ஆறுமுக நாவலர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

கவிமணியின் கவிமலர்கள்

ஆறுமுக நாவலர்[தொகு]

ஆசிரியர்: கவிமணி[தொகு]

(வெண்பா)


1. புண்ணியநாள், நாளெல்லாம் போற்றுநாள், செந்தமிழ்த்தாய்
எண்ணியெதிர் பார்க்கும் இனியநாள், மண்ணுலகின்
மேவுமுயர் சைவம் விளங்கிடுநாள், ஆறுமுக
நாவலர்கோன் தோன்றியநல் நாள்.

(வேறு)


2. ஆடும் தில்லை யம்பலவன்
அடிகள் மறவா அன்புடையோன்,
பீடு பெறவே செந்தமிழைப்
பேணி வளர்த்த பெரும்புலவன்,
நீடு சைவம் இவ்வுலகில்
நிலவச் செய்த குருநாதன்,
நாடு புகழும் ஆறுமுக
நாவ லன்பேர் மறவோமே!
3. இல்லா ஏழை எளியவருக்கு
இரங்கும் இனிய குணசீலன்,
கல்லா தவரின் கல்நெஞ்சும்
கனியப் பேசும் கனிவுடையோன்,
வல்லா ரறிஞர் செல்வரறம்
வளர்க்கும் ஈழ வளநாட்டான்,
நல்லார் போற்றும் ஆறுமுக
நாவ லன்பேர் மறவோமே.


பார்க்க:
கம்பன்
[[ ]]
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆறுமுக_நாவலர்&oldid=444527" இருந்து மீள்விக்கப்பட்டது