உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆசியாகோ

விக்கிமூலம் இலிருந்து

ஆசியாகோ (Asiago) கிழக்கு இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளின் தென் பகுதியிலுள்ள ஓர் ஊர்; யாத்திரிகர்கள் பலர் கூடுமிடம். கடல் மட்டத்திற்கு 3.278 அடி மேலேயுள்ளது. முதல் உலக யுத்தத்தில் இத்தாலிக்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையே நடந்த போர்களில் ஆசியாகோவில் நடந்த சண்டை முக்கியமானது. போர் நினைவுச் சின்னம் ஒன்று பெரிதாக இவ்வூரில் கட்டப்பட்டுள்ளது. மக்: 3,051 (1936).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆசியாகோ&oldid=1456385" இலிருந்து மீள்விக்கப்பட்டது