2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50
Appearance
சீவக சிந்தாமணி
[தொகு]2. கோவிந்தையார் இலம்பகம்
[தொகு](காலகம்)
[தொகு]- காலகம் புடைப்ப முந்நீர்க் கடல்கிளர்ந் தெழுந்த தேபோல்
- வேலகம் மிடைந்த தானை வெஞ்சின வெயினர் தாக்க
- வால்வளை யலற வாய்விட் டிரலையுந் துடியு மார்ப்பப்
- பால்வளைந் திரவு செற்றுப் பகலொடு மலைவ தொத்தார். (26) | ( )
(விற்பழுத்)
[தொகு]- விற்பழுத் துமிழ்ந்த வெய்ய வெந்நுனைப் பகழி மைந்தர்
- மற்பழுத் தகன்ற மார்பத் திடங்கொண்டு வைகச் செந்நாச்
- சொற்பழுத் தவர்க்கு மாண்மை சொல்லலாந் தன்மைத் தன்றிக்
- கொற்பழுத் தெரியும் வேலார் கொடுஞ்சிலை குழைவித் தாரே. (27) ( )
(வாட்படை)
[தொகு]- வாட்படை யனுங்க வேடர் வண்சிலை வளைய வாங்கிக்
- கோட்புலி யினத்தின் மொய்த்தார் கொதிநுனைப் பகழி தம்மால்
- வீட்டினார் மைந்தர் தம்மை விளிந்தமா கவிழ்ந்த திண்டேர்
- பாட்டரும் பகடு வீழ்ந்த பனிவரை குனிவ தொத்தே. (28) | ( )
(வென்றிநாங்)
[தொகு]- வென்றிநாங் கோடு மின்னே வெள்ளிடைப் படுத்தென் றெண்ணி
- யொன்றியுள் வாங்கு கென்ன வொலிகட லுடைந்த தேபோற்
- பொன்றவிழ் களிறு பாய்மா புனைமயிற் குஞ்சி பிச்சம்
- மின்றவிழ் கொடியொ டிட்டு வேற்படை யுடைந்த வன்றே. (29) | ( )
(பல்லினாற்)
[தொகு]- பல்லினாற் சுகிர்ந்த நாரிற் பனிமலர் பயிலப் பெய்த
- முல்லையங் கண்ணி சிந்தக் கால்விசை முறுக்கி யாய
- ரொல்லென வொலிப்ப வோடிப் படையுடைந் திட்ட தென்ன
- வல்லலுற றழுங்கி நெஞ்சிற் கட்டியங் கார னாழ்ந்தான். (30) | ( )
(வம்புகொண்)
[தொகு]- வம்புகொண் டிருந்த மாதர் வனமுலை மாலைத் தேன்சோர்
- கொம்புகொண் டன்ன நல்லார் கொழுங்கயற் றடங்கண் போலு
- மம்புகொண் டரசர் மீண்டா ராக்கொண்டு மறவர் போனார்
- செம்புகொண் டன்ன விஞ்சித் திருநகர்ச் செல்வ னென்றார். (31) | ( )
(மன்னிரை)
[தொகு]- மன்னிரை பெயர்த்து மைந்தர் வந்தனர் கொள்க வாட்கட்
- பொன்னிழை சுடரு மேனிப் பூங்கொடி யனைய பொற்பிற்
- கன்னியைத் தருது மென்று கடிமுர சியம்பக் கொட்டி
- நன்னகர் வீதி தோறு நந்தகோ னைறவித் தானே. (32) | ( )
(வெதிர்ங்குதை)
[தொகு]- வெதிர்ங்குதைச் சாபங் கான்ற வெந்நுனைப் பகழி மூழ்க
- வுதிர்ந்தது சேனை யீட்டங் கூற்றொடு பொருது கொள்ளுங்
- கருந்தடங் கண்ணி யன்றிக் காயமா றாக வேகு
