உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை - முதற்பகுதி/நினைக்கத் தகுந்த தொடர்கள்

விக்கிமூலம் இலிருந்து

நினைக்கத் தகுந்த தொடர்கள்

சிறுவர் விளையாட்டு
             பொரியரை வேம்பின் புள்ளி நீழல்
             கட்டளை அன்ன இட்டரங் கிழைத்துக்
             கல்லாச் சிறுவர் நெல்லிவட் டாடும்
             வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர் செய்–3

உப்ப வண்டிகள்
                                        —உமணர்
              வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்
              கணநிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம்
              மணல்விடுத் தூறும் ஓசை கழனிக்
              கருங்கால் வெண்குருகு வெரூஉம். செய்–4

வாழ்க்கை உண்மை
              புணரின் புணராது பொருளே, பொருள்வயிற்
              பிரியின் புணராது புணர்வே. செய்–15

ஆடவர் தன்மை
              செயல்படு மனத்தர் செய்பொருட்கு
             அகல்வர் ஆடவர். செய்–24

நில்லாமை
             வைகல்தோறும் இன்பமும் இளமையும்
             எய்கணை நீழலில் கழியும். செய்–68

பெண்கள் திலக மிடல்
             திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல் செய்–62

புதுநீர் ஆடுதல்
            குறுநுரை சுமந்து நறுமலர் உந்தி
            பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம். செய்–68