுப்பட்டால் அனைவரின் சுமை குறையும். தாங்கள் இந்த நடுவர் பணியில் ஈடுபடுவதற்கு தங்கள் பெயரினை பதித்ததற்கு நன்றி. தங்கள் நோக்கம் பாராட்டத்தக்கது. ஆனால் தாங்கள் இதுவரை 343 தொகுப்புகள் மட்டுமே பக்க பெயர்வெளியில் செய்துள்ளீர்கள். மேலும் அனைத்து விக்கிதிட்டங்களிலும் சேர்த்து 1912 தொகுப்புகள் மட்டுமே செய்துள்ளீர்கள். அதனால் இம்முறை தங்களை ஒரு பங்களிப்பாளராக தொடர்ந்து பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பிற்காலத்தில் தங்களுக்கு நல்ல அனுபவம் வந்த பின்பு நடுவர் பணியினை மேற்கொண்டால் தங்களுக்கும் மற்றுவர்களுக்கும் நன்றி பயக்கும். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். -- Balajijagadesh (பேச்சு) 09:11, 13 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

@Rajendran Nallathambi: தாங்களும் மேற்கூறிய தகவல்களைக் கவனிக்கவும். உங்களது உங்களது மொத்த பங்களிப்புகள் 977 தொகுப்புகள். எனவே, இம்முறை ஒரு பங்களிப்பாளராக தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள். நன்றி Sridhar G (பேச்சு) 14:42, 13 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
  1. மூத்த விக்கிமீடியர் இருவரின் கருத்திற்கு மிக்க நன்றி. நடுவராக இருப்பதற்குத் தகுதிகள் விதிகளாக இருப்பின் அறியத்தருக.--Neyakkoo (பேச்சு) 15:27, 13 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
தங்கள் கேள்விக்கு நன்றி. நடுவராக இருப்பதற்கு நல்ல மெய்ப்பு செய்யும் அனுபவமும், விக்கியில் அனைத்து திட்டங்களின் பங்களிப்பு மற்றும் அனுபவமும், போட்டியில் மட்டும் அதிகம் பங்களிப்பு செய்யாமல் போட்டியில்லாமலும் தொடர்ந்து பங்களிப்பு செய்வது, விக்கிதிட்டத்தின் மீதான நம்பிக்கை, கூட்டு ஒத்துழைப்பு, விக்கி சமூகத்தின் நம்பிக்கை போன்ற பல காரணங்கள் உள்ளது. நன்றி-- Balajijagadesh (பேச்சு) 16:18, 13 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

@Rajendran Nallathambi: இராஜேந்திரன் அவர்களே வணக்கம். விக்கிமூல தொடர் தொகுப்பில் தங்கள் ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். தங்கள் மாணவர்களின் பெறும் பங்களிப்புகளையும் எதிர்ப்பார்க்கிறோம். விக்கிமூலத்தில் பல விதமான பக்கங்களில் பல விதமான நுணுக்கங்கள் உள்ளது. அவை பலவற்றை பல பக்கங்களை மெய்ப்பு செய்வதின் மூலமே நமக்கு பயிற்சி வரும். அது போல் விக்கிமூலம் மற்றும் மற்ற விக்கித் திட்டங்களிலும் பல விதிமுறைகள்/செயல்முறைகள் உள்ளது. விக்கித்திட்டங்களுக்கும் அடிப்படை நோக்கங்கள் உள்ளது. இது யாவும் தொடர்ந்து பல விதமாக விக்கி பங்களிப்புகள் மூலமாகவே அறியக் கிடைக்கும். விக்கிமூலத்தொடர் தொகுப்பு போட்டியில் நடுவராக பணியாற்றுவது மிகவும் அயர்ச்சியான பணி. பலரும் இப்பணியில் ஈடுப்பட்டால் அனைவரின் சுமை குறையும். தாங்கள் இந்த நடுவர் பணியில் ஈடுபடுவதற்கு தங்கள் பெயரினை பதித்ததற்கு நன்றி. தங்கள் நோக்கம் பாராட்டத்தக்கது. ஆனால் தாங்கள் இதுவரை 641 தொகுப்புகள் மட்டுமே பக்க பெயர்வெளியில் செய்துள்ளீர்கள். மேலும் அனைத்து விக்கிதிட்டங்களிலும் சேர்த்து 997 தொகுப்புகள் மட்டுமே செய்துள்ளீர்கள். அதனால் இம்முறை தங்களை ஒரு பங்களிப்பாளராக தொடர்ந்து பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பிற்காலத்தில் தங்களுக்கு நல்ல அனுபவம் வந்த பின்பு நடுவர் பணியினை மேற்கொண்டால் தங்களுக்கும் மற்றுவர்களுக்கும் நன்றி பயக்கும். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். --Balajijagadesh (பேச்சு) 16:18, 13 ஆகத்து 2021 (UTC

