காற்றில் வந்த கவிதை/ஏறாத மலை யேறி
பழநி மலையிலே பக்தியோடு ஏறி நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் முருகப் பிரானைத் தொழுது அவனுடைய அருளைப் பெறுகிரு.ர்கள். அதிகாலையில் தொடங்கும் பக்தர்களின் கூட்டம் இரவு நேரம்வரை ஒய்வதில்லை
ஆண்டிலே எந்த மாதத்திலும் இந்தக் கூட்டம் குறையாது. வெய்யில் தகிக்கும்படியான அக்கினி நட்சத்திரம் வருகின்ற காலத்திலும்கூட முருகனைத் தொழுவதில் மக்களுக்குள்ள ஆர்வம் குறைவதில்லை. அந்தக் காலத்தில் தான் பழநியிலே கூட்டம் அதிகம்.
சித்திரை மாதக் கடைசியிலும் வைகாசித் தொடக்கத்திலும் அக்கினி நட்சத்திரம் வருகின்றது. அப்பொழுதுதான் கதிரவனின் உக்கிரம் உச்சநிலையை அடைகிறது. அப்பொழுது தான் பழநியில் கூடுகின்ற மக்கட் கூட்டமும் மிக அதிகமாகிறது. உச்சிவேளை. வெய்யில், வெய்யில், ஒரே வெய்யில். பழநி மலையின் அடிவாரத்திலிருந்து உச்சிவரை "வேலும் மயிலும்" "சாமியே சரணம்" என்ற கோஷங்கள் முழங்குகின்றன.
மேலெல்லாம் திருநீறு பூசிய அடியவர்கள் மலையேறுகிறார்கள். வெய்யிலிலே வியர்வை பொங்கித் திருநீற்றைக் கரைத்துக்கொண்டு உடம்பெல்லாம் வழிகின்றது. அவர்கள் கால்கள் தளர்கின்றன. ஆளுல் அவர்களுடைய பக்தி தளர வில்லை. உடலிலே ஏற்படுகின்ற தளர்ச்சியையும் போக்கக் கூறியதாக ஒரு கானம் எங்கிருந்தோ கேட்கிறது.
ஏருத மலையேறி எருதுரண்டும் தத்தளிக்கப்
பாராமற் கைகொடுப்பார் பழநிமலை வேலவனே
வாழ்க்கைப் பாதையிலே நாம் போகிருேம். எப்படிப் போகிருேம்? இரண்டு எருதுகளைப் பூட்டிக்கொண்டு இந்த உடம்பாகிய வண்டியில் அந்தப் பாதையிலே போகிருேம். ஒரு எருதுதான் நமது நெஞ்சு அல்லது உள்ளம். உணர்ச்சிகளுக்கெல்லாம் நிலைக்களமாக இருப்பது. மற்ருெரு எருது மனம். சிந்தனைக்கும் பகுத்தறிவுக்கும் இடமாக இருப்பது.
உள்ளத்தையும் மனத்தையும் இரண்டு காளைகளாகக் கொண்டு பூட்டிய இந்த யாக்கையென்னும் வண்டியிலேறி வாழ்க்கைப் பயணத்தைச் செய்து கொண்டிருக்கிருேம். பயணமோ மலை உச்சியை நோக்கிச் செல்ல வேண்டியது. இந்தக் காளைகளில் ஒன்று சோர்வடைந்தாலும் பயணம் கெட்டுப் போகும்; நேராக நடைபெருது. இரண்டும் சோர்ந் தால் கேட்க வேண்டியதே இல்லை.
இப்படி எருதுகள் இரண்டும் தத்தளிக்கும்போது முருகன் பார்த்துக்கொண்டு வாளா இருக்க மாட்டார். அவர் கருணைக் கடல். அவரை அன்போடு நினைத்தால் கை கொடுத்து உதவுவார். இந்த உயர்ந்த கருத்தை அந்த நாடோடிப் பாடல் எடுத்துக் கூறுகிறது.
பாட்டு மேலும் கேட்கிறது. யாரோ பாடுகிரு.ர்கள். பழநி மலையின்மீது ஏறுகின்ற ஒருவன்தான் பாடுகிருன். ஆனால் அந்தப் பாடலை யார் முதலில் பாடிஞர்களோ தெரியாது. பழநி மலை அந்தப் பாடலைப் பெற்றிருக்கிறது என்று வேண்டுமானல் கூறலாம். ஏனென்ருல் அந்தப் பாடல் பழநி மலைக்கு அப்படிச் சொந்தமாகிவிட்டது.
எருக்கிலைக்குத் தண்ணீர்கட்டி
எத்தனைபூப் பூத்தாலும்
மருக்கொழுந்து வாசமுண்டோ
மலைப்பழநி வேலவனே
பெரியதோர் உண்மையை வெளியிடுகின்ற பாட்டு இது. எருக்கஞ் செடியைப் பயிரிட்டு அதற்குத் தண்ணிர் பாய்ச்சி என்ன பயன் கிடைக்கப் போகிறது? அது பூக்கின்ற மலர்களுக்கு மருக்கொழுந்தின் மணம் இருக்குமா? பயனில்லாத காரியத்தில் காலத்தைச் செலவழிப்பதால் வாழ்க்கை வீணுகிறது. எருக்கைப் பயிரிடுகின்ற நேரத்தில் மருக்கொழுந்தைப் பயிரிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரண்டு முயற்சிகளுக்கும் சிரமம் ஒன்றுதான். காலச் செலவும் வேறுபடாது. ஆனால், பலன் நிச்சயமாக வேறுபடுகிறது. ஆதலால், நல்ல பயனுடைய செயலிலேயே நாம் நமது வாழ்க்கையைச் செல விடவேண்டும் என்று இப்பாடல் குறிப்பாக உணர்த்துகிறது.
பழநி மலையிலே ஏறுகின்ற அடியவர்களில் இல்லறத்தார் உண்டு. துறவறத்தைக் கைக்கொண்டவர்களும் உண்டு. ஒரு துறவி பாடிக்கொண்டே மலையின்மீது அடியெடுத்து வைக்கிறான். அவன் துறவுக் கோலம் சரியாகத்தான் பூண்டிருக்கிருன். உச்சியிலே சடையிருக்கிறது. நெற்றியிலே திருநீறு இருக்கிறது. முருகனிடத்திலே மாருத பக்தி வேண்டும் என்பதை எப்பொழுதும் நினைவு படுத்துவதற்காக அவன் முருகனுடைக படையான வேலையும் கையிலே வைத்திருக்கிறான்.
இருந்தாலும் அவனுடைய மனம் ஒரு வழியில் நிற்ப தில்லை. மனம் பொல்லாதது. அதை அடக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அடிக்கடி அது நெறியல்லா நெறியினில் போக ஆசைப்படுகிறது. இதை அந்தத் துறவி தனது பாடலிலே கூறுகிருன்.
உச்சியிலே சடையிருக்க
உள்ளங்கையில் வேலிருக்க
நெற்றியிலே நீறிருக்கக்-கந்தையா என்
நினைவுதப்பிப் போவதென்னே
மனத்தைக் கட்டி வைத்து நல்ல நெறியிலே அதைப் போகச் செய்வதற்குக் கடவுளின் அருள் வேண்டும். அவனுடை அருளில்லாமல் மனத்தை அடக்க இயலாது. பழநி மலைப் பெருமான் கடைக் கண் பாலித்தால் மனம் கட்டுப்படும். இதைத்தான் முருகனிடத்தில் அந்தத் துறவி வேண்டி மலையேறுகிறான்.