ஊசிகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.ஊசிகள்
மீரா


அன்னம்

மனை எண்: 1, நிர்மலாநகர்,

தஞ்சாவூர்-613007

ஊசிகள் / © மீரா / முதற்பதிப்பு: 1974 /ஆறாம் பதிப்பு: நவம்பர்.1996/ஏழாம் பதிப்பு: செப்டம்பர் 2003/ வெளியீடு: அன்னம், மனை எண்: 1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-7/ அச்சாக்கம்: ஹேமமாலா சிண்டிகேட், சிவகாசி/ விலை: ரூ. 30.00

பரிசோதனை


அப்துல் ரகுமான்: பாலு! 'ஊசிகள்' படித்தாயே எப்படி இருக்கிறது?
பால சுந்தரம்: முன்பெல்லாம் புலவர்கள் 'பாடான்திணை'என்று உயர்ந்த ஒழுக்கமுள்ளவர்களுக்குத் தான் தங்கள் பாட்டில் இடம்கொடுப்பார்கள். எல்லாம் மாறுகிற காலமிது. இங்கே, ஊசிகளின் கதாநாயகர்கள் ஊழல் பேர்வழிகள். மீராவுக்கு நயமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. சமுதாயத்தைக் கூர்மையாக பொதுநல உணர்வோடு பார்க்கிறான். அவனது மொழிப் புலமையும் இதற்குக் கை கொடுத்திருக்கிறது.
ரகுமான்: சரி, மீரா! என்ன நோக்கத்தோடு இந்த ஊசிகளை உருவாக்கியிருக்கிறீர்கள்?
மீரா: சமுதாயத்தின் நோய்க்கிருமிகளைப் பார்க்கிறபோது சங்கடப்படுகிறேன். கோபமும் வருகிறது. ஒரு சுகாதாரமானசமுதாய ஆசை தான் இந்த ஊசிகளை உருவாக்கியது.
ரகுமான்: அப்போ இந்த ஊசிகள், மருந்து ஊசி என்கிறீர்கள்.
பாலு: வெறும் ஊசிகளாகக்கூட எடுத்துக்கொள்ளலாமே. குத்தப்படுகிறவர்களுக்கு வலிக்க
லாம். குற்றப்பிறவிகள், ஊசிகள் எங்களைக் குத்துகிறதே என்று ஒப்பாரி வைப்பதில் அர்த்தமில்லை. இவர்களால் குத்தப்பட்ட நல்லவர்களைக் காணும்போதெல்லாம் கவிஞனுடைய கண்ணும் நெஞ்சும் குத்தப்பட்டி ருக்குமே. அதை நினைத்துப் பார்த்தால் இந்தக் குற்றவாளிகளுக்கு இவை நகக் கண்ணில் ஏற்றும் ஊசிகளாக இருந்தாலும் சரிதான் என்றே படுகிறது. அப்படிப் பார்க்கிற போது இந்த ஊசிகள் உயர்ந்த வையாகவே தோன்றுகின்றன.
ரகுமான்: அப்போ 'குத்த'லாக எழுதப்பட்டிருக்கிற இந்தக்கவிதைகளுக்கு ஊசிகள் என்ற பெயர் நயமாகத்தான் படுகிறது. ஆனால் இந்த மாதிரி 'குத்தல்' எழுத்துக்கள் உயர்ந்த இலக்கியமாக மதிக்கப்படுமா?
மீரா: அது எப்படியோ; என்னைப் பொறுத்தவரை இலக்கிய உப்பரிகையில் உலாவுவதைவிட்ச் சமுதாய நடை பாதைகளைச் செப்பனிடு வதையே முக்கியமாகக் கருதுகிறேன்.
பாலு: சில 'ஊசிகள்' சிலரைக் குறிப்பிட்டுக்குத்துவ தாகப்படுகிறது. பொதுவாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்; இல்லையா?
ரகுமான்: எனக்கும் கூட அப்படித்தான் தோன்றுகிறது அகப்பொருள் பாட்டுக்களுக்கு 'ஒருவர் பெயரைச்சுட்டக்கூடாது' என்ற கட்டுப்பாடு இருந்தது போல இத்தகைய கவிதைகளுக்கும் இருந்தால்தான் அவை வெறும் Scandal, ஆகாமல் இலக்கியமாகவும் ஆகும். நிரந்தரமும் கிடைக்கும்.
