காற்றில் வந்த கவிதை/ஆமடி தங்கம்
காட்டிலே தினை விதைத்துப் பயிர் செய்வதென்ருல் எளிதிலே முடிகிறதா? மலைக்காடுகள் பண்படாத நிலையில் இருக்கும். கள்ளியும் கற்முழையும் வளர்ந்து புதராகக் கிடக்கும். அவற்றையெல்லாம் வெட்ட வேண்டும். முள்பெருக்கி நிலத்தைத் துப்புரவு செய்ய வேண்டும்.
இப்படியெல்லாம் செய்து விதைத்தாலும் கதிர் முற்றத் தொடங்குகிற காலத்திலே வெகு எச்சரிக்கையாகக் காவல் புரியவேண்டும். கிளி ஓட்ட வேண்டும். இல்லாவிட்டால் அத்தனை சிரமமும் விளுகிவிடும். தின விளைந்தாலும் வீடு வந்து சேரவேண்டுமல்லவா?
தினை விளைவிப்பதில் உள்ள சிரