உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இடபம்

விக்கிமூலம் இலிருந்து

இடபம் (ரிஷபம்): மேஷ முதல் எண்ணிய இராசிகளுள் இரண்டாவது; வைகாசி மாதத்தில் சூரியன் இருக்கும் இராசி; கிருத்திகையின் கடைசி மூன்று பாதங்களும், உரோகிணியும் மிருகசீரிடத்தின் முதல் இரண்டு பாதங்களும் அடங்கியது. இந்த இராசியில் முக்கியமானது கிருத்திகை நட்சத்திரத் தொகுதி. இது ஆறு நட்சத்திரங்கள் அடங்கியது. எம். வே.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இடபம்&oldid=1462997" இலிருந்து மீள்விக்கப்பட்டது