பாலு: Dryden தன் அங்கதக் கவிதைகளில் ஊரை யும் பேரையும் சுட்டித்தான் எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றை நீக்கினாலும் கவிதையாக எப்போதும் படித்து ரசிக்க முடியும் என்று T.S. Eliot சொல்லுகிறாரே.
ரகுமான்: அவருடைய கவித்திறமை இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
மீரா: 'ஊசிகளில் வரும் பெயர்கள் யாரையும் குறிப்பிடுவனவல்ல; ஆனால் கருத்து யாரையும் குறிப்பிடலாம்.
ரகுமான்: தற்காலிகச் சிக்கல்களைப் பாடுவதனால் கவிதை நிரந்தரத்துவத்தை இழந்துவிடும் என்று T.S.Eliot சொல்லுகிறாரே, ஊசிகளில் இப்படிச் சில தற்காலிகச் சிக்கல்களையும் பாடியிருக்கிறீர்களே?
மீரா: ஆமாம்; தற்காலிகச் சம்பவங்களும் வரலா றாவதில்லையா? இவற்றிற்கும் Historical Value இருக்குமல்லவா?
பாலு: 'ஊசிகளின் கருத்துக்கள் கற்பனையில்லை என்பதுதான் இவற்றின் வலிமை. கற்பனையாக இருந்தால் ஊசிகள் தைப்பதற்கு இடம் இல்லாமல் போயிருக்கும்.
ரகுமான்: ஒரு கிழிசலைத் தைக்க வாங்கிய ஊசியை மீண்டும் தேவைப்படும்போது பயன்படுத்தப் பத்திரப்படுத்திக் கொள்வதுபோல் இவைகளையும் பத்திரப்படுத்திக் கொள்ளலாம். மீராவின் ஊசிகளில் ஒரு குறிப்பிட்ட தத்துவ நூல் கோக்கப்பட்டிருக்கிறது; இல்லையா?
பாலு: ஆமாம்; நானும் உணர்கிறேன். இப்படித் தன் சார்பை ஓங்கிப் பறையடிப்பதால் இலக்கிய அசுணங்களுக்கு விபத்து ஏற்படாதா?
ரகுமான்: ஏதாவது எடுத்துக் காட்டிச் சொல்லேன்.
பாலு: 'வீரமும் விவேகமும் என்ற கவிதையில் 'பாரத மக்கள் அமெரிக்கன்ரிப்போர்ட்டரை இலவசமாக வாங்கிக் கடையில் நிறுத்துப் போட்டு அந்தப் பணத்தில்.சோவியத்நாடு: சந்தா கட்டுவதாகச் சொல்லுகிற இடம். இங்கே இலக்கியத் தன்மையைவிட ஒரு 'பற்றுதான் முன்நின்று முகம் நீட்டுகிறது. அப்படி ஒரு பற்று இருப்பது இலக்கியத் துக்குப் புறம்பானது என்று கூறவில்லை. அந்தச்சார்பு இல்லாதவனும் அடடா என்று பாராட்டும்படியாக அது சொல்லப்பட வேண்டும். அப்போதுதான் அது இலக்கியம் ஆகும். இங்கே ஒரு பிரச்சாரத்தைக் கிண்டல் செய்கிறவன் இன்னொரு பிரச்சாரத்தைப் பற்றினால் ஆதரிப்பதாகத்தான் படுகிறது. இந்தப் பற்று மயக்கத்தில் இந்தியரின் விவே கத்தைப் பாராட்டி எழுத வந்தவன் தன்னை யும் அறியாமல் கேலி செய்திருக்கிறான்.
மீரா: ஆமாம்; அதுவும் என் நோக்கந்தான் 'சோவியத் நாடு வாங்குவதோடு நம்மவர்களின் ஆசைநின்று போகிறது. இதற்குமேல் பொதுவுடைமைப் பாதையில் நம்மவர்களால் நடக்க முடியாத பலவீனத்தைக் குத்திக்காட்டத்தானே வேண்டும்.
பாலு: அப்படியென்றால் சரி; இருந்தாலும் உன் 'கனவுகள் கற்பனைகள் காகிதங்களில் உன் ஆன்மா அள்ளி அணைக்க விரும்பும் பேரழகைப்
"புரட்சியில் மலர்ந்த சோவியத் பூமியின் கூட்டுப் பண்ணைகளை-
"

