உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம் பேச்சு:நற்றிணை-2.pdf/428

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

பாடியவர் இடைக்காடனார் அல்லர் இளவேட்டனார் ஆவர்

[தொகு]

221ம் எண்ணுள்ள பாடலைப் பாடியவர் இடைக்காடனார் அல்லர் இளவேட்டனார் ஆவர்.
TI Buhari (பேச்சு) 18:47, 8 அக்டோபர் 2024 (UTC)Reply

இப்பாடலைப் பாடியவர் "இடைக்காடனார்" என்றுதான் வேறு சில இணையப் பக்கங்களில் காணப்படுகிறது. ஆதாரம்:[1], [2]--Booradleyp1 (பேச்சு) 03:35, 9 அக்டோபர் 2024 (UTC)Reply

பாடலைப் பாடியவர் இளவேட்டனார் ஆதாரம் பாடல்: 221.
டாகடர் மு வரதராசனார் அவர்களின் நற்றிணைச் செல்வம் என்ற நூலில் காடு என்ற தலைப்பில் 41ம் பக்கத்திலும் பாடலாசிரியர் இளவேட்டனார் என்றே காணப்படுகிறது
டாக்டர். மா. இராசமாணிக்கனார் அவர்களின் தமிழ் மொழி இலக்கிய வரலாறு நூலில், நற்றிணை என்ற தலைப்பின் கீழ் நற்றிணையில் செய்யுட்களைப் பாடிய புலவர்கள் என்ற பட்டியலில் இளவேட்டனார் [வரிசை எண்: 20] பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் வேறு பாடல் ஏதும் இயற்றியதாகத் தெரியாத போழ்து, இவர் இயற்றியது இப்பாடலாகத்தானே இருக்க வேண்டும்?
TI Buhari (பேச்சு) 05:42, 9 அக்டோபர் 2024 (UTC)Reply

பாடலைப் பாடியவர் பெயர் பட்டியலில் விடுபட்டுள்ளது

[தொகு]

207ம் எண்ணுள்ள பாடலைப் பாடியவர் ஆவூர்கிழார் மகனார் கண்ணனார். இவர் பெயர் பட்டியலில் விடுபட்டுள்ளது. காண்க : 207
TI Buhari (பேச்சு) 03:20, 9 அக்டோபர் 2024 (UTC) @TI Buhari:@Info-farmer: ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்:Reply