@Balajijagadesh: பாலாஜி ஜெகதீஷ் அவர்களே வணக்கம். தங்களது கருத்து நான் முன்வைத்த வினாவிற்குத் தெளிவைத் தரவில்லை. போட்டியில் மட்டும் பங்களிப்புச் செய்வதாகக் கூறியுள்ளீர்கள். எனது பங்களிப்பு சென்ற போட்டியின்போதுதான் என்பதைத் தாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வது நன்றாக இருக்கும். விக்கியில் எனது பங்களிப்பு என்பது நான் மட்டுமே செய்வதாக இருக்கக் கூடாது என்பது என் கருத்து. நான் ஒருங்கிணைத்த விக்கிமூலப் பயிற்சிகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகின்றேன். என் போன்ற தமிழ்ப் பேராசிரியர்கள் தமிழ்ப் பணிக்காக நேரம் கிடைக்கும் பொழுது பங்களிப்புச் செய்து வருகிறோம் என்பதையும் தாங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் எனக் கருதுகின்றேன். இது தமிழ் மொழிக்கான மேம்பாட்டுப் பணியைத் தடை செய்யும் தன்மையாகக் கருதுகின்றேன். இந்தப் போட்டியில் அளிக்கும் மதிப்புக்காக நான் என் ஒப்பத்தை நல்கவில்லை. தாங்கள் ஒருங்கிணைப்பாளர்தானே, இதில் இத்தகுதியுடையோர்தான் ஒருங்கிணைப்பாளர், நடுவர், பங்களிப்பாளர் என விதி வகுத்துச் செயல்படுங்கள். அது முன்மாதிரியாகவும் இருக்கும். விக்கிமூலத்தை மேம்படுத்துவதற்காக சில கற்றலைப் பெறுவதற்கே இணைந்தேன். அது தவறு என்றால் தாங்கள் ஒருங்கிணைப்பாளர்தானே நடுவர் பக்கத்தில் விதியை எழுதி விடுங்கள். அதில் என் போன்ற கற்றல் எண்ணமுடையோர் ஒப்பம் இடுவதில் கவனம் செலுத்துவர். //நல்ல மெய்ப்புச் செய்யும் அனுபவமும்// இது எனக்குப் புலப்படவில்லை. கொஞ்சம் விளக்கிக் கூறுங்கள் கற்றுக் கொள்கின்றேன். நன்றி.--Neyakkoo (பேச்சு) 18:49, 13 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