படங்களில் பார்த்து மலைக்கும்
ஓர் இந்திய உழவனைப்போல்'
பார்த்து வியப்படைவதாக எழுதியிருந்தாயே இந்த வரிகள் 'தொண்டியன்ன அவள் நலன் என்பது போல ஒர் இலக்கிய மரபோடும் இருப்பதால் என்னால் சுவைக்க முடிந்தது. அதுபோல இதைச் சுவைக்க முடியவில்லை.
ரகுமான்: இங்கே அமெரிக்கன் ரிப்போர்ட்டரையும் சோவியத் நாட்டையும் Symbol ஆக எடுத்துக்கொண்டால் நம்முடைய வெளிநாட்டு உறவுக்கொள்கையை அழகாக விமர்சனம் செய்வதாக ஆகிவிடுகிறதே. அப்படி எடுத்துக்கொண்டால் என்ன?
பாலு: எப்படி இருந்தாலும் 'கனவுகள்.............' மீராவுக்கு ஏற்படுத்திய Image-ஐ இந்த ஊசிகள் கீறிவிடுமோ என்று நினைக்கிறேன்.
ரகுமான்: 'கனவுகளுக்குத் தருகிற இடத்தை ஊசி' களுக்கு நிச்சயம் நானும் தரமாட்டேன். ஆனால் ஒருவனுக்கு ஏற்படுகிற ஒரு குறிப் பிட்ட'Image மாறக்கூடாது என்பது அருவருக்கத்தக்க ‘Hero worship’, போல ‘Image Worship’ என்றே நான் நினைக்கிறேன். சுதிபிசகாமல் பாடுகிற வித்வான். ஒருவன் பையில் கையை விடும் திருடனைப் பார்த்துப் போடும் சத்தத்தில் சுதிலயத்தை எதிர்பார்க்கலாமா? இந்தச் சமுதாய நிர்ப்பந்தம் எப்பொழுதும் இருந்து வருகிறது. ஊசிகளில் ஒரு சில கவிதைகளை இன்னும் கொஞ்சம் செறிவாகவும் நயமாகவும் செய்திருக்கலாம் என்றே படுகிறது.
பாலு: எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது உதாரணமாக சிவப்பு நாடாவில் மூன்றா-
வது பத்தியை முழுதுமாக எடுத்துவிட்டால் கவிதை இறுக்கமாக இருந்திருக்கும்.
மீரா: பதவிக்கு வருகிறவர்கள் எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்கிறார்களே தவிரச் சிவப்பு நாடாவை யாரும் நீக்குவதாகத் தெரிய வில்லை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லும் உத்தியைக்கொண்டு உணர்த்த முயன்றிருக்கிறேன்.
ரகுமான்: அப்படி என்றால், கண்ணன் சொல்கிறான் என்று முதலில் போட்டது போலவே 'மூன்றாம் பத்தியையும் நான்காம் பத்தியை யும் வெவ்வேறு ஆட்கள் சொல்வதுபோல் தலைப்பிட்டு எழுதியிருந்தால் இது இன்னும் பளிச்சென்று தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் அவன் நண்பன்' என்பதுகூட ரொம்ப நீளமாக இருக்கிறது. மற்ற கவிதைகளோடு 'Symmetrical' அமையவில்லை.
