கலைக்களஞ்சியம்/அறுபட்ட பீடபூமி
Appearance
அறுபட்ட பீடபூமி (Dissected plateau) : ஒரே உயரமுள்ள சில குன்றுகள் ஒன்றையொன்று அடுத்துச் சில இடங்களில் காணப்படும். இவையெல்லாம் முன்னொரு காலத்தில் ஒரு பீடபூமியின் பல்வேறு இடங்களாக இருந்தவை. பிறகு இடையிடையே பூமி அரிமானத்தால் பள்ளத்தாக்குகள் ஏற்பட்டு, எஞ்சிய பகுதிகள் எல்லாம் குன்றுகள்போல் காணப்படுகின்றன. அறுபட்ட பீடபூமி என்பது முன்பு பீடபூமியாக இருந்த இடத்தில் பிறகு இடையே பள்ளத்தாக்குகள் ஏற்பட்டதைக் குறிக்கும்.