@Neyakkoo: //எனது பங்களிப்பு சென்ற போட்டியின்போதுதான் என்பதைத் தாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வது நன்றாக இருக்கும்// சென்ற போட்டிக்கும் தற்பொழுதைய போட்டிக்கும் எத்தனை மாத இடைவெளி என்பதும் அந்த இடைக்காலத்தில் தங்களது பங்களிப்பு எவ்வளவு என்பதும் தங்களுக்கு தெரிந்ததே. //என் போன்ற தமிழ்ப் பேராசிரியர்கள் தமிழ்ப் பணிக்காக நேரம் கிடைக்கும் பொழுது பங்களிப்புச் செய்து வருகிறோம் என்பதையும் தாங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் எனக் கருதுகின்றேன்.// எல்லோரும் இங்கு தன்னார்வமாக நேரம் கிடைக்கும் பொழுதே பங்களிப்பு செய்கின்றனர். யாரும் வேறு வேலைகள் இல்லாமல் இங்கு மெய்ப்பு செய்யவில்லை. உங்களுக்கு இருக்கும் பணிச்சுமை போலவே தான் அனைவருக்கும் இருக்கும். //விக்கியில் எனது பங்களிப்பு என்பது நான் மட்டுமே செய்வதாக இருக்கக் கூடாது என்பது என் கருத்து.// நடுவராக இருப்பவர் மற்றவர் பங்களிப்பு சரிபார்த்து மதிப்பெண் தரவேண்டும். அதற்கு நடுவருக்கு மெய்ப்பு செய்வது பற்றி அனுபவம் வேண்டும். இப்போட்டியில் நடுவர் என்பது கௌரவ பதவி கிடையாது. //இது தமிழ் மொழிக்கான மேம்பாட்டுப் பணியைத் தடை செய்யும் தன்மையாகக் கருதுகின்றேன்.// எப்படி தடையாக அமையும்? பல விதமாக பக்கங்களை மெய்ப்பு செய்வதால் மெய்ப்பு அனுபவம் கிடைக்கும். //அது தவறு என்றால் தாங்கள் ஒருங்கிணைப்பாளர்தானே நடுவர் பக்கத்தில் விதியை எழுதி விடுங்கள். அதில் என் போன்ற கற்றல் எண்ணமுடையோர் ஒப்பம் இடுவதில் கவனம் செலுத்துவர்.// இப்பொழுது விதிகளைக் கேட்கும் தாங்கள் ஏன் நடுவராக ஒப்பமிடுவதற்கு முன்பு இக்கேள்விகளை கேட்கவில்லை. கேட்டுவிட்டு கையொப்பம் இடுவதில் தவறில்லை. இது போன்ற போட்டிகள் எல்லாம் தன்னார்வளர்களால் செய்யப்படுகிறது. யாரும் சம்பளத்திற்கு நிறுவனத்தில் வேலை செய்வது போல் செய்வதில்லை. அதனால் சில பல நிறை குறைகள் இருக்கும். ஆனால் பல விதமான விக்கி நிகழ்வுகளில், செயல்பாடுகளில் பங்கு கொண்டிருந்தால் தங்களுக்கு தானாவே இது புலப்பட்டிருக்கும். இதுவே தங்களின் அனுபவமின்மையை எடுத்துக்கூறுகிறது. -- Balajijagadesh (பேச்சு) 04:26, 14 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

ஒருங்கிணைப்பாளர், நடுவர்கள் பணிகளின் விவரம் அறியத் தருக[தொகு]

ஒருங்கிணைப்பாளர், நடுவர்கள் பணிகளின் வேறுபாடுகளை அறியத் தருக--தகவலுழவன் (பேச்சு). 15:01, 13 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

தமிழ்[தொகு]

தமிழைப் பிழையற இணையத்தோடு இணைத்து எதிர் காலத்தில் மொழியையும் பண்பாட்டையும் காக்க முயற்சி செய்ய விரும்புகிறேன். லதா மகேஸ்வரி .ஜெ (பேச்சு) 17:47, 14 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

லதா மகேஸ்வரி .ஜெ லதா மகேஸ்வரி .ஜெ (பேச்சு) 17:49, 14 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

நடுவர்கள் பகுதியில் கையொப்பமிட்டு நீக்கபட்டவர்கள் குறித்து[தொகு]

விக்கிப்பீடியர்களுக்கு வணக்கம். இந்திய அளவிலான மெய்ப்பு பார்க்கும் போட்டி சிறந்த முறையில் இன்று தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நடுவர்களாக கலந்து கொள்ள விருப்பப்பட்ட சில விக்கிப்பீடியர்கள் இட்ட கையொப்பங்கள் நீக்கப்பட்டதாக அறிந்தேன். விக்கிப் பற்றிய பயிற்சியினை பெரும் போது விக்கி என்பது பொதுவான ஒரு தளம். ஒரு தொகுப்பு செய்தவரும் 10,0000 தொகுப்பு செய்தவர்களும் ஒன்றென மதிக்கப்பெறுவார்கள் என பயிற்றுநர் குறிப்பிட்டு இருந்தார்கள். அவ்வாறு இருக்க விக்கி எனும் பொதுத் தளத்தில் விருப்பப்பட்ட நல்ல பயிற்சியுள்ள தன்னார்வலர்களின் கையொப்பங்கள் நீக்கப்பட்டு இருப்பது என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அவர்கள் ஏன் நீக்கப்பட்டார்கள் என்பதை அறியத்தாருங்கள். அடுத்த போட்டிகளில் இதுப் பற்றி தெரிந்தால் இலகுவாக இருக்கும். நன்றி -Aarlin Raj A (பேச்சு) 09:06, 15 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

