உள்ளடக்கத்துக்குச் செல்

2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75

விக்கிமூலம் இலிருந்து

சீவக சிந்தாமணி

[தொகு]

2. கோவிந்தையார் இலம்பகம்

[தொகு]

(நூல்பொர)

[தொகு]
நூல்பொர வரிய நுண்மை நுசுப்பினை யொசிய வீங்கிக்
கால்பரந் திருந்த வெங்கட் கதிர்முலை கச்சின் வீக்கிக்
கோல்பொரச் சிவந்த கோல மணிவிரற் கோதை தாங்கி
மேல்வரற் கருதி நின்றார் விண்ணவர் மகளி ரொத்தார். (51) | ( )

(ஆகமுமிடை)

[தொகு]
ஆகமு மிடையு மஃக வடிபரந் தெழுந்து வீங்கிப்
போகமும் பொருளு மீன்ற புணர்முலைத் தடங்க டோன்றப்
பாகமே மறைய நின்ற படைமலர்த் தடங்க ணல்லார்
நாகம்விட் டெழுந்து போந்த நாகர்தம் மகளி ரொத்தார். (52) | ( )


(வாளரந்)

[தொகு]
வாளரந் துடைத்த வைவே லிரண்டுடன் மலைந்த வேபோ
லாள்வழக் கொழிய நீண்ட வணிமலர்த் தடங்க ணெல்லாம்
நீள்சுடர் நெறியை நோக்கு நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போற்
காளைதன் றேர்செல் வீதி கலந்துடன் றொக்க வன்றே. (53) | ( )

(வடகமுந்)

[தொகு]
வடகமுந் துகிலுந் தோடு மாலையு மணியும் முத்துங்
கடகமுங் குழையும் பூணுங் கதிரொளி கலந்து மூதூ
ரிடவகை யெல்லை யெல்லா மின்னிரைத் திட்ட தேபோற்
படவர வல்கு லாரைப் பயந்தன மாட மெல்லாம். (54) | ( )

(மாதுகு)

[தொகு]
மாதுகு மயிலி னல்லார் மங்கல மரபு கூறிப்
போதக நம்பி யென்பார் பூமியும் புணர்க வென்பார்
தோதக மாக வெங்குஞ் சுண்ணமேற் சொரிந்து தண்ணென்
றாதுகு பிணையல் வீசிச் சாந்துகொண் டெறிந்து நிற்பார். (55) | ( )

(கொடையுளு)

[தொகு]
கொடையுளு மொருவன் கொல்லுங் கூற்றினுங் கொடிய வாட்போர்ப்
படையுளு மொருவனென்று பயங்கெழு பனுவ னுண்ணூல்
நடையுளார் சொல்லிற் றெல்லா நம்பிசீ வகன்கட் கண்டாந்
தொடயலங் கோதை யென்று சொல்லுபு தொழுது நிற்பார். (56) | ( )

(செம்மலைப்)

[தொகு]
செம்மலைப் பயந்த நற்றாய் செய்தவ முடைய ளென்பா
ரெம்மலைத் தவஞ்செய் தாள்கொ லெய்துவம் யாமு மென்பா
ரம்முலை யமுத மன்னா ரகம்புலர்ந் தமர்ந்து நோக்கித்
தம்முறு விழும வெந்நோய் தந்துணைக் குரைத்து நிற்பார். (57) | ( )

(சினவுநர்க்)

[தொகு]
சினவுநர்க் கடந்த செல்வன் செம்மல ரகல நாளைக்
கனவினி லருளி வந்து காட்டியாங் காண வென்பார்
மனவிரி யல்கு லார்தம் மனத்தொடு மயங்கி யொன்றும்
வினவுந ரின்றி நின்று வேண்டுவ கூறு வாரும் (58) | ( )

(விண்ணகத்)

[தொகு]
விண்ணகத் துளர்கொன் மற்றிவ் வென்றிவேற் குருசி லொப்பார்
மண்ணகத் திவர்க ளொவ்வார் மழகளி றனைய தோன்றற்
பண்ணகத் துறையுஞ் சொல்லார் நன்னலம் பருக வேண்டி
யண்ணலைத் தவத்திற் றந்தாரி யார்கொலோ வளிய ரென்பார். (59) | ( )


(வட்டுடைப்)

[தொகு]
வட்டுடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்ட போழ்தே
பட்டுடை சூழ்ந்த காசு பஞ்சிமெல் லடியைச் சூழ
வட்டரக் கனைய செவ்வா யணிநலங் கருகிக் காமக்
கட்டழ லெறிப்ப நின்றார் கைவளை கழல நின்றார். (60) | ( )

(வார்செலச்)

[தொகு]
வார்செலச் செல்ல விம்மும் வனமுலை மகளிர் நோக்கி
யேர்செலச் செல்ல வேத்தித் தொழுதுதோ டூக்க விப்பாற்
பார்செலச் செல்லச் சிந்திப் பைந்தொடி சொரிந்த நம்பன்
றேர்செலச் செல்லும் வீதி பீர்செலச் செல்லு மன்றே. (61) | ( )

(வாண்முகத்)

[தொகு]
வாண்முகத் தலர்ந்த போலு மழைமலர்த் தடங்கண் கோட்டித்
தோண்முதற் பசலை தீரத் தோன்றலைப் பருகு வார்போன்
நாண்முதற் பாசந் தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான்
கோண்முகப் புலியொ டொப்பான் கொழுநிதிப் புரிசை புக்கான். (62) | ( )

(பொன்னுகம்)