மீரா: நூல் முழுவதற்கும் 'Epilogue' ஆக இதைச் சேர்த்திருக்கிறேன். அதனால், மற்றவற் றோடு இது 'Symmetrical'ஆக அமைய வேண்டிய அவசியமில்லை.
பாலு: எந்தச்சந்த உணர்வும் இல்லாமல் இன்றைக்கு எழுதப்படுகிற புதுக்கவிதைகளுக்கு நடுவே 'ஊசிகள் அகவல் ஒசையில் அமைந்திருப் பதை நான் வரவேற்கிறேன். இந்தச் சந்தம் கவிதைப் பொருளுக்குக் கைகொடுப்பதால் எனக்குப் பிடிக்கிறது. கத்தி வந்தது டும்... டும்', உறுமின் வருமளவும்... , 'கல் சிறந்த தமிழ்நாடு', 'உயிருள்ள பத்திரிகை" போன்ற தலைப்புக்கள் கவிதைக்கு மேலும் நயம் கூட்டுவதாக நினைக்கிறேன். சில புகழ்பெற்ற அரசியல் முழக்கங்கள், இலக்கியத்-
தொடர்கள், பழமொழிகள், திரைப்பாடல் வரிகள் இவைகளைப் பொருத்தமாகக் கையாண்டிருப்பதால் கவிதைகளுக்கு வலிமை கூடியிருப்பதாகக் கருதுகிறேன்.
ரகுமான்: பயிற்சியில் வரும் 'Craftsmanship' கவிதை ஆக்கத்திற்கு எப்படி உதவும் என்பதற்கு இவை உதாரணங்கள் என்று நினைக்கிறேன். ஒருசில கவிதைகளின் வடிவமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் அவைகளுக்கு, effect கூடியிருக்கும் என்பது என் அபிப்பிராயம்.
பாலு: நீ உத்திகளைப் பற்றிச் சொல்லுகிறாய் என்று நினைக்கிறேன். 'ஊசிக'ளில் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட உத்தி கையாளப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். சொல்ல வந்த கருத்துக்குப் பகைப்புலமாக முரண்பாடான ஒன்றை நிறுத்திச் சொல்லும் உத்தி திறமையோடு கையாளப்பட்டிருக்கிறது. "இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி ... ஜனநாயக சோஷலிசம் போன்ற சில கவிதைகளில் ஒரே கல்லில் இரண்டு பழங்களை அடிக்கும் வித்தையை ரசிக்க முடிகிறது. சமுதாயத்தின் ஒரு சில துறைகளைப் பற்றியே திரும்பத் திரும்பச் சலிக்கிற அளவுக்கு குறை சொல்லுகிற சிலரைப் போன்றில்லாமல் பல்வேறுபட்ட துறைகளையும் தயவு தாட்சண்யம் இன்றிச்சாடுவது பாராட்டக் கூடிய அம்சமாக நினைக்கிறேன். 'சட்டத் தின் இரும்புக் கரங்களுக்கும் கிளர்ச்சியின் தீ நாக்குகளுக்கும் தப்பிய நான் இந்தக் கவிதை களின் குத்தலுக்கா திருந்துவேன்' என்றிருக் கிற தடித்த தோலர்களுக்கு இந்த ஊசிகளைக் காணிக்கையாக்கலாம்.

