கலைக்களஞ்சியம்/அனதாரி
Appearance
அனதாரி தொண்டை நாட்டில் வாயல் என்னும் ஊரினர்; கம்பனைப்போலும் கூத்தனைப்போலும் புகழ் பெற்றவரெனத் தொண்டை மண்டல சதகம் கூறும். இளமையிற் சோணாட்டுக்கு வந்து, உறத்தூரில் அந்தணரொருவரிடம் தமிழ்க்கலை பயின்றார். அக்காலத்துக் கன்றாப்பூர்த் தலைவரான தீங்கரரயனால் ஆதரிக்கப் பெற்றார். கல்லூர், மன்றை என்ற ஊர்களின் தலைவனும் கச்சிவீரப்பன் என்ற மன்னனுக்கு அமைச்சனுமான திருவிருந்தானது வேண்டுகோளால் சுந்தர பாண்டியம் என்ற நூலைப் பாடினார். நூல் பாடிய காலம் 1563. இது மகாவித்துவான் ரா. இராக வையங்காரவர்களால் அச்சிடப்பட்டது.