உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அழகசுந்தரம்

விக்கிமூலம் இலிருந்து

அழகசுந்தரம் (1773-1941)யாழ்ப்பாணத்தினர். சி. வை. தாமோதரம் பிள்ளையவர்களின் புதல்வர். அழகசுந்தரம் என்பது பெற்றோரிட்ட பெயர். பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி என்பது ஞானஸ்நானப் பெயர். கிறிஸ்தவப் பாதிரியராக இருந்தார். சென்னைப் பல்கலைக் கழகம் தொகுத்த லெக்சிகன் தொகுப்புக் குழுவிலே ஒருவராகவும், கொழும்புப் பல்கலைக் கழகத்திலே தமிழாராய்ச்சியாளராகவும் இருந்தார். ஏசு வரலாறு, அகப்பொருட் குறள், இராமன் கதை, பாண்டவர் கதை, சந்திரகாசம் என்னும் நூல்களின் ஆசிரியர். ஆங்கில நூல்களும் எழுதியுள்ளார்.