அணிந்துரை


எஸ்.ஏ. பெருமாள்


கவிதை எழுதுவது விதை விதைப்பது போன்றதே. மண்ணைக் கிழிக்காமல் விதைகள் முளைப்பதில்லை. கவிதை இந்த மண்ணைக் கிழித்து முளைத்து வளர்ந்து பிரம்மாண்ட ஆலாவிருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. இதில் மண் என்றாலும் தேசமென்றாலும் மக்கள்தான். எனவே கவிதையென்பது சமூகத்தைப் புனரமைப்பது, சமூகத்தை மாற்றுவது, அவலங்களை அம்பலப்படுத்துவது என்று புலனாகும்.

கவிஞர்களில் நிறைய எழுதிக் குவித்தவர்கள் முதல், ஒரே ஒரு கவிதை மட்டும் எழுதியவர் வரை பல ரகம் உண்டு. எனினும் கவிஞர் எதைப்பற்றி எழுதினார் என்பதுதான் கேள்வி. கவிதைப் பயணத்தில் தடம் பதித்தவர்கள் மிகச் சிலரே. கவிதையை ஒரு கை வாளாய் பிரயோகித்தவர்கள் தமிழில் வெகு அபூர்வம். அவர்களில் தோழர் மீராவும் ஒருவர். சமூக அநீதிகளைத் தட்டிக் கேட்கத்துண்டிய கூர்மையான 'ஊசிகள்' தொகுப்பு பிரபலமானது. 1974ல் வெளிவந்தது. உள்ளடக்க ரீதியில் இத்தொகுப்பு பெரும் வெற்றி பெற்றது. இதே காலத்தில் வெளிவந்த அவரது கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் தொகுப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இதோ தமிழுக்கு ஒரு கலீல் ஜிப்ரான் கிடைத்துவிட்டார் என்று கவிஞர்களையே பேசவைத்தது.

10

தோழர் மீரா ஒரு கவிஞர் மட்டுமல்ல; அவர் ஒரு இலக்கிய இயக்கம். அன்னம், அகரம் பதிப்பகங்கள் மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டார். பல முகமறியாப் படைப்பாளிகளுக்கு முகங் கொடுத்தவர். சாமான்யப் படைப்பாளிகளைக்கூட அவர்களது நூல்களை துணிச்சலுடன் வெளியிட்டு, பிற்காலத்தில் அவர்கள் பெரிய படைப்பாளிகளாக வளர்வதற்கு ஒரு ஏணியாய் இருந்தார். அவர்களை நானும் நன்கறிவேன். ஒருவேளை அந்தப் படைப்பாளிகள் இதை மறுத்தாலும் மீரா வெளியிட்ட நூல்கள் அதற்கு நிரந்தரச் சாட்சியங்களாய் திகழுகின்றன. மற்றவர்களைப் பெரிய எழுத்தாளர்களாக்கி அவர்களை அறிமுகம் செய்வதிலேயே அதிக கவனம் செலுத்தியதால் அவரது எழுத்துப்பணி குறைந்து போனது தமிழின் துரதிருஷ்டம்.

கவிக்கோ அப்துல் ரகுமான் இந்த 'ஊசிகள்' தொகுப்பு பற்றி "குத்தலாக எழுதப்பட்டிருக்கிற இந்தக்கவிதைகளுக்கு ஊசிகள் என்ற பெயர் நயமாகத்தான் படுகிறது. ஆனால் இந்த மாதிரிக் 'குத்தல்' எழுத்துக்கள் உயர்ந்த இலக்கியமாக மதிக்கப் படுமா?" என்று கேட்கிறார். அதற்கு "அது எப்படியோ; என்னைப் பொறுத்தவரை இலக்கிய உப்பரிகையில் உலாவுவதைவிடச் சமுதாய நடைபாதைகளைச் செப்பனிடுவதையே முக்கியமாகக் கருதுகிறேன்" என்று மீரா விடையளித்துள்ளார்.

"எல்லாம் மாறுகிற காலமிது. இங்கே ஊசிகளின் கதாநாயகர்கள் ஊழல் பேர்வழிகள். மீராவுக்கு நயமான நகைச்சுவையுணர்வு இருக்கிறது. சமுதாயத்தைக்கூர்மையாகப் பொதுநல உணர்வோடு பார்க்கிறார். அவரது மொழிப் புலமையும் இதற்குக் கை கொடுத்திருக்கிறது" என்று கவிஞர் பாலசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு சின்னஞ்சிறு கவிதைத் தொகுப்பானாலும் கீர்த்திமிக்க ஒன்றாகும். கன்னத்திலடித்தாற்போல கவிதை வரிகள் விழுகிறது. சாதி வெறியில் பிராமணருக்கு மற்றவர்கள் சளைத்தவரல்ல என்பதை,

'தேவ பாஷையில் தேர்ச்சிமிக்க
சாஸ்திரி ஒருவர் சபையில் சொன்னார்;
'ஜாதி வேண்டும் ஜாதி வேண்டும்;
உடனே சீறி ஒரு தமிழ் மறவர்
ஓங்கிக் கத்தினார்; ஒய் ஒய், இனிநீர்
ஜாதி வேண்டும் என்றால் பொறுமையாய்
இருக்கமுடியாது என்னால்
சரியாய்ச்
சாதி வேண்டும் என்றே சாற்றும்...”

