அட்டவணை பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf
தலைப்பைச் சேர்குறிப்பு - எழுத்துணரியாக்க தானியங்கியில் வழு
[தொகு]ஏறத்தாழ ஒரு மணிநேரம் ஆகிவிட்டது. ஓரளவு இயக்கத் தொடங்கி விட்டேன். விளைவின் மூலம் சரியாக வருகிறது. பத்திச்சீராக்கம் செய்து உருவாகும் கோப்பில் வழு வருகிறது. அதாவது வெற்றுப் பக்கமாக வருகிறது. பிறகு மின்னஞ்சல் அனுப்புகிறேன். Info-farmer (பேச்சு) 13:10, 4 செப்டெம்பர் 2024 (UTC)
- எழுத்துணரியாக்கம் முடிந்தது. அடுத்த தொகுதி இயக்கியுள்ளேன். Info-farmer (பேச்சு) 15:38, 4 செப்டெம்பர் 2024 (UTC)
மேலடியிடல்
[தொகு]- இந்நூலிற்கு ஓரிரு நாட்களில் மேலடிகள் இட்டு சரிபார்க்க செயற்படுகிறேன்.
- முதற்கட்டமாக, பயனர்:Info-farmerBot என்ற எனது தானியங்கி மேலடிகளை இடுகிறது. சில தவறுகள் வரலாம் என்பதால், நான் சரிபார்க்க வுள்ளேன்.
- இருப்பினும் குறிப்பாக நீங்கள் யாரேனும் கண்டால் பக்க எண்ணைக் குறிப்பிட்டு பிழைகளைத் தெரிவிக்கவும். தானியங்கியை மேம்படுத்த தங்களது உரை உதவும்.
Info-farmer (பேச்சு) 13:29, 30 அக்டோபர் 2024 (UTC)
- மேலடி இடும் போது ஏற்பட்டப் பிழைகளை முழுமையாகச் சீர் செய்துள்ளேன். பைத்தானில் நடுப்பகுதியில் மேலடியுரை நீக்கும் போது, நீக்கும் வரியின் அளைவை(len ) கணக்கிட்டு நீக்குதல் நன்று. மேலும், முதலில் தட்டச்சுப் பிழைகளை நீக்கி, பொருளடக்கப் பக்கத்தினை ஊதா நிறமாக மாற்றுதல் வேண்டும். பிறகு உட்தலைப்புகளுக்கு விக்கிக் குறியீடுகளை இடுதல் வேண்டும். அப்பொழுது தான் நூல் முழுமையும் ஒரே அளவிலான உட்தலைப்பு அமையும். பிறகு, உட்தலைப்பு உள்ள பக்கங்களுக்கு மேலடி இடுதல் கூடாது. இதனால் துப்புரவு பணி வெகுவாகக் குறையும். Info-farmer (பேச்சு) 01:54, 31 அக்டோபர் 2024 (UTC)
பக்க ஒருங்கிணைவு
[தொகு]Info-farmer (பேச்சு) 17:26, 30 அக்டோபர் 2024 (UTC)
அடிக்குறிப்பிடல்
[தொகு]பொதுவாக சான்றுக்குரிய விக்கிக்குறியீடுகளைக் கொண்டு, ஒரு பக்கத்திற்கான அடிக்குறிப்புகளை இடுவோம். ஏனெனில், அடிக்குறிப்புகள் அந்த பக்கத்திலேயே அச்சாகி இருக்கும். அதற்கு ref / reflist குறியீடுகளைப் பயன்படுத்துவோம். ஒரு பக்கத்திற்கான அடிக்குறிப்புகள் வேறு ஒரு அச்சுப் பக்கத்தில் தொகுக்கப்பட்டிருப்பின், இங்குள்ள வழிகாட்டுதல்களை நாம் பின்பற்றுவது அதனினும் எளிமை. இந்நூலுக்கு அந்த வழிமுறையை பின்பற்றுவோம். Info-farmer (பேச்சு) 16:20, 2 நவம்பர் 2024 (UTC)
- @TI Buhari நீங்கள் குறிப்பிட்ட அடிக்குறிப்புகள் இந்நேரத்தில் நினைவு படுத்தியமைக்கு நன்றி. பல நூல்களின் தொகுப்பாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஓரிரு பக்கங்களுக்கு அடிக்குறிப்புகள் உள்ள பக்கங்களை சீர்படுத்தித் தருகிறீர்களா? ஆம். எனில். அட்டவணையைக் காண்க. அடிக்குறிப்பு என்று அட்டவணையின் எண்களில் எழுதி வருகிறேன். ஆவலுடன்.. Info-farmer (பேச்சு) 02:45, 3 நவம்பர் 2024 (UTC)
