1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125

விக்கிமூலம் இலிருந்து

சீவகசிந்தாமணிக் காப்பியம்[தொகு]

1. நாமகள் இலம்பகம்[தொகு]

நாட்டுவளம்

கருனை[தொகு]

கருனை வாசமுங் காரிருங் கூந்தலா
ரருமை சான்ற வகிற்புகை வாசமுஞ்
செருமிச் சேந்துகண் ணீர்வரத் தேம்பொழில்
லுரிமை கொண்டன வொண்புற வென்பவே. (101) ( )

நறையு[தொகு]

நறையு நானமு நாறு நறும்புகை
விறகின் வெள்ளி யடுப்பினம் பொற்கலம்
நிறைய வாக்கிய நெய்பயி லின்னமு
துறையு மாந்தர் விருந்தொடு முண்பவே. (102) ( )

(பாளை)[தொகு]

பாளை மென்கமு கின்பழ மெல்லிலை
நீள்வெண் மாடத்து நின்றுகொண் டந்நலா
ராளிய மொய்ம்பர்க் களித்தணை சண்பகம்
நாள்செய் மாலை நகைமுடிப் பெய்பவே. (103) ( )

எழுது[தொகு]

எழுது வாணெடுங் கண்ணிணை யந்நலார்
மெழுகு குங்கும மார்பிடை வெம்முலை
யுழுது கோதையுஞ் சாந்து முவந்தவை
முழுதும் வித்தி விளைப்பர் திளைப்பவே. (104) ( )

குஞ்சி[தொகு]

குஞ்சி மேலணிச் சம்மலர் கூட்டுணு
மஞ்சி லோதிய ரம்மலர்ச் சீறடி
மஞ்சு தோய்மணி மாடத்து மல்குபூம்
பஞ்சி மேலும் பனிக்கும் பனிக்குமே. (105) ( )

தூமமேக[தொகு]

தூம மேகம ழுந்துகிற் சேக்கைமேற்
காம மேநுகர் வார்தம காதலால்
யாம மும்பக லும்மறி யாமையாற்
பூமி மாநகர் பொன்னுல கொத்ததே. (106) ( )


அரவு[தொகு]

அரவு கான்றிட்ட வங்கதிர் மாமணி
யுரவு நீர்முத்து முள்ளுறுத் துள்ளன
விரவன் மாந்தர்க்கு மின்னவை யீவதோர்
புரவு பூண்டனர் பொன்னகர் மாந்தரே. (107) ( )


முல்லையங்[தொகு]

முல்லை யங்குழ லார்முலைச் செல்வமும்
மல்லன் மாநகர்ச் செல்வமும் வார்கழற்
செல்வர் செல்வமுங் காணிய வென்பர்போல்
லெல்லி யும்மிமை யாரிமை யாததே. (108) ( )

முழுவுஞ்[தொகு]

முழவுஞ் சங்கமு முன்றின் முழங்குவ
விழவும் வேள்வும் விடுத்தலொன் றின்மையாற்
புகழ லாம்படித் தன்றிது பொன்னகர்
ரகழ்தன் மாக்கட லன்னதொர் சும்மைத்தே. (109) ( )

திங்கண்[தொகு]

திங்கண் முக்குடை யான்றிரு மாநக திங்கள் முக்குடையான் திரு மா நகர்
ரெங்கு மெங்கு மிடந்தொறு முண்மையா எங்கும் எங்கும் இடம் தோறு உண்மையால்
லங்கண் மாநகர்க் காக்க மறாததோர் அம் கண் மா நகர்க்கு ஆக்கம் அறாதது ஓர்
சங்க நீணிதி யாற்றழைக் கின்றதே. (110) சங்க நீள் நிதியால் தழைக்கின்றது ஏ. (110)


(வேறு)

தேன்றலைத்[தொகு]