எங்கும் சிவப்பு நாடா முறையால் அரசின் பல்வேறு இலாகாக்களில் லஞ்சமும் ஊழலும் தாண்டவமாடுவதை

“நிர்வாகத் தோட்டத்தில்
நீருற்றத் தவறும்
அதிவீர வர்க்கத்தின்
அலட்சியப் போக்கால்
நாங்கள்
நட்டுவைத்த நல்ல லட்சியம்
பட்டுப் போவதைப்
பார்க்கிறோம்... பதைக்கிறோம்"

என்று பாடுகிறார்.

இத்தொகுப்பில் எதிரொலி எனுங்கவிதை மிகவும் குறிப்பிடத்தக்கது. ‘ஊருக்குத்தாண்டி உபதேசமெல்லாம்’ என்ற பழமொழிக்கேற்ப இக்கவிதை ஆப்பு அறைகிறது. சிக்கனத்தை உபதேசிக்கும் பிரதமரைப் பார்த்து -

“பிரியம் மிகுந்த பிரதமரே
உமது மந்தரி சபையின்

12


எண்ணிக்கையை நீர் கொஞ்சம் குறைப்பீர்
கொஞ்சம் ..... ”

என்று குத்திக்காட்டுகிறது. கவிஞர் மீரா போன்றவர்கள் முப்பதாண்டுகளுக்கு முன்பே சமூகப் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து, அம்பலப்படுத்தித் தடம் பதித்தனர். ஆயினும் பிற்காலக் கவிஞர்கள் இந்தத் தடம் மறந்து சூனிய வெளியில் சஞ்சரித்து இன்றுவரை வெறுமையைத் தரிசித்து வருகின்றனர். புதுக்கவிதையில் தடம்பதித்த வானம்பாடிகளும், மேத்தா, அப்துல் ரகுமான், பாலா, கந்தர்வன் போன்றவர்கள் அந்தப் பதாகைகளைத் தொடர்ந்து ஏந்திப் பவனி வருவது இங்கு நினைவுகூரத்தக்கது.

கல்வி வியாபாரமாகி தற்போது சூதாட்டமாய் கொடிகட்டிப் பறக்கிறது. இதை துவக்க காலத்திலேயே கல்வி சிறந்த தமிழ்நாடு, கவிதை மூலம் மீரா அம்பலப்படுத்தினார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கூறும் தொகைப் பட்டியல் இன்று நமக்கு அற்பமாய் தெரிகிறது. ஆயினும் தமிழக அரசியல் அரங்கம் மட்டும் மீரா கூறுவது மாதிரி -

"சினிமா அரங்கில்
அரசியல் கூத்து:
அரசியல் மேடையில்
சினிமாச்சண்டை
ஒரே கல்லில்
இரண்டு மாங்காய்...'

என்று தொடர்கதையாய் நீள்கிறது.

இந்த ஊசிகளை வாசியுங்கள். சமூகப் பிரச்சனை குறையும், மக்கள் பிரச்சனையும் எப்படிக் கவிதைகளாக்க முடியும் என்பதை அறிவீர்கள்.

மதுரை
எஸ்.ஏ. பெருமாள்
மாநில செயற்குழு உறுப்பினர், தமுஎச.


13

(Upload an image to replace this placeholder.)

உள்ளடக்கம்


"https://ta.wikisource.org/w/index.php?title=ஊசிகள்&oldid=1489229" இருந்து மீள்விக்கப்பட்டது