- {{anchor}} குறித்து என்னுள் ஓர் ஐயப்பாடு உள்ளது . அதற்கான தீர்வை ஆங்கில விக்கியில் தேடி வருகிறேன். ஐயப்பாடு என்னவெனில், மேற்கோள் குறியீட்டுக்கான விளக்கம் அதே பக்கத்தில் இருக்கும் பட்சத்தில், மேற்கோள் எண்ணை நாம் சொடுக்கினால், மேற்கோளுக்கான விளக்கத்துக்கு நம்மை இட்டுச் செல்லும். ஆனால், {{anchor}} உபயோகிக்கும் போது, மேற்கோள் எண்ணை நாம் சொடுக்கினால், மேற்கோளுக்கான விளக்கத்துக்கு நம்மை இட்டுச் செல்வதில்லை. இது ஏன் எனத் தெரியவில்லை. இந்த ஐயப்பாடு தீர்ந்தவடன், நான் கண்ட தீர்வை இங்கு அளித்து பின், தாங்கள் குறிப்பிடும் பக்கங்களை இன் ஷா அல்லாஹ், மெய்ப்புப் பார்க்கிறேன்.
— TI Buhari (பேச்சு) 02:57, 3 நவம்பர் 2024 (UTC)- அறிந்து வழிகாட்டிட காத்திருக்கிறேன். இது போன்ற மகத்தான பணிகளைக் கற்று வழிகாட்டிடதான் ஆளில்லாமல் தவிக்கிறேன்/தவிக்கிறோம். நான் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்ளவே பலரின் திறன் வீணாகிறது. இச்சூழ்நிலையில் உங்களின் வழிகாட்டலை எதிர்நோக்குகிறேன். Info-farmer (பேச்சு) 07:39, 3 நவம்பர் 2024 (UTC)
- பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/90 என்ற பக்கத்தில் 7வதுதலைப்புத் தொடங்குகிறது. பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/94 என்ற பக்கத்தில் 7வதுதலைப்பு முடிவடைகிறது. இப்பக்கங்களில் மொத்தம் இரு அடிக்குறிப்புகளே வருகின்றன. சோதனைக்காக, <.ref>{{sup|[[#footnote1|1].]|}.}<./ref> {.{anchor|footnote1}} என்பனவற்றை பயன்படுத்தியுள்ளேன். {{reflist}.} இல்லாமல் இது எப்படி செயற்படுகிறது. ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதை பிறரிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். பிறகு இந்நூல் முழுவதும் இம்மாற்றத்தினை ஏற்படுத்தித் தொகுப்பேன். @Balajijagadesh உங்களின் விளக்கத்தினை அறிய ஆவல். Info-farmer (பேச்சு) 08:48, 4 நவம்பர் 2024 (UTC)
- அறிந்து வழிகாட்டிட காத்திருக்கிறேன். இது போன்ற மகத்தான பணிகளைக் கற்று வழிகாட்டிடதான் ஆளில்லாமல் தவிக்கிறேன்/தவிக்கிறோம். நான் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்ளவே பலரின் திறன் வீணாகிறது. இச்சூழ்நிலையில் உங்களின் வழிகாட்டலை எதிர்நோக்குகிறேன். Info-farmer (பேச்சு) 07:39, 3 நவம்பர் 2024 (UTC)
- {{anchor}} குறித்து என்னுள் ஓர் ஐயப்பாடு உள்ளது . அதற்கான தீர்வை ஆங்கில விக்கியில் தேடி வருகிறேன். ஐயப்பாடு என்னவெனில், மேற்கோள் குறியீட்டுக்கான விளக்கம் அதே பக்கத்தில் இருக்கும் பட்சத்தில், மேற்கோள் எண்ணை நாம் சொடுக்கினால், மேற்கோளுக்கான விளக்கத்துக்கு நம்மை இட்டுச் செல்லும். ஆனால், {{anchor}} உபயோகிக்கும் போது, மேற்கோள் எண்ணை நாம் சொடுக்கினால், மேற்கோளுக்கான விளக்கத்துக்கு நம்மை இட்டுச் செல்வதில்லை. இது ஏன் எனத் தெரியவில்லை. இந்த ஐயப்பாடு தீர்ந்தவடன், நான் கண்ட தீர்வை இங்கு அளித்து பின், தாங்கள் குறிப்பிடும் பக்கங்களை இன் ஷா அல்லாஹ், மெய்ப்புப் பார்க்கிறேன்.
