கலைக்களஞ்சியம்/அல்மோரா
Appearance
அல்மோரா இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் குமாவோன் பிரிவில் ஒரு ஜில்லா. இதன் தலைநகரும் இதே பெயருடையது; 5,520 அடி கடல் மட்டத்திற்கு மேல் உள்ளது. நகர மக்: 10,229 (1941). இந்நகரில் ராம்சே கல்லூரியும், தண்டும், ஆரோக்கியத்தலமும் இருக்கின்றன. அல்மோரா ஜில்லாவின் பரப்பு : 5,389 ச. மைல், மக்: 6,57,236(1941). இங்குத் தேயிலை பயிரிடப்படுகிறது.