உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அகமத்நகர்

விக்கிமூலம் இலிருந்து

அகமத்நகர் பம்பாய் இராச்சியத்தில் உள்ள ஓர் ஊருக்கும் மாவட்டத்துக்கும் பெயராகும். ஊர்: சீனா நதியின் இடது கரையில் உள்ளது; மக்; 54,193 (1941). இதை அகமத் நைஜாம்ஷா 1494 -ல் நிறுவினான். இது 1803 -ல் மகாராஷ்டிரருக்குக் கிடைத்தது. 1806-ல் பிரிட்டிஷார் வசமாயிற்று. இது ராணுவத்தலம். முக்கியமான கைத்தொழிற் பொருள்கள் பருத்தி உடையும் பட்டுடையும், பித்தளை செப்புக் கலங்களுமாம். மாவட்டம் : மழை குறைந்த பகுதி. பருத்தி, துவரை, கோதுமை, சாயப் பொருள்கள் முக்கியப் பயிர்கள், மக் 1.142.229(1941).

வரலாறு : தக்காணத்தில் நைஜாம் ஷாகி வமிசத்தை நிறுவிய அகமத் நைஜாம் ஷாகி 1494-ல் உண்டாக்கிய நகரம். அவன் தனது தலைநகரை ஜன்னாரிலிருந்து இங்கு மாற்றிக்கொண்டான். அவன் 1499-ல் தௌலதாபாத்தைக் கைப்பற்றினான். அகமதீன் மகன் 1-ம் பா்ஹான் (ஆ. கா. 1509-53) காலத்தில் 1510 -ல் அகமத் நகர்மீது பேரார் படையெடுத்தது, ஆனால் முறியடிக்கப்பட்டது. 1-ம் பர்ஹால் பிஜாப்பூரைச் சார்ந்த இஸ்மேல் அடில்ல்ஷாவின் சகோதரியை மணந்து கொண்டான். ஆயினும் 1525-ல் பேராரும் பீடாரும் பிஜாப்பூரைத் தாக்கியபோது அகமத்நகரும் சோ்நது பிஜாப்பூரைத் தாக்கிற்று. 1531 அகமத்நகர் பிஜாப்பூரால் தோற்கடிக்கப்பட்டது. பிஜாப்பூரோடு போாிட்டு 1531-ல் கைபற்றிய ஷோலாப்பூரை 1-ம் பா்ஹான் 1542-ல் கைவிட வேண்டியதாயிற்று. 1552-ல் விஜய நகர மன்னனின் உதவியைக்கொண்டு ஷொலாப்பூரை மறுபடியும் கைப்பற்ற முடிந்தது. 1-ம் பர்ஹான் காலத்தில் அகமத்நகாில் மிகப் பொிய பீரங்கி ஒன்று செய்யப்பட்டது, அதன் எடை 40 டன்.

1-ம் பர்ஹானுக்குப்பின் 1-ம் உசேன் (ஆ.கா. 1553-65) அகமத்நகரை ஆண்டான். 1558-59-ல் இவன் விஜயநகர மன்னனான ராமராயரால் தோற்கடிக்கப்பட்டான். 1563-ல் மறுபடியும் விஜயநகரப் படைகள் அகமத்நகரை ஆக்கிரமித்துப் பல கொடுமைகளை யிழத்தன. 1564-ல் அகமத்நகர் மற்றத் தக்காண இராச்சியங்களோடு கலந்து விஜயநகரத்தைத் தாக்கத் தீா்மானித்தது. 1565-ல் தலைக்கோட்டைப் போரில் முஸ்லிம் இராச்சியங்கள் விஜயநகரை வென்று வஞ்சம் தீா்த்துக்கொண்டன. அவ்வாண்டில் 1-ம் உசேன் இறந்தான்.

1-ம் உசேனுக்குப் பிறகு அவன் மகன் 1-ம் முர்த்தாசா (ஆ. கா. 1566-1588) அரசாண்டான். இவன் காலத்தில் போர்ச்சுகேசியரோடு நடந்த தகராறில் போர்ச்சுகேசியரே வென்றனர். 1588-ல் பிஜாப்பூரைத் தாக்க முயன்றது கைகூடவில்லை. 1588-ல் முர்த்தாசா தன் மகனைக் கொல்ல முயன்று அவனால் டான். அவ்வாண்டில் முடிதரித்த அவன் மகன் II-ம் உசேன் 1589-ல் கொலையுண்டிறந்தான். இவனுடைய சிற்றப்பன் மகனான இஸ்மேல் இரண்டாண்டே ஆண்டான் (1589-91). அதன்பின் அவன் தந்தையான II-ம். பா்ஹான் (ஆ. கா. 1591-1595) சுல்தானான். இவன் டாபா டாபா என்னும் வரலாற்றசிாியைரை ஆதரித்தான்.

1595-ல், I-ம் உசேனின் மகளான சாந்த் பீபியின் ஆதரவால் இப்ரஹீம் என்பவன் நாலு மாதங்கள் ஆண்டபின் பிஜாப்பூரோடு நடந்த போாில் மடிந்தான். சாந்த் பீபி 1596-ல் பட்டெமய்திய இப்ரஹீமின் மகனையும் ஆதாித்தாள்.

இதை விரும்பாத சிலா் மொகலாய மன்னரை அகமத் நகாின்மேல் படையெடுக்கத் தூண்டினா். அவ்வாறே 1596-ல் மூரத்தும் 1600-ல் தானியலும் அப்துல் ரஹீமும் அகமத்நகா்மீது படையெடுத்தனா். சாந்த் பீபி எவ்வளவோ முயன்றும் நகரைக்காக்க முடியவில்லை; சரணடைவது அறிவுடைமை என்று அவள் கூறியதைத் துரோகம் என்று கருதிய மக்கள் அவளைக் கொன்றனா். பகதூர் சிறையிடப்பட்டான். அகமத்நகரை மொகலாய சக்கரவா்த்தி அக்பா் தனது சாம்ராச்சியத்தில் சோ்த்துக் கொண்டான். தே. வெ. ம.