மேற்கோள், அடிக்குறிப்பு நுட்ப வேறுபாடு
[தொகு]@TI Buhari: கீழ்காணும் பக்கத்தில் அடிக்குறிப்பு 1 , அடிக்குறிப்பு 9 இரண்டிற்கும் {{anchor}} பயன்படுத்தியுள்ளேன். வாசிக்கும் வாக்கிய எண் 1 என்பதை அழுத்தும் போது, அது கீழே வந்து அடிக்குறிப்பு1 என்பதைக் காட்டுகிறது. தொடர்ந்து படிக்க அடிக்குறிப்புப் பகுதியில் இருந்து மேலே செல்லும் வசதி இதில் இல்லை. அதனால் விட்ட இடத்தில் இருந்து வாசிக்க இயலவில்லை. தேட வேண்டியதுள்ளது. அதற்கு நாம் மேற்கோள் குறியீடுகளையே பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறேன். அதனால் அந்த அடிக்குறிப்பில் இருந்து மேலே சென்று தொடர்ந்து வாசிப்பது எளிமையாக உள்ளது. எனவே, நான் மேற்கோள் குறியீடுகளையே இட எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் என்ன?
- மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/002-011 - கண்டிரம் என்பதில் முதல் அடிக்குறிப்பு உள்ளது.
- எடுத்துக்காட்டாக, அடிக்குறிப்பு 2 என்பதை பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/53வது பக்கத்தில் இருந்து படியெடுத்து, பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/33 என்ற பக்கத்தில் இட்டுள்ளேன். இதனால் அப்பக்கத்தில் அடிக்குறிப்பினை காணவும் இயலுகிறது. பக்க ஒருங்கிணைவு செய்த பக்கத்திலும் (மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/002-011) மேலும், கீழும் சென்று அடிக்குறிப்புகளை அறிந்து, தொடர்ந்து வாசிக்க, எளிமையாகவும் இருக்கிறது. --Info-farmer (பேச்சு) 05:05, 18 நவம்பர் 2024 (UTC)
Anchor குறித்து, ஆங்கில விக்கியில், இப்பிரச்னையை எவ்வாறு கையாண்டுள்ளனர் என்று கண்ட பின், இது குறித்த தெளிவைப் பெறலாம். தாங்கள் விக்கி Conferenceலும் இது குறித்த தெளிவைப் பெற்று வரலாம்.
அது வரையிலும், தங்கள் முறையிலேயே செயல்படலாம். ஒரு பகுப்பை உருவாக்கி, இம்மாதிரிப் பக்கங்களை, அப்பகுப்பில் இட்டு வைத்தோமாயின் பின், விரைவில் நெறிப்படுத்த இயலும்.
