1. நாமகள் இலம்பகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சீவகசிந்தாமணிக் காப்பியம்[தொகு]

1. நாமகள் இலம்பகம்[தொகு]

நாட்டுவளம்


நா வீற்று இருந்த

நா வீற்று இருந்த புல மா மகளோடு நன் பொன்
பூ வீற்று இருந்த திரு மா மகள் புல்ல நாளும்
பா வீற்று இருந்த கலை பார் அறச் சென்ற கேள்விக்
கோ வீற்று இருந்த குடி நாட்டு அணி கூறல் உற்றேன். (01)

காய் மாண்ட

காய் மாண்ட தெங்கின் பழம் வீழ கமுகின் எற்றிப்
பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து
தேமா கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டு ஏ.(02)

நாவீற்றிருந்த[தொகு]

01.நாவீற் றிருந்த புலமாமக ளோடு நன்பொற்
பூவீற் றிருந்த திருமாமகள் புல்ல நாளும்
பாவீற் றிருந்த கலைபாரறச் சென்ற கேள்விக்
கோவீற் றிருந்த குடிநாட்டணி கூற லுற்றேன். (01)

காய்மாண்ட[தொகு]

02. காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப்
பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து
தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங் கதமென் றிசையாற் றிசைபோய துண்டே.


03. இலங்கல் ஆழியின்

இலங்கல் ஆழியின் ஆன் களிற்று ஈட்டம் போல்
கலங்கு தெள் திரை மேய்ந்து கணம் மழை
பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி
விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே. (03)

இலங்கலாழி[தொகு]

03.இலங்க லாழியி னான்களிற் றீட்டம்போற்
கலங்கு தெண்டிரை மேய்ந்து கணமழை
பொலங்கொள் கொன்றையி னான்சடை போன்மின்னி
விலங்கல் சேர்ந்துவிண் ணேறிவிட் டார்த்தவே. (03)


தேனிரைத்[தொகு]

தேனி ரைத்துயர் மொய்வரைச் சென்னியின்
மேனி ரைத்து விசும்புற வெள்ளிவெண்
கோனி ரைத்தன போற்கொழுந் தாரைகள்
வானி ரைத்து மணந்து சொரிந்தவே. (04)

தேன் நிரைத்து உயர் மொய் வரை சென்னியின்
மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண்
கோல் நிரைத்தன போல் கொழும் தாரைகள்
வான் நிரைத்து மணந்து சொரிந்தவே. ௪

குழவிவெண்மதி[தொகு]

குழவி வெண்மதிக் கோடுழக் கீண்டுதேன்
முழவி னின்றதிர் மொய்வரைச் சென்னியின்
இழியும் வெள்ளரு வித்திரள் யாவையும்
குழுவின் மாடத் துகிற்கொடி போன்றவே. (05)

குழவி வெண் மதி கோடு உழ கீண்டு தேன்
முழவின் நின்று அதிர் மொய் வரை சென்னியின்
இழியும் வெள் அருவி திரள் யாவையும்
குழுவின் மாட துகில் கொடி போன்றவே. (௫)

இலங்குநீண்முடி[தொகு]

இலங்கு நீண்முடி யிந்திரன் மார்பின்மேல்
விலங்கி வீழ்ந்தமுத் தாரமும் போன்றவை
நலங்கொள் பொன்னொடு நன்மணி சிந்தலாற்
கலன்பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே. (06)

இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல்
விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவை
நலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால்
கலன் பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே. (௬)

வள்ளற்கைத்[தொகு]

வள்ளற் கைத்தல மாந்தரின் மால்வரைக்
கொள்ளை கொண்ட கொழுநிதிக் குப்பையை
உள்ள மில்லவர்க் கூர்தொறு முய்த்துராய்
வெள்ள நாடும டுத்துவி ரைந்ததே. (07)


மையல்யானை[தொகு]

மையல் யானையின் மும்மத மார்ந்துதேன்
ஐய பொன்னசும் பாடிய ளைந்துராய்ச்
செய்ய சந்தனந் தீம்பழ மாதியா
நைய வாரி நடந்தது நன்றரோ. (08)


வீடில்பட்டினம்[தொகு]

வீடில் பட்டினம் வௌவிய வேந்தெனக்
காடு கையரிக் கொண்டுக வர்ந்துபோய்
மோடு கொள்புனன் மூரிநெ டுங்கடல்
நாடு முற்றிய தோவென நண்ணிற்றே. (09)


(வேறு)

திரைபொரு[தொகு]

திரைபொரு கனைகடற் செல்வன் சென்னிமேல்
நுரையெனு மாலையை நுகரச் சூட்டுவான்
சரையெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக்
குரைபுனற் கன்னிகொண் டிழிந்த தென்பவே. (10)


பழங்கொடெங்[தொகு]

பழங்கொடெங் கிலையெனப் பரந்து பாய்புனல்
வழங்கமுன் னியற்றிய சுதைசெய் வாய்த்தலை
தழங்குரற் பம்பையிற் சாற்றி நாடெலாம்
முழங்குதீம் புனலக முரிய மொய்த்தவே. (11)


வெலற்கருங்[தொகு]

வெலற்கருங் குஞ்சரம் வேட்டம் பட்டெனத்
தலைத்தலை யவர்கதந் தவிர்ப்பத் தாழ்ந்துபோய்க்
குலத்தலை மகளிர்தங் கற்பிற் கோட்டகம்
நிலைப்படா நிறைந்தன பிறவு மென்பவே. (12)


