பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101


பெரியசட்டியில் ஊற்றிக்கிட்டுப்
பெரியதாளம் போட்டாளாம்
சாற்றையெல்லாம் கண்டாளாம்
அகப்பையைத்தான் எடுத்தாளாம்

இன்னும் கணவன் வரவில்லை. அவளுக்கு அவசரம். நாக்கிலே நீர் ஊறுகிறது. அதனால் வீட்டுக் கதவைத் தாள் போட்டுவிட்டுத் தின்ன ஆரம்பித்தாள். மீன் வெந்து விட்டதா என்று பார்ப்பதற்காகக் காரணம் கற்பித்துக் கொண்டு ஒரு கண்டம் தின்றாள். பக்குவம் சரியா இல்லையா என்று ஒரு கண்டம். உப்பிருக்கிறதா என்று பார்க்க ஒன்று. இப்படியாக மீன் எல்லாவற்றையும் அவளே தின்று விடுகிறாள். பிறகு பக்கத்து வீட்டுப் பெண்களோடு வம்பளக்கப் போகிறாள்.

வெந்ததான்னு ஒருகண்டம்
வேகலையென்று ஒருகண்டம்
ஆச்சுதான்னு ஒருகண்டம்
ஆகலையென்று ஒருகண்டம்
உப்புப்பார்க்க ஒருகண்டம்
உரப்புப்பார்க்க ஒருகண்டம்
எல்லாக்கண்டமும் தின்றாளாம்
எதிர்வீட்டுக்குப் போனாளாம்
பக்கத்துவீடு போனாளாம்
பழமைபேசப் போனாளாம்


இந்தச் சமயத்திலே கணவன் வீட்டுக்கு வருகிறான். வந்தவன் சோற்றுச் சட்டியைப் பார்க்கிறான். மீனே அதில் இல்லை. அவனுக்குக் கோபம் வந்துவிடுகிறது. பெண்டாட்டி