- மரும்பெற லவளு மாகென் றாடவர் தொழுது விட்டார். (33) | ( )
(கார்விரிமின்)
[தொகு]- கார்விரி மின்னன னார்மேற் காமுகர் நெஞ்சி னோடுந்
- தேர்பரி கடாவித் தேந்தார்ச் சீவக னருளிற் போகித்
- தார்பொலி புரவி வட்டந் தான்புகக் காட்டு கின்றாற்
- கூர்பரி வுற்ற தெல்லா மொருமக னுணர்த்தி னானே. (34) |
- (வேறு )
(தன்பான்மனை)
[தொகு]- தன்பான் மனையா ளயலான்றலைக் கண்டு பின்னு
- மின்பா லடிசிற் கிவர்கின்ற கைப்பேடி போலா
- நன்பால் பசுவேதுறந் தார்பெண்டிர் பாலர் பார்ப்பா
- ரென்பாரை யோம்பே னெனின்யா னவனாக வென்றான். (35) | ( )
(போர்ப்பண்)
[தொகு]- போர்ப்பண் ணமைத்து நுகம்பூட்டிப் புரவி பண்ணித்
- தேர்ப்பண் ணமைத்துச் சிலைகோலிப் பகழி யாய்ந்து
- கார்க்கொண்மு மின்னி னிமிர்ந்தான் கலிமான்கு ளம்பிற்
- பார்க்கண் ணெழுந்த துகளாற்பகன் மாய்ந்த தன்றே. (36) | ( )
(இழுதொன்று)
[தொகு]- இழுதொன்று வாட்க ணிளையாரிளை யார்க ணோக்கிற்
- பழுதின்றி மூழ்கும் பகழித்தொழில் வல்ல காளை
- முழுதொன்று திண்டேர் முகஞ்செய்தவன் றன்னோ டேற்கும்
- பொழுதன்று போதுமெனப் புண்மொழிந்தான் மொழிந்தான். (37) | ( )
(மோட்டும்)
[தொகு]- மோட்டும் முதுநீர் முதலைக்கு வலிய துண்டேற்
- காட்டு ணமக்கு வலியாரையுங் காண்டு நாமென்
- றேட்டைப் பசியி னிரைகவ்விய நாக மேபோல்
- வேட்டந் நிரையை விடலின்றி விரைந்த தன்றே. (38) |
- (வேறு )
(கடற்படை)
[தொகு]- கடற்படை யனுங்க வென்று கானவ ரென்னுங் கூற்றத்
- திடைப்படா தோடிப் போமி னுய்யவென் றிரலை வாய்வைத்
- தெடுத்தனர் விளியுஞ் சங்கும்வீ ளையும் பறையுங் கோடுங்
- கடத்திடை முழங்கக் காருங் கடலுமொத் தெழுந்த வன்றே. (39) | ( )
(கைவிசை)
[தொகு]- கைவிசை முறுக்கி வீசுங் கொள்ளியுங் கறங்கு மேய்ப்பச்
- செய்கழற் குருசி றிண்டேர் விசையொடு திசைக ளெல்லா
- மையென வளைப்ப வீர ரார்த்தன ரவரு மார்த்தார்
- மொய்யமர் நாட்செய் தையன் முதல்விளை யாடி னானே. (40) | ( )
(ஆழியா)
[தொகு]- ஆழியா னூர்திப் புள்ளி னஞ்சிற கொலியி னாகம்
- மாழ்கிப்பை யவிந்த வண்ணம் வள்ளறேர் முழக்கி னானுஞ்
- சூழ்துகண் மயக்கத் தானும் புளிஞ ருட்சுருங்கிச் சேக்கைக்
- கோழிபோற் குறைந்து நெஞ்சி னறமென மறமும் விட்டார். (41) ( )
(புள்ளொன்றே)
[தொகு]- புள்ளொன்றே சொல்லு மென்றிப் புன்றலை வேடன் பொய்தான்
