கலைக்களஞ்சியம்/ஆண்டிப் புலவர்
Appearance
ஆண்டிப் புலவர் செஞ்சியை அடுத்த ஊற்றங்காலில் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர். இவரைப் பாவாடை வாத்தியார் என்றும் கூறுவர். இவர் ஆசிரிய நிகண்டு என ஒரு நூலும், உரையறி நன்னூல் என ஒரு நூலும், நன்னூற்கு ஆசிரியப் பாவால் அமைந்த ஓருரையும் இயற்றியுள்ளனர்.