1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75

விக்கிமூலம் இலிருந்து

சீவகசி்ந்தாமணிக் காப்பியம்[தொகு]

1. நாமகள் இலம்பகம்[தொகு]

கைபுனைசாந்தமுங்[தொகு]

கைபுனை சாந்தமுங் கடிசெய் மாலையும்
மெய்புனை சுண்ணமும் புகையு மேவிய
நெய்யொடு குங்கும நிறைந்த நாணினாற்
பொய்கைகள் பூம்படாம் போர்த்த போன்றவே. (51)


கடிநலக்[தொகு]

கடிநலக் கரும்பொடு காய்நெற் கற்றையின்
பிடிநலந் தழீஇவரும் பெருங்கைக் குஞ்சரம்
அடிநிலை யிருப்பெழு வமைந்த கன்மதிட்
புடைநிலை வாசிகள் பொலிந்த சூழ்ந்தவே. (52)

சலசலமும்[தொகு]

சலசல மும்மதஞ் சொரியத் தத்தம்முட்
கொலைமருப் பிரட்டைகள் குளிப்பப் பாய்ந்திரு
மலைதிளைப் பனவென நாக மான்றபோர்
குலவிய நிலைக்களங் கோல மார்ந்தவே. (53)


முத்துடை[தொகு]

முத்துடை வெண்மருப் பீர்ந்து மொய்கொளப்
பத்தியிற் குயிற்றிய மருங்கிற் பல்வினைச்
சித்திரக் கிம்புரி வைரஞ் சேர்த்துநர்
ஒத்திய லிடங்களு மொழுங்கு நீண்டவே. (54)


ஓடுதேர்ச்[தொகு]

ஓடுதேர்ச் சாரிகை யுகுபொற் பூமியும்
ஆடக மாற்றுந்தார்ப் புரவி வட்டமும்
கேடக வாட்டொழி லிடமுங் கேடிலாக்
கோடுவெஞ் சிலைத்தொழி லிடமுங் கூடின்றே. (55)


புடைநகர்த்[தொகு]

புடைநகர்த் தொழிலிடங் கடந்து புக்கபின்
இடைநகர்ப் புறம்பணை யியம்பு மோசையோர்
கடலுடைந் ததுவெனக் கலந்த தக்கடல்
மடையடைத் தனையதம் மாக்க ளீட்டமே. (56)

சிந்துரப்[தொகு]

சிந்துரப் பொடிகளுஞ் செம்பொற் சுண்ணமும்
சந்தன நீரொடு கலந்து தையலார்
பந்தொடு சிவிறியிற் சிதறப் பார்மிசை
இந்திர வில்லெனக் கிடந்த வீதியே. (57)

பாத்தரும்[தொகு]

பாத்தரும் பசும்பொனின் மாடத் துச்சிமேற்
றூத்திரண் மணிக்குட நிரைத்துத் தோன்றுவ
பூத்தன வேங்கைமேற் பொலிந்து கார்நினைந்
தேத்தரு மயிற்குழா மிருந்த போன்றவே. (58)

நெடுங்கொடி[தொகு]

நெடுங்கொடி நிழன்மதி நெற்றி தைவர
உடம்புவேர்த் தினமழை யுரறி நோக்கலின்
நடுங்குபு நல்வரை மாடத் துச்சியில்
அடங்கிவீழ்ந் தருவியி னழுவ போன்றவே. (59)

பொற்சிறுதேர்[தொகு]

பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதகம்
நற்சிறா ரூர்தலி னங்கை மார்விரீஇ
உற்றவர் கோழிமே லெறிந்த வொண்குழை
மற்றத்தே ருருள்கொடா வளமை சான்றவே. (60)

மாலையும்[தொகு]

மாலையும் பசும்பொனு மயங்கி வார்கணைக் மாலையும் பசும் பொனும் மயங்கி வார் கணைக்
கோலெயுங் குனிசிலை நுதலி னாரொடுகோல் எயும் குனி சிலை நுதலினாரொடு
வேலியி லாடவர் விரவி விண்ணவர்வேலி இல் ஆடவர் விரவி விண்ணவர்
ஆலய மிதுவென வையஞ் செய்யுமே. (61)ஆலயம் இது என ஐயம் செய்யுமே.
()

(கற்கணஞ்)[தொகு]