வணக்கம் ஆர்லின். தங்கள் கேள்விக்கு நன்றி. பார்ப்பதையும் கேட்பைதையும் நம்பாமல் தீர வேண்டும் என்று வள்ளுவன் கருத்துக்கேட்ப கேள்வி கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது. //இந்நிலையில் நடுவர்களாக கலந்து கொள்ள விருப்பப்பட்ட சில விக்கிப்பீடியர்கள் இட்ட கையொப்பங்கள் நீக்கப்பட்டதாக அறிந்தேன்.// நடுவர்கள் என்று திட்டப்பக்கத்தில் இருக்கும் இடத்தில் கையெத்து தேவையில்லை. யார் நடுவர் என்று பெயர் குறிப்பிட்டால் போதும். யார் நடுவர் என்று ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்து, நடுவராக இருக்க அந்த நபருக்கு சம்பந்தமா என்று கேட்டு நடுவர் பெயரை இட்டுவிடுவர். இதுவே பல போட்டி நிகழ்வுகளில் நடக்கிறது. அந்த இடத்தில் நானும் கையெழுத்து இடவில்லை. பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் தவறாக அந்த பகுதியில் கையெழுத்து இட்டுள்ளனர். மேலும் போட்டியை ஒருங்கிணைப்பவர் போட்டியை எப்படி எடுத்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்ய முடியும். நடுவர்கள் தகுதியான அனுபவம் வாய்ந்த நபர்களாக இருந்தால்தான் போட்டி நன்றாக அமையும். கையெழுத்து இடத்தேவையில்லாத இடத்தில் இட்டதால் நீக்கப்பட்டது. அவர் கருத்து தெரிவித்து கையெழுத்து இட்ட இடங்கள் எங்கும் நீக்கப்படவில்லை. //விக்கிப் பற்றிய பயிற்சியினை பெரும் போது விக்கி என்பது பொதுவான ஒரு தளம். ஒரு தொகுப்பு செய்தவரும் 10,0000 தொகுப்பு செய்தவர்களும் ஒன்றென மதிக்கப்பெறுவார்கள் என பயிற்றுநர் குறிப்பிட்டு இருந்தார்கள்// விக்கியின் தகவல் பக்கத்தினை தொகுப்பதற்கே அந்த விதி. அதிலும் ஆக்கபூர்வமான தொகுப்புகளைச் செய்யாமல் ஊறு செய்தால் கணக்கு தடுக்கப்படும். இவ்விதி பல விதமான நிகழ்வுகளுக்கு பொருந்தாது. மேலும் பல விதமான பணிகளுக்குக் சில பயனர்களுக்கு கூடுதல் உரிமைகளும் வழங்கப்படுகிறது. தங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். மேலும் கேள்வில் இருந்தால் கேட்கலாம். -- Balajijagadesh (பேச்சு) 10:02, 20 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
@Aarlin Raj A: !
  • //விக்கிப்பீடியர்களுக்கு வணக்கம். // 'விக்கிப்பீடியர்' என்று விளிப்பது பொருத்தமன்று. விக்கிப்பீடியர் என்றால் விக்கிப்பீடியா என்ற கட்டுரைப் பகுதியில் மட்டும் செயற்படுவர். நீங்கள் விக்கிமீடிய அறக்கட்டளையின் பல திட்டங்களில் செயற்படுவதை, இந்த இணைப்பில் கண்டேன். நீங்களும் தமிழ் விக்கிமீடியர்களில் ஒருவரே. இதுபோல, உரிய இணைப்போடு கருத்தினை முன்வையுங்கள். பிறருக்கும் தெரியப்படுத்த ஏதுவாக இருக்கும்.
  • ஒட்டுமொத்த சமூக ஒப்புதல் இன்றி, இங்கு விதிகளாகக் கூறப்பட்டால், 'இதற்கான சமூக ஒப்புதல் எங்குள்ளது?' என்றே வினவவே வேண்டும். இது குறித்து பின்னர் தொடர்ந்து உரையாடுவோம். இப்பொழுது, இந்திய அளவில் நம்மொழி என்றும் முன்னணியில் இருக்க திட்டமிடுவோம். ஒருசில நாட்கள் மட்டும் செயற்படுவதால், அந்த இலக்கினை நம் மொழி அடையாது. பலரின் தொடர்ந்த முயற்சியும், ஒத்துழைப்புகளும், அறிவு பகிர்வும் தேவையென்பதே எனது வேண்டுகோள். --தகவலுழவன் (பேச்சு). 02:39, 21 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]