பாடினோர் பெயர் காணாச் செய்யுட்கள் 207, 229, 235, 271, 355, 385, 396 என்பதில் பாடல் 207 உள்ளது.
  • இவர் குறித்த தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் ([3])- சங்கப்பாடல்களில் இவரது பாடல் ஒன்றே ஒன்று (அகநாநூனூறு-202) காணப்படுகிறது என உள்ளது.
  • நான் மேலே சான்றாகக் கொடுத்துள்ள இணையப் பக்கங்களில் நற்றிணை 207 ஆம் பாடலின் ஆசிரியர் அறியப்படவில்லை என்று குறிக்கப்பட்டுள்ளது.
  • 207- இங்கு காணப்படும் ஆசிரியர் குறித்த தகவல் தவறாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.
  • மேலும் பிற ஆதாரங்களைக் சுட்ட முடிந்தால் இதனைத் திருத்தலாம்.--Booradleyp1 (பேச்சு) 04:06, 9 அக்டோபர் 2024 (UTC)Reply
    நன்றி. உரியவர்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறேன். Info-farmer (பேச்சு) 04:12, 9 அக்டோபர் 2024 (UTC)Reply
    ஒளவை துரைசாமியின் நற்றிணை - 3 நூலில் ஆதாரம் காணவும்
    ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்
    ஆவூர் கிழார் புறநானூற்றிற் காணப்படும் சான்றோர்களுள் ஒருவர். ஆவூர் என்ற பெயருடைய வூர்கள் தஞ்சை வடவார்க் காடு ஆகிய மாவட்டங்களில் உள்ளன. ஆவூர் வடவார்க்காடு மாவட்டத்துத் திருவண்ணாமலை வட்டத்து ஆவூராக இருக்கலா மெனப் புற நானூற்றுட் கூறினாம். அவர் மகனாரான கண்ணனார் தம் தந்தையை யொப்பச் சிறந்த நல்லிசைப்புலவராக விளங்கு கின்றார். யானை உயிர்த்தலால் வேங்கையின் பொன்னிறப் பூக்கள் உதிர்தல், கொல்லன் உலைக்களத்திற் பழுக்கக் காய்ந்த இரும்பை அடிக்குமிடத்துத் தெறிக்கும் பிதிர்வுகட்கு ஒப்ப விளங்கும் என்று கூறுமுகத்தால் தமது நுண்மாண்புலமையைத் தாம் பாடிய அகப்பாட்டொன்றால் இவர் வெளிப்படுத்துகின்றார். இவர் பாடிய பாட்டு அகநானூற்றுள் கோக்கப்பட்டுள்ளது. களவின் கண், காதல் கைம்மிக்குத் தலைமகனை இன்றியமையாளாகிய தலைமகளது மேனிக்கண் தோன்றிய வேறுபாடு அவளுடைய செவிலிக்கு மனக்கலக்கத்தை உண்டுபண்ணிற்று. தலைவி யுள்ளத்தே முறுகியிருக்கும் காதலை யுணராமல் தலைமகனும் வரைவினை நீட்டித்து வந்தான். இந்நிலையில் நொதுமலர் சிலர் உண்மையறியாமல் தலைமகள் பெற்றோர்பால் மகட்கொடை வேண்டி வருவாராயினர். அதனை அறிந்த தோழிக்குத் தலைவி யின் தமர் தலைமகற்கு மறுத்து அவர்கட்கு மகட்கொடை நேர்வர் கொல் என்ற ஐயம் தோன்றிற்று. உடனே அவள் தலைவி குறிப்புணர்ந்து தன்தாயாகிய செவிலிக்கு அறத்தொடு நிற்பாளா யினள். தமிழ்மக்கள் வாழ்வில் பெண்டிர் ஒருவனை மணத்தல் தான் அறமென்று கண்டிருந்தனர்; “இருமணம் கூடுதல் இல்லியல் பன்று”1 என்பர் ஒருவற்குத் தமது உள்ளத்தை நல்கின் பின்பு அதனை மீட்டு வேறொருவன்பால் செலுத்தார்; தான் காதலித்த ஆண்மகனுக்கு வாழ்க்கைப் பட்டவள் அவனோடே உயிர் வாழ்ந்து அவன் இறப்பின் அவனோடு உயிர்விடுதலோ, அன்றிக் கைம்மை மேற்கொண்டு மறுபிறப்பில் அவனையே கணவனாகப் பெறுதற்கு நோற்றலோ செய்வதன்றி வேறொருவனை மணத்தல் இல்லை. இஃது அவர்கட்கு அறமாதலின், தாம் காதலித்த ஆண் மகனையன்றி வேறொருவன் தம்மை மனைவியாகப் பெறல் வேண்டிப் பெற்றோர்களை மகட்கொடை நேருமாறு கேட்பது தெரியுமாயின், உடனே அவர்கள் தமக்குரிய அறத்தின்கண் நின்று தாயர் முதலியோர்க்குத் தம் காதலை யுணர்த்துவர். அதுவே அறத்தொடு நிற்றல் என்பது; அஃது அறத்தொடுநிலை யெனவும் வழங்கும். அவ்வாறு நிற்குமிடத்து மகளிர் தமக்கும் காதலனாகக் கொண்ட ஆண்மகனுக்கும் தொடர்புண்டாய திறத்தை வெளிப்படையாகவும் குறிப்பாகவும் நிலைமைக் கேற்ப உரைப்பர். இம்முறையால் தோழி களவிற்குச் சிறந்த தாயாதல் பற்றிச் செவிலியை அணுகி, “அன்னாய், தலைமகளது உள்ளத்திற் கோயில்கொண்ட தலைமகனது தேர் நமது பாக்கத்துக்கு நாடோறும் வந்து கொண்டிருக்கிறது; அவனுக்கும் தலைமகட்கும் உளதாய காதலுறவை இவ்வூரவர் அலர் கூறுகின்றனர்; இனி அவர் நம் பாக்கத்துக்குப் போந்து வறிது பெயர்குவாரல்லர்; இதனை மனத்துட் கொண்டு மகட்கொடை வேண்டி வந்தோரை மறுத்தல் முறையாம்” என்பது படக் கூறலானாள்.
    தோழியின் இக்கூற்று, தலைவி தலைமகன்பால் காதல் கொண்டு உறைதலை, அவன் தேர்வரவு காட்டியும் அவனது காதற்சிறப்பை அவனது தேர் வறிது பெயர்க்குவதன் றென்று ரைத்தும் புலப்படுத்தல் கண்ட கண்ணனார் அதனை இப்பாட்டின் கண் அமைத்துப் பாடுகின்றார். இப்பாட்டின் பிற்பகுதி ஏடுகளில் சிதைந்தும் வேறுபட்டும் காணப்படுகிறது.
    கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை
    முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
    கொழுமீன் கொள்பவர் பாக்கம் கல்லென
    நெடுந்தேர் பண்ணி வரலா னாதே
    குன்றத் தன்ன குவவுமணல் நீந்தி
    வந்தனர் பெயர்வர்கொல் தாமே அல்கல்
    இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇக்
    கோட்சுறா எறிந்தெனக்1 கீட்படச் சுருங்கிய
    2முடிமுதிர் வலைகைக் கொண்டு பெருங்கடல்
    3தலைகெழு பெருமீன் முன்னிய
    கொலைவெஞ் சிறாஅர்க் 4கோட்பட் டனளே.</poem>}}
    இது, நொதுமலர் வரைவு வந்துழித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
    TI Buhari (பேச்சு) 04:57, 9 அக்டோபர் 2024 (UTC)Reply