தேன்றலைத் துவலை மாலை பைந்துகிற் செம்பொன் பூத்து தேன் தலைத் துவலை மாலை பைந் துகில் செம் பொன் பூத்து
ஞான்றன வயிர மாலை நகுகதிர் முத்த மாலை ஞான்றன வயிர மாலை நகு கதிர் முத்தம் மாலை
கான்றமிர் தேந்தி நின்ற கற்பகச் சோலை யார்க்கு கான்று அமிர்து ஏந்தி நின்ற கற்பகம் சோலையார்க்கும்
மீன்றருள் சுரந்த செல்வத் திராசமா புரம தாமே. (111) ஈன்று அருள் சுரந்த செல்வத்து இராசமாபுரம் அது ஆமே. (112) ( )


கோயிற் சிறப்பு

(வேறு)


வேகயானை[தொகு]

வேக யானை மீளிவேல் வெய்ய தானை யையகோன் வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோன்
மாக நீண்ம ணிம்முடி மாரி வண்கை மாசில்சீ மாக நீள் மணிம் முடி மாரி வண் கை மாசு இல் சீர்
ரேக வாணை வெண்குடை யிந்ந கர்க்கு மன்னவன் ஏக ஆணை வெண் குடை இந் நகர்க்கு மன்னவன்
நாக நீர நன்னகர் நன்மை தன்னஞ் செப்புவாம். (112) நாக நீர நல் நகர் நன்மை தன்னம் செப்புவாம் (112 )

(நீணிலம்)[தொகு]

நீணி லம்வ குத்துநீர் நிரந்துவந் திழிதரச் நீள் நிலம் வகுத்து நீர் நிரந்து வந்து இழிதரச்
சேணிலத் தியற்றிய சித்திரச் சுருங்கைசேர் சேண் நிலத்து இயற்றிய சித்திரச் சுருங்கை சேர்
கோணிலத்து வெய்யவாங் கொடுஞ்சுறத் தடங்கி டங்கு கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுறத் தடம் கிடங்கு
பூணிலத்து வைத்ததோர் பொற்பினிற் பொலிந்ததே. (113) பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே. (113 )

(இஞ்சி)[தொகு]

இஞ்சி மாக நெஞ்சுபோழ்ந் தெல்லை காண வேகலின் இஞ்சி மாக நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின்
மஞ்சு சூழ்ந்து கொண்டணிந்து மாக நீண்ட நாகமு மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாகம் நீண்ட நாகமும்
மஞ்சு நின்னை யென்றலி னாண்டு நின்று நீண்டதன் அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன்
குஞ்சி மாண்கொ டிக்கையாற் கூவி விட்ட தொத்ததே. (114) குஞ்சி மாண் கொடிக் கையால் கூவி விட்டது ஒக்கும் ஏ. (114 )

முத்துமாலை[தொகு]

முத்து மாலை முப்புரி மாலை மூரி மாம ணிக்கத முத்து மாலை முப்புரி மாலை மூரி மா மணிக் கதவு
வொத்த நான்கு கோபுர மோங்கி நின்றொ ளிர்வன ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன
சத்தி நெற்றி சூட்டிய தாம நீண்ம ணிவணன் சத்தி நெற்றி சூட்டிய தாமம் நீள் மணி வணன்
தத்தொளி மணிம்முடித் தாம நால்வ போலுமே. (115) தத்து ஒளி மணி முடித் தாம நால்வ போலும் ஏ. ( )

(சங்குவிம்மு)[தொகு]

சங்கு விம்மு நித்திலஞ் சாந்தொ டேந்து பூண்முலைக் சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலைக்
கொங்கு விம்மு கோதைதாழ் கூந்த லேந்து சாயலா கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்து சாயலார்
ரிங்கி தக்க ளிப்பினா லெய்தி யாடும் பூம்பொழிற்இங்கிதக் களிப்பினால் எய்தி ஆடும் பூம் பொழில்
செங்க ணிந்தி ரன்னகர்ச் செல்வ மென்ன தன்னதே. (116) செம் கண் இந்திரன் நகர்ச் செல்வம் என்னது அன்னது ஏ. (116 )

(வெள்ளி)[தொகு]

வெள்ளி யானை மென்பிடி மின்னி லங்கு பைம்பொனாற்
றுள்ளு மானொ ருத்தலுஞ் செம்பொ னம்பொன் மாண்பிணை
யுள்ளு காம முட்சுட வேந்த னாங்கு றைவதோர்
பள்ளி மாட மண்டபம் பசுங்க திர்ப்ப வண்ணமே. (117) ( )

