உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அனந்தப்பூர்

விக்கிமூலம் இலிருந்து

அனந்தப்பூர் சென்னை இராச்சியத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தின் தலைநகரம். விஜயாகர அரசருடைய திவானாக இருந்த சிக்கப்ப உடையார் அமைத்துத் தமது மனைவி அனந்தம்மையின் பெயரையிட்டார். நகராட்சிப் பட்டணம். நன்செய் சூழ்ந்தது. மக்: 31,952 (1951). அனந்தப்பூர் மாவட்டம் 1882-ல் பல்லாரியிலிருந்து பிரிக்கப்பட்டது. இதன் வட, மத்தியப் பகுதிகள் பல குன்றுகள் நிறைந்த பீடபூமி, தென் பகுதி மலைப் பாங்கானது. குத்தியிலும் பெனுகொண்டாயிலும் குன்றுகளில் கோட்டைகளையொத்த பாறைகள் உள்ளன. முக்கிய விளைபொருள்கள் புன்செய்த் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி. மாவட்டத்தின் பரப்பு: 6,706 ச.மைல் ; மக் : 13,61,556 (1951).