கலைக்களஞ்சியம்/ஆஸ்திரியா-ஹங்கேரி
Appearance
ஆஸ்திரியா-ஹங்கேரி என்பது ஆஸ்திரிய நாடும் ஹங்கேரி நாடும் சேர்ந்த மத்திய ஐரோப்பியப் பகுதி. இவ்விரண்டு நாடுகளும் 1867 முதல் 1918 வரை ஒன்று சேர்ந்திருந்தன. இரண்டும் சேர்ந்து பெரிய பகுதியாயிருந்த போதிலும் எவ்வித முக்கியத்துவமும் அடையவில்லை. நாட்டு மக்கள்வறிஞராக இருந்தனர். இந்த இரட்டை நாடு தோன்றிய காலமுதல், இதற்கு வடக்கேயிருந்த ஜெர்மன் சாம்ராச்சியத்துக்கும் கிழக்கேயிருந்த ரஷ்ய சாம்ராச்சியத்துக்கும் அஞ்சியே அதன் அரசியலாட்சி நடந்து வந்தது. இதன் பரப்பு : 261,241 ச. மைல். மக்: 51,4,00.000. இதிற் பல தனி யினத்தினர் தனித்தனிப் பகுதிகளில் வாழ்ந்தனர். அவர்களுள் ஜெர்மானியரும் மாகியரும் பிற இனத்தினரை அடக்கி வந்தனர். முதல் உலக யுத்தத்தின் இறுதியில்1918-ல் ஆஸ்திரியாவும் ஹங்கேரியும் தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. பார்க்க: ஆஸ்திரியா, ஹங்கேரி.