(கோழரை)[தொகு]

கோழ ரைம ணிம்மடற் கூந்த னெற்றி யேந்திய
மாழை யந்தி ரள்கனி மாம ணிம ரகதஞ்
சூழ்கு லைப்ப சுங்கமுகு சூலு பாளை வெண்பொனா
லூழ் திரண்ம ணிக்கயி றூச லாட விட்டதே. (118) ( )


(மென்றினைப்)[தொகு]

மென்றி னைப்பி றங்கலு மிளிர்ந்து வீழ ருவியுங்
குன்ற யன்ம ணிச்சுனைக் குவளை கண்வி ழிப்பவுந்
நின்று நோக்கு மான்பிணை நீல யானை மன்னவன்
கன்று காம வெஃகிய காமர் காம பூமியே. (119) ( )


(தீங்குயின்)[தொகு]

தீங்கு யின்ம ணந்துதேன் றுஞ்ச வண்டு பாண்செய
வேங்கை நின்று பொன்னுகுக்கும் வெற்பு டுத்த சந்தன
மோங்கு பிண்டி சண்பக மூழி நாறு நாகமு
நீங்க நீங்கு மின்னுயிர் நினைப்பி னின்றி ளஃகுமே. (120) ( )

(முத்தம்)[தொகு]

முத்தம் வாய்பு ரித்தன மொய்க திர்ப்ப சும்பொனாற்
சித்திரத் தியற்றிய செல்வ மல்கு பன்மணி
பத்தி யிற்கு யிற்றிவான் பதித்து வைத்த போல்வன
வித்தி றத்த பந்தெறிந் திளைய ராடு பூமியே. (121) ( )

(வைத்தபந்)[தொகு]

வைத்த பந்தெ டுத்தலும் மாலை யுட்க ரத்தலும்
கைத்த லத்தி னோட்டலுங் கண்ணி நெற்றி தீட்டலும்
பத்தி யிற்பு டைத்தலும் பைய ரவ்வி னாடலு
மித்தி றத்த பந்தினோ டின்ப மெல்லை யில்லையே. (122) ( )

(கூற்றமன்ன)[தொகு]

கூற்ற மன்ன கூர்நுதிக் குருதி வான்ம ருப்பிடைச்
சீற்ற முற்ற மன்னர்தஞ் சென்னி பந்த டிப்பன
வூற்றி ருந்த மும்மதத் தோடை யானை பீடுசால்
காற்றி யற்பு ரவிதேர் கலந்து கௌவை மல்கின்றே. (123) ( )

(கவ்வை)[தொகு]

கவ்வை யங்க ருவிசூழ்ந்து கண்ப டுக்கு மாடமுந்
தெவ்வர் தந்த நீணிதி சேர்ந்த செம்பொன் மாடமும்
மவ்வ லங்கு ழலினார் மணிக்க லம்பெய் மாடமு
மிவ்வ லத்த வல்லவும் மிடங்க ளெல்லை யில்லையே. (124) ( )


(பூத்த)[தொகு]

பூத்த கோங்கும் வேங்கையும் பொன்னிணர் செய்கொன் றையும்
காய்த்து நின்று கண்டொறூஉங் காமர் வல்லி மாதரார்
கூத்த றாத பள்ளியுங் கொற்ற மன்ன மங்கைய
ரேத்தல் சான்ற கோயிலு மிடைப்ப டுத்தி யன்றவே. (125) ( )

பார்க்க[தொகு]

சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100
1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150
2. கோவிந்தையார் இலம்பகம்
3. காந்தருவதத்தையார் இலம்பகம்
4. குணமாலையார் இலம்பகம்
5. பதுமையார் இலம்பகம்
6. கேமசரியார் இலம்பகம்
7. கனகமாலையார் இலம்பகம்
8. விமலையார் இலம்பகம்
9. சுரமஞ்சரியார் இலம்பகம்
10. மண்மகள் இலம்பகம்
11. பூமகள் இலம்பகம்
12. இலக்கணையார் இலம்பகம்
13. முத்தியிலம்பகம்.