- வெள்ளந்தேர் வளைந்த நம்மை வென்றியீங் கரிது வெய்தா
- வுள்ளம்போற் போது நாமோ ரெடுப்பெடுத் துய்ய வென்னா
- வள்ளன்மே லப்பு மாரி யார்ப்பொடு சிதறி னாரே. (42) | ( )
(மால்வரைத்)
[தொகு]- மால்வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னைக்
- காலிரைத் தெழுந்து பாறக் கல்லெனப் புடைத்த தேபோன்
- மேனிரைத் தெழுந்த வேடர் வெந்நுனை யப்பு மாரி
- கோனிரைத் துமிழும் வில்லாற் கோமகன் விலக்கி னானே. (43) | ( )
(கானவரிரிய)
[தொகு]- கானவ ரிரிய வில்வாய்க் கடுங்கணை தொடுத்த லோடு
- மானிரை பெயர்ந்த வாய ரார்த்தன ரணிசெய் திண்டோள்
- தானொன்று முடங்கிற் றொன்று நிமிர்ந்தது சரம்பெய் மாரி
- போனின்ற வென்ப மற்றப் பொருவரு சினையி னார்க்கே. (44) |
- (வேறு )
(ஐந்நூறு)
[தொகு]- ஐந்நூறு நூறு தலையிட்ட வாறா யிரவர்
- மெய்ந்நூறு நூறு நுதிவெங் கணைதூவி வேடர்
- கைந்நூறு வில்லுங் கணையும் மறுத்தான் கணத்தின்
- மைந்நூறு வேற்கண் மடவார் மனம்போல மாய்ந்தார். (45) | ( )
(வாள்வாயு)
[தொகு]- வாள்வாயு மின்றி வடிவெங்கணை வாயு மின்றிக்
- கொள்வாய் மதிய நெடியான் விடுத் தாங்கு மைந்தன்
- றோள்வாய் சிலையி னொலியாற் றொறுமீட்டு மீள்வான்
- நாள்வாய் நிறைந்த நகைவெண்மதி செல்வ தொத்தான். (46) | ( )
(ஆளற்ற)
[தொகு]- ஆளற்ற மின்றி யலர்தாரவன் றோழ ரோடுங்
- கோளுற்ற கோவ னிரைமீட்டன னென்று கூற
- வாளுற்ற புண்ணுள் வடிவேலெறிந் திற்ற தேபோல்
- நாளுற றுலந்தான் வெகுண்டா னகரார்த்த தன்றே. (47) | ( )
- (வேறு)
(இரவிதோய்)
[தொகு]- இரவிதோய் கொடிகொண் மாடத் திடுபுகை தவழச் சுண்ணம்
- விரவிப்பூந் தாம நாற்றி விரைதெளித் தாரந் தாங்கி
- யரவுயர் கொடியி னான்ற னகன்படை யனுங்க வென்ற
- புரவிதேர்க் காளை யன்ன காளையைப் பொலிக வென்றார். (48) | ( )
(இன்னமுத)
[தொகு]- இன்னமு தனைய செவ்வா யிளங்கிளி மழலை யஞ்சொற்
- பொன்னவரி சுணங்கு பூத்த பொங்கிள முலையி னார்தம்
- மின்னிவர் நுசுப்பு நோவ விடலையைக் காண வோடி
- யன்னமு மயிலும் போல வணிநகர் வீதி கொண்டார். (49) | ( )
(சில்லரிச்)
[தொகு]- சில்லரிச் சிலம்பின் வள்வார்ச் சிறுபறை கறங்கச் செம்பொ
- னல்குற்றே ரணிந்து கொம்மை முலையெனும் புரவி பூட்டி
- நல்லெழி னெடுங்க ணம்பாப் புருவவில் லுருவக் கோலிச்
- செல்வப்போர்க் காமன் சேனை செம்மன்மே லெழுந்த தன்றே. (50) | ( )