— TI Buhari (பேச்சு) 08:59, 18 நவம்பர் 2024 (UTC)- ஆம். ஆங்கில விக்கிமூல ஆவணங்களைப் பார்த்தேன். இங்குள்ள css மாற்றம் செய்ய வேண்டும். முதலில் அதற்கான அணுக்கம் கேட்டுப் பெற வேண்டும். அதிலும் எனக்கு செயற்பட விருப்பம்தான். இருப்பினும் ஒத்தி வைத்துள்ளேன். பல பக்கங்கள் விரைந்து எழுத்தாவணமாக மாற்றவே எண்ணுகிறேன். தற்போது உள்ள நுட்பத்தால் எந்த இடரும், நான் அறிந்தவரை தோன்றவில்லை. ஏற்கனவே பாலாஜி உட்பட பலரைக் கேட்டுள்ளேன். Info-farmer (பேச்சு) 01:05, 19 நவம்பர் 2024 (UTC)
அடிக்குறிப்புகளின் தட்டச்சுப்பிழைகள்
[தொகு]- பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/334 என்ற பக்கத்தில் இருக்கும் அடிக்குறிப்பு இறுதி எண் 16 என உள்ளது. ஆனால் பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/336 என்ற பக்கத்திலும் அடிக்குறிப்பு எண் 16 உள்ளது. எனவே வரிசையெண்ணைத் தவறாகப் போட்டிருக்கலாம். முழுமையாக அடிக்குறிப்புகளை சரிபாக்க வேண்டும்.
Info-farmer (பேச்சு) 07:51, 11 நவம்பர் 2024 (UTC)
பச்சையாக்குதல்
[தொகு]@TI Buhari பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/90 என்ற பக்கத்தில் நீங்கள் செய்த மாற்றங்களை முன்னிலை ஆக்கியுள்ளேன். ஏனெனில், அச்சுப்பக்கத்தில் கியையமைப்பு தடிமனான எழுத்தில் உள்ளது. கிளையமைப்பு வரைபடமும் நீங்கள் வடிவமைத்தது போல இல்லை. உங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும் பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/124 என்ற பக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தி மஞ்சள் நிலைக்கு மாற்றவும். இரு பக்கங்களையும், பிறரின் எண்ணமறிந்து அம்மாற்றத்தினை இந்நூல் முழுவதும் பயன்படுத்துவோம். பச்சையாக்குதலைத் தவிர்ப்போம். நிறைய பக்கங்கள் சிவப்பு நிலையில் உள்ளன. அதனை மஞ்சள் நிலைக்கு மாற்றுவதை முதன்மை பணியாகப் பின்பற்றுவோம். Info-farmer (பேச்சு) 07:46, 4 நவம்பர் 2024 (UTC)
கிளையமைப்பு வடிவமுள்ள பக்கங்கள்
[தொகு]பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/124 என்ற பக்கத்தினை ஒரு மணி நேரமாக வடிவமைத்தேன். இருப்பினும், என்னிடம் இரு கணியத்திரைகள் உள்ளன. ஒன்றில் சரியாக இயல்பிருப்பில் (100% ) தோன்றுகிறது. மற்றொரு சிறிய திரையில் 70% வைக்கும் போதே சரியாகத் தொன்றுகிறது. இதற்கு இவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டுமா என எண்ணுகிறேன். அதனால்தான் இதன் அடுத்த பக்கமான பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/125 பட ஆவணமாகவே பேணியுள்ளேன். இதனே மேம்படுத்தி எத்தகைய திரை அளவிலும் சரியாக தெரியும் நுட்பம் இருக்கலாம். அதுவரை ஊதா நிறமாகவே வைக்க வேண்டும். சிவப்பு நிறமாக இருந்தால் எழுத்துப்பிழைகள் உள்ளன என்று பொருளாகிவிடும். உங்களின் எண்ணங்கைத் தெரியப்படுத்தவும். Info-farmer (பேச்சு) 02:30, 7 நவம்பர் 2024 (UTC)
- பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/309 இதனை வடிவமைக்க ஒரு மணிநேரத்திற்கும் மேலானது. பக்க வரலாறு காணவும்.--Info-farmer (பேச்சு) 11:15, 7 நவம்பர் 2024 (UTC)
- பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/494
ஆய்வுக்_களஞ்சியம்-2 : மயிலை சீனி வேங்கடசாமி பக்கம்: 125 அல்ஹம்துலில்லாஹ்! ஆயிற்று
—TI Buhari (பேச்சு) 13:50, 18 நவம்பர் 2024 (UTC)
ஆய்வுக்_களஞ்சியம்-2 : மயிலை சீனி வேங்கடசாமி பக்கம்: 494 அல்ஹம்துலில்லாஹ்! ஆயிற்று
—TI Buhari (பேச்சு) 16:50, 18 நவம்பர் 2024 (UTC)
@TI Buhari: எனக்குப் படத்தில் காண்பது போல கிளைப்படம் வருகிறது. ஏற்கனவே எனது எண்ணங்களைக் கூறி விட்டேன். மூல வடிவம் போல இல்லாததைப் பச்சையாக்காதீர்கள்.
