விக்கிமூலம் பேச்சு:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

"சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்" - "க. அயோத்திதாஸப் பண்டிதர் நூல்கள்" சரிபார்ப்பு முன்னோட்டம்[தொகு]

மேற்சுட்டிய பகுப்பில் உள்ள நூல்களில் கீழ்க்காணும் 4 நூல்களின் மூலப்படிகளைச் சரிபார்த்து முழுமை செய்து தமிழ்ச்சமூக சிந்தனை மரபுக்கு நம்மால் ஆன சிறு பங்களிப்பை மேற்கொள்ள வேண்டியது நம் கடமை.

  1. . க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1.
  2. . க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-2.
  3. . க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-4.
  4. . க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.

மூல நூலின் பக்கங்களைத் தேடுவதிலும் சரி செய்து பதிவேற்றம் செய்வதிலும் உழவனின் உதவியை எதிர்நோக்குகிறேன். --அருண்குமார் முனுசாமி (பேச்சு) 06:29, 6 மே 2019 (UTC)Reply[பதில் அளி]

திராவிட இயக்க முன்னோடியான அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 –மே 5, 1914) அவர்களின் எதிர்வரும் (175 ம் ஆண்டு) பிறந்த நாளின் பொழுது, அவரது சிந்தனைகளை மின்நூல் பரிமாணங்களில் வழங்கிட முயற்சி மேற்கொள்ளலாம்.--அருண்குமார் முனுசாமி (பேச்சு) 06:29, 6 மே 2019 (UTC)Reply[பதில் அளி]

அருண்! இம்மேம்பாட்டுப் பங்களிப்பில் நான் என்ன செய்ய வேண்டும். ? உங்களுடன் இணைய விரும்புகிறேன்.-- உழவன் (உரை) 15:10, 6 மே 2019 (UTC)Reply[பதில் அளி]
@TVA ARUN: புதிய கோப்பினைப், அனைத்து வரலாற்றுப் பங்கங்களோடும் பதிவேற்றியுள்ளேன். நீண்டநாள் முயற்சிகளுக்குப் பிறகு, உங்கள் வழிகாட்டுதலின் படி, இந்நூல் புத்துயிர் பெற்றதால் மிகவும் மகிழ்கிறேன். அடுத்தக்கட்ட பணி குறித்து கூறவும்.-- உழவன் (உரை) 04:12, 7 மே 2019 (UTC)Reply[பதில் அளி]

நன்றி[தொகு]

நாட்டுடைமை என்னும் சிறப்பின் அடிப்படையில் தமிழக அரசு, தமிழ் இணையக்கல்விக்கழகம், தமிழ் விக்கிச் சமூகத்தார் இணைந்து மூன்று ஆண்டுகளுக்கு (13:53, 12 ஏப்ரல் 2016) முன் பதிவேற்றிய ஒரு நூலை இன்றுதான் (16:03, 6 மே 2019)நாம் சரிபார்க்க முனைகின்றோம். பரந்துபட்ட பயனர்களையும், பங்களிப்பாளர்களையும் உருவாக்க வேண்டிய தேவை நமக்கிருப்பதை இது உணர்த்துகிறது. (இத்திட்டத்தில் உள்ள அனைத்து நூல்களுக்கும் இது பொருந்தும்.) ஒன்றிணைந்து அடுத்த தலைமுறைக்கு அறிவுசார் சிந்தனைகளைக் கொண்டு சேர்ப்போம் வாருங்கள். நன்றி.--அருண்குமார் முனுசாமி (பேச்சு) 04:47, 7 மே 2019 (UTC)Reply[பதில் அளி]

பூலித்தேவர்[தொகு]

அட்டவணை பேச்சு:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf-- உழவன் (உரை) 07:56, 13 சூலை 2019 (UTC)Reply[பதில் அளி]

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு[தொகு]

அட்டவணை பேச்சு:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf-- உழவன் (உரை) 07:57, 13 சூலை 2019 (UTC)Reply[பதில் அளி]

பாரதிதாசன் தாலாட்டுகள்[தொகு]

அட்டவணை:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf என்ற சிறுநூலில் சில பக்கங்கள் விடுபட்டுள்ளன.-- உழவன் (உரை) 05:37, 15 சூலை 2019 (UTC)Reply[பதில் அளி]