[தொகு]
பொன்னுகம் புரவி பூட்டு விட்டுடன் பந்தி புக்க
மன்னுக வென்றி யென்று மணிவள்ள நிறைய வாக்கி
யின்மதுப் பலியும் பூவுஞ் சாந்தமும் விளக்கு மேந்தி
மின்னுகு செம்பொற் கொட்டில் விளங்குதேர் புக்க தன்றே. (63) | ( ( )


(இட்டவுத்)

[தொகு]
இட்டவுத் தரிய மெல்லென் றிடைசுவல் வருத்த வொல்கி
யட்டமங் கலமு மேந்தி யாயிரத் தெண்ம ரீண்டிப்
பட்டமுங் குழையு மின்னப் பல்கல னொலிப்பச் சூழ்ந்து
மட்டவிழ் கோதை மாதர் மைந்தனைக் கொண்டு புக்கார். (64) | ( )

(தாயுயர்)

[தொகு]
தாயுயர் மிக்க தந்தை வந்தெதிர் கொண்டு புக்குக்
காய்கதிர் மணிசெய் வெள்வேற் காளையைக் காவ லோம்பி
யாய்கதி ருமிழும் பைம்பூ ணாயிரச் செங்க ணான்றன்
சேயுய ருலக மெய்தி யன்னோதோர் செல்வ முற்றார். (65) | ( )

(தகைமதி)

[தொகு]
தகைமதி யெழிலை வாட்டுந் தாமரைப் பூவி னங்கட்
புகைநுதி யழல வாட்கட் பொன்னனாள் புல்ல நீண்ட
வகைமலி வரைசெய் மார்பின் வள்ளலைக் கண்டு வண்டார்த்
தொகைமலி தொறுவை யாளுந் தோன்றன்மற் றின்ன கூறும். (66) | ( ( )

(கேட்டிதுமறக்)

[தொகு]
கேட்டிது மறக்க நம்பி கேண்முதற் கேடு சூழ்ந்த
நாட்டிறை விசயை யென்னு நாறுபூங் கொம்ப னாளை
வேட்டிறைப் பார மெல்லாங் கட்டியங் காரன் றன்னைப்
பூட்டிமற் றவன்ற னாலே பொறிமுத லடர்க்கப் பட்டான். (67) | ( )

(கோளிழுக்)

[தொகு]
கோளிழுக் குற்ற ஞான்றே கொடுமுடி வரையொன் றேறிக்
காலிழுக் குற்று வீழ்ந்தே கருந்தலை களைய லுற்றேன்
மால்வழி யுளதன் றாயின் வாழ்வினை முடிப்ப லென்றே
யாலம்வித் தனைய தெண்ணி யழிவினு ளகன்று நின்றேன். (68) ( )

(குலத்தொடு)

[தொகு]
குலத்தொடு முடிந்த கோன்றன் குடிவழி வாரா நின்றேன்
நலத்தகு தொறுவி னுள்ளே னாமங்கோ விந்த னென்பே
னிலக்கண மமைந்த கோதா வரியென விசையிற் போந்த
நலத்தகு மனைவி பெற்ற நங்கைகோ விந்தை யென்பாள். (69) | ( )

(வம்புடை)

[தொகு]
வம்புடை முலையி னாளென் மடமகண் மதர்வை நோக்க
மம்படி யிருத்தி நெஞ்சத் தழுத்தியிட் டனைய தொப்பக்
கொம்படு நுசுப்பி னாளைக் குறையிரந் துழந்து நின்ற
நம்படை தம்மு ளெல்லா நகைமுக மழிந்து நின்றேன். (70) | ( )

(பாடகஞ்)

[தொகு]
பாடகஞ் சுமந்த செம்பொற் சீறடிப் பரவை யல்குற்
சூடக மணிந்த முன்கைச் சுடர்மணிப் பூணி னாளை
யாடகச் செம்பொற் பாவை யேழுடன் றருவ லைய
வாடலில் வதுவை கூடி மணமக னாக வென்றான். (71) |
(வேறு)

( வெண்ணெய்)

[தொகு]
வெண்ணெய்போன் றூறினியண் மேம்பால்போற் றீஞ்சொல்ல
னுண்ண வுருக்கிய வானெய்போன் மேனியள்
வண்ண வனமுலை மாதர் மடநோக்கி
கண்ணுங் கருவிளம் போதிரண்டே கண்டாய். (72) | ( )

(சேதாநறு)

[தொகு]
சேதா நறுநெய்யுந் தீம்பால் சுமைத்தயிரும்
பாதால மெல்லா நிறைத்திடுவல் பைந்தாரோய்
போதார் புனைகோதை சூட்டுன் னடித்தியை
யாதாவ தெல்லா மறிந்தருளி யென்றான். (73) | ( )

(குலநினைய)

[தொகு]
குலநினைய னம்பி கொழுங்கயற்கண் வள்ளி
நலனுகர்ந் தானன்றே நறுந்நார் முருகன்
நிலமகட்குக் கேள்வனு நீணிரைநப் பின்னை
யிலவலர்வா யின்னமிர்தம் மெய்தினா னன்றே. (74) |
(வேறு )

(கன்னியர்)

[தொகு]
கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர்முலைக் கன்னி மார்பம்
முன்னினர் முயங்கி னல்லான் முறிமிடை படலை மாலைப்
பொன்னிழை மகளி ரொவ்வா தவரைமுன் புணர்தல் செல்லா
ரின்னதான் முறைமை மாந்தர்க் கெனமனத் தெண்ணி னானே. (75) | ( )
தொடர்வது
2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84

பார்க்க

[தொகு]
சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
2. கோவிந்தையார் இலம்பகம் பாடல் 01-25
2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50
2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100