கலைக்களஞ்சியம்/இந்தியாவில் டேனர்

விக்கிமூலம் இலிருந்து

இந்தியாவில் டேனர் : 1616-ல் டேனருடைய கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது. அப்போது தஞ்சையிலிருந்த மன்னரான இரகுநாத நாயக்கர் 1620 ல் டேனர் தரங்கம்பாடியில் வியாபார நிலையம் ஏற்படுத்திக் கொள்வதையனுமதித்தார். அவர்கள் வங்காளத்தில் சேரம்பூர் என்னுமிடத்தில் 1676-ல் ஒரு நிலையம் ஏற்படுத்திக் கொண்டனர். 1845-ல் இவ்விரு இடங்களையும் ஆங்கிலக் கிழக்கிந் தியக் கம்பெனிக்கு 12½ இலட்சம் ரூபாய்க்கு விற்று விட்டனர். தே. வெ. ம.