கற்கணஞ் செய்ததோண் மைந்தர் காதலால் கல் கணம் செய்த தோள் மைந்தர் காதலால்
நற்சுணப் பட்டுடை பற்ற நாணினாற் நல் சுணம் பட்டு உடை பற்ற நாணினால்
பொற்சுணத் தால்விளக் கவிப்பப் பொங்கியபொன் சுணத்தால் விளக்கு அவிப்பப் பொங்கிய
பொற்சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே. [62]பொன் சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்று ஏ. (62 )

நலத்தகு[தொகு]

நலத்தகு நானநின் றிடிக்கு நல்லவ நலம் தகு நானம் நின்று இடிக்கும் நல்லவர்
ருலக்கையா லுதிர்ந்தன தெங்கி னொண்பழ உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண் பழம்
நிலத்தவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞைபோய்க் நிலத்து அவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞை போய்க்
கலத்துயர் கூம்பின்மே லாடுங் கௌவைத்தே.(63) கலத்து உயர் கூம்பின் மேல் ஆடுங் கௌவைத்து ஏ. (63) ( )

இட்டவெண்[தொகு]

இட்டவெண் ணிலப்படா வகையி னீண்டிய இட்ட எள் நிலம் படா வகையின் ஈண்டிய
முட்டிலா மூவறு பாடை மாக்களாற் முட்டு இலா மூ அறு பாடை மாக்களால்
புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய புள் பயில் பழு மரம் பொலிவிற்று ஆகிய
மட்டிலா வளநகர் வண்ண மின்னதே. (64) மட்டு இலா வளம் நகர் வண்ணம் இன்னது ஏ. ( )

(தங்கொளி)[தொகு]

தங்கொளி நித்திலத் தாமஞ் சூடிய தங்கு ஒளி நித்திலம் தாமம் சூடிய
வெங்களி யிளமுலை வேற்கண் மாதரார் வெம் களி இள முலை வேல் கண் மாதரார்
பைங்கிளி முன்கைமேற் கொண்டு பார்ப்பெனுங் பைம் கிளி முன் கைமேல் கொண்டு பார்ப்பு எனும்
கொங்கலர் தாமரைக் கிடங்கு கூறுவாம் (65)கொங்கு அலர் தாமரைக் கிடங்கு கூறுவாம். (65 )

(கோட்சுறா)[தொகு]

கோட்சுறா வினத்தொடு முதலைக் குப்பைக கோள் சுறா இனத்தொடு முதலைக் குப்பைகள்
ளாட்பெறா திரிதர வஞ்சிப் பாய்வன ஆள் பெறா திரிதர அஞ்சிப் பாய்வன
மோட்டிறாப் பனிக்கிடங் குழக்க மொய்த்தெழுந் மோடு இறாப் பனிக் கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து
தீட்டிறாப் புள்ளின மரற்று மென்பவே. ஈட்டு அறாப் புள் இனம் அரற்றும் என்ப ஏ. (66 )

(சிறையனப்)[தொகு]

சிறையனப் பெடையினோ டூடிச் சேவல்போ சிறை அனம் பெடையினோடு ஊடிச் சேவல் போய்
யறுபத வண்டின மார்ப்பத் தாமரை அறுபதம் வண்டு இனம் ஆர்ப்பத் தாமரை
யுறைவது குழுவினி னீங்கி யோகொடு உறைவது குழுவினின் நீங்கி யோகொடு
கறையற முயல்வதோர் கடவு ளொத்ததே.கறை அற முயல்வது ஓர் கடவுள் ஒத்தது ஏ. (67 )

(அரும்பொனும்)[தொகு]

அரும்பொனும் வெள்ளியு மணியு மல்லது அரும் பொனும் வெள்ளியும் மணியும் அல்லது
கருங்கலந் தோய்விலாக் காமர் பூந்துறை கரும் கலம் தோய்வு இலாக் காமர் பூம் துறை
குரும்பைமென் முலையின்மேற் குலாய குங்குமம் குரும்பை மென் முலையின் மேல் குலாய குங்குமம்
விருந்துசெய் திடவெறி மேனி சேர்ந்ததே. விருந்து செய்திட வெறி மேனி சேர்ந்தது ஏ. (68 )

(பட்டவர்த்)[தொகு]

பட்டவர்த் தப்பலிற் பரவை யேந்தல்குபட்டவர்த் தப்பலின் பரவை ஏந்து அல்குல்
லட்டொளி யரத்தவாய்க் கணிகை யல்லது அட்டு ஒளி அரத்த வாய்க் கணிகை அல்லது
மட்டுடை மணமகண் மலர்ந்த போதினாற்மட்டு உடை மண மகள் மலர்ந்த போதினால்
கட்டுடைக் காவலிற் காமர் கன்னியே. கட்டு உடை காவலின் காமர் கன்னி ஏ. (69 )