கவ்வையுங்[தொகு]

கவ்வையுங் கடும்புன லொலியுங் காப்பவர்
செவ்வனூ றாயிரஞ் சிலைக்கும் பம்பையும்
எவ்வெலாத் திசைகளு மீண்டிக் காரொடு
பவ்வநின் றியம்புவ தொத்த வென்பவே. (13)


மாமனு[தொகு]

மாமனு மருகனும் போலு மன்பின
காமனுஞ் சாமனுங் கலந்த காட்சிய
பூமனு மரிசிப்புல் லார்ந்ந மோட்டின
தாமின மமைந்துதந் தொழிலின் மிக்கவே. (14)


நெறிமருப்[தொகு]

நெறிமருப் பெருமையி னொருத்த னீளினம்
செறிமருப் பேற்றினஞ் சிலம்பப் பண்ணுறீஇப்
பொறிவரி வராலின மிரியப் புக்குடன்
வெறிகமழ் கழனியு ளுழுநர் வெள்ளமே. (15)


சேறமை[தொகு]

சேறமை செறுவினுட் செந்நெல் வான்முளை
வீறொடு விளைகெனத் தொழுது வித்துவார்
நாறிது பதமெனப் பறித்து நாட்செய்வார்
கூறிய கடைசியர் குழாங்கொண் டேகுவார். (16)


முலைத்தடஞ்[தொகு]

முலைத்தடஞ் சேதகம் பொறிப்ப மற்றவர்
குலைத்துடன் கதித்தலிற் குதித்த வாட்கயல்
புலத்திடைக் கவரிகன் றூட்டப் போந்தபால்
நிலத்திடைப் பாய்ந்தவை பிறழு நீரவே. (17)


பாற்சுவை[தொகு]

பாற்சுவை யறிந்தவை பழனத் தாமரை
மேற்செலப் பாய்தலின் வெரீஇய வண்டினம்
கோற்றொடி நுளைச்சியர் முத்தங் கோப்பவர்
ஏற்றிய மாலைத்தே னிரியப் பாய்ந்தவே. (18)


இரிந்ததேன்[தொகு]

இரிந்ததேன் குவளையி னெற்றி தைவர
முரிந்துபோ தவிழ்ந்துகொங் குயிர்க்கு முல்லையின்
அரும்புசேர்ந் தணிஞிமி றார்ப்ப வாய்பதம்
விருந்தெதிர் கொண்மெனத் தழுவி வீழ்ந்தவே. (19)


வளமுடி[தொகு]

வளமுடி நடுபவர் வரம்பில் கம்பலை
இளமழை முழக்கென மஞ்ஞை யேங்கலின்
அளமரு குயிலின மழுங்கிப் பூம்பொழில்
உளமெலி மகளிரி னொடுங்கு மென்பவே. (20)


வளைக்கையாற்[தொகு]

வளைக்கையாற் கடைசியர் மட்டு வாக்கலிற்
றிளைத்தவர் பருகிய தேற றேங்குழிக்
களிப்பவுண் டிளவனங் கன்னி நாரையைத்
திளைத்தலிற் பெடைமயி றெருட்டுஞ் செம்மற்றே. (21)


கண்ணெனக்[தொகு]

கண்ணெனக் குவளையுங் கட்ட லோம்பினார்
வண்ணவாண் முகமென மரையி னுள்புகார்
பண்ணெழுத் தியல்படப் பரப்பி யிட்டனர்
தண்வய லுழவர்தந் தன்மை யின்னதே. (22)

நித்திலப்[தொகு]

நித்திலப் பந்துட னீன்ற பாதிரி
ஒத்தபூ வுடற்றிய நாவி னாகினாற்
றத்துநீர் நாரைமே லெறியத் தண்கடற்
பைத்தெழு திரையெனப் பறவை யாலுமே. (23)


சொல்லருஞ்[தொகு]

சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம்போல்
மெல்லவே கருவிரு தீன்று மேலலார்
செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற்
கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே. (24)


மீன்கணி[தொகு]

மீன்கணி னளவும்வெற் றிடங்க ளின்மையாற்
றேன்கணக் கரும்பியல் காடுஞ் செந்நெலின்
வான்புகழ் களிறுமாய் கழனி யாக்கமும்
ஊன்கணார்க் குரைப்பரி தொல்லென் சும்மைத்தே. (25)
பார்க்க[தொகு]

சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100
1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150
2. கோவிந்தையார் இலம்பகம்
3. காந்தருவதத்தையார் இலம்பகம்
4. குணமாலையார் இலம்பகம்
5. பதுமையார் இலம்பகம்
6. கேமசரியார் இலம்பகம்
7. கனகமாலையார் இலம்பகம்
8. விமலையார் இலம்பகம்
9. சுரமஞ்சரியார் இலம்பகம்
10. மண்மகள் இலம்பகம்
11. பூமகள் இலம்பகம்
12. இலக்கணையார் இலம்பகம்
13. முத்தியிலம்பகம்.

[[]] [[]] [[]] [[]] [[]] [[]]

"https://ta.wikisource.org/w/index.php?title=1._நாமகள்_இலம்பகம்&oldid=957185" இருந்து மீள்விக்கப்பட்டது