- மற்றொன்று உங்களது இறை நம்பிக்கையை மதிக்கிறேன். அதனை இங்கு எழுதி, நான் உட்படப் பிறரை வாசிக்கும்படி செய்யாதீர்கள்.. பிறரின் இறை நம்பிக்கை வேறாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, "ஓம் முருகா! என்றோ, ஜெய் ஶ்ரீராம்" என்றோ, பிறர் எழுதினால், அது வேறுபட்ட எண்ணங்களை உருவாக்கும். எந்த சமயம் குறித்தும் எழுதுவதற்கான இடம் இது அல்ல. இந்த அட்டவணை குறித்து மட்டும் எழுதுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பேச்சுப் பக்கத்தில் உரையாடும் போது மட்டும் எழுதலாம் என்பது எனது எண்ணம். உங்களுக்கு மாறுபட்ட எண்ணம் இறையியல் சார்ந்து இருப்பின், பிறரின் எண்ணம் அறியவும்.
- en:Category:Quran என்பதில் இருக்கும் செறிவு இங்கில்லை. குர்ஆன் என்பதையும் நீங்கள் மேம்படுத்தி, பலர் அறியச் செய்யலாம். --Info-farmer (பேச்சு) 00:51, 19 நவம்பர் 2024 (UTC)
- //னக்கு படத்தில் காண்பது போல கிளைப்படம் வருகிறது.// தாங்கள் கூற வருவது எனக்கு விளங்கவில்லை. “படத்தில்” என்றால், எந்தப் படம்? சுட்டி தரவும்.
— TI Buhari (பேச்சு) 03:21, 19 நவம்பர் 2024 (UTC)- இந்த உட்பிரிவில் ஒரே ஒரு படத்தினையே (File:Ws-ta-family tree not as the source page.png) இணைத்துள்ளேன். பிற மொழியினரிடம் வரும் சனி, ஞாயிறு உரையாடுவேன். அறிந்து தெரிவிக்கிறேன். பிறகு தொடர்வோம். Info-farmer (பேச்சு) 04:17, 19 நவம்பர் 2024 (UTC)
பங்களித்தோர் புள்ளிவிவரங்கள்
[தொகு]- இந்நூலினை மேம்படுத்தும் பணியில் இந்நாள் வரையில் ஈடுபட்டவர்களை அறிய இதனைச் சொடுக்கவும். இந்த இணைப்பினை உருவாக்கிய பிறகு பங்களிப்பு செய்தவர்களை அறிய இற்றை செய்து பார்க்க வேண்டும். அதனை அனைத்துப் பக்கங்களையும் செய்த பின்பு, இறுதியில் நானே செய்ய உள்ளேன்.
- ஒரு குறிப்பிட்ட பயனர் எவ்வளவு பக்கங்களை இந்நூலில் மஞ்சள் நிலைக்கு மாற்றியுள்ளார் என அறிய இதனைச் சொடுக்கவும்.
- தேவை : ஒவ்வொரு நபருக்கும் இப்படி அறிவதை விட, ஒரு நூலில் எத்தனை நபர்கள் பங்கு கொண்டார்களோ அவர்கள் தனித்தனியே எத்தனை பக்கங்களை மஞ்சள் நிலைக்கு மாற்றினார்கள் என்பதை அறிய நுட்பம் தேவை.