(நிரைகதிர்)[தொகு]

நிரைகதிர் நித்திலங் கோத்து வைத்தபோல் நிரை கதிர் நித்திலம் கோத்து வைத்த போல்
விரைகமழ் கமுகின்மேல் விரிந்த பாளையுங் விரை கமழ் கமுகின் மேல் விரிந்த பாளையும்
குரைமதுக் குவளைகட் கிடங்கிற் பூத்தவு குரை மதுக் குவளைகள் கிடங்கின் பூத்தவும்
முரையினோ ரோசனை யுலாவி நாறுமே. உரையின் ஓர் ஓசனை உலாவி நாறும் ஏ. ( 70)

(தாய்முலை)[தொகு]

தாய்முலை தழுவிய குழவி போலவு தாய் முலை தழுவிய குழவி போலவும்
மாமலை தழுவிய மஞ்சு போலவு மா முலை தழுவிய மஞ்சு போலவும்
மாய்முகி றழீஇயசும் பறாத நெற்றிய ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றிய
சேயுயர் மதில்வகை செப்பு கின்றதே. சே உயர் மதில் வகை செப்புகின்றது ஏ. (71 )

(வேறு)

(மாற்றவர்)[தொகு]

மாற்றவர் மறப்படை மலைந்துமதில் பற்றி மாற்றவர் மறம் படை மலைந்து மதில் பற்றி
னூற்றுவரைக் கொல்லியொடு நூக்கியெறி பொறியுந் நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கி எறி பொறியும்
தோற்றமுறு பேய்களிறு துற்றுபெரும் பாம்புங் தோற்றம் உறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும்
கூற்றமன கழுகுதொடர் குந்தமொடு கோண்மா. கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா. (72 )


(விற்பொறிகள்)[தொகு]

விற்பொறிகள் வெய்யவிடு குதிரைதொட ரயில்வாள் வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள்
கற்பொறிகள் பாவையன மாடமடு செந்தீக் கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செம் தீக்
கொற்புனைசெய் கொள்ளிபெருங் கொக்கெழில்செய் கூகை கொல் புனை செய் கொள்ளி பெரும் கொக்கு எழில் செய் கூகை
நற்றலைக டிருக்கும்வலி நெருக்குமர நிலையே. நல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலை ஏ. ( 73)

(செம்புருகு)[தொகு]

செம்புருகு வெங்களிக ளுமிழ்வதிரிந் தெங்கும் செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும்
வெம்புருகு வட்டுமிழ்வ வெந்நெய்முகந் துமிழ்வ வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெம் நெய் முகந்து உமிழ்வ
வம்புமிழ்வ வேலுமிழ்வ கல்லுமிழ்வ வாகித் அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகித்
தம்புலங்க ளால்யவனர் தாட்படுத்த பொறியே. தம் புலங்களால் யவனர் தாள் படுத்த பொறி ஏ. ( 74)

(கரும்பொனியல்)[தொகு]

கரும்பொனியல் பன்றிகத நாகம்விடு சகடங் கரும் பொன் இயல் பன்றி கதம் நாகம் விடு சகடம்
குரங்குபொரு தகரினொடு கூர்ந்தரிவ நுண்ணூற் குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண் நூல்
பரந்தபசும் பொற்கொடி பதாகையொடு கொழிக்குந் பரந்த பசும் பொன் கொடி பதாகையொடு கொழிக்கும்
திருந்துமதி றெவ்வர்தலை பனிப்பத்திருந் தின்றே. திருந்து மதில் தெவ்வர் தலை பனிப்பத் திருந்தின்று ஏ. ( 75)


பார்க்க[தொகு]

சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100
1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150
2. கோவிந்தையார் இலம்பகம்
3. காந்தருவதத்தையார் இலம்பகம்
4. குணமாலையார் இலம்பகம்
5. பதுமையார் இலம்பகம்
6. கேமசரியார் இலம்பகம்
7. கனகமாலையார் இலம்பகம்
8. விமலையார் இலம்பகம்
9. சுரமஞ்சரியார் இலம்பகம்
10. மண்மகள் இலம்பகம்
11. பூமகள் இலம்பகம்
12. இலக்கணையார் இலம்பகம்
13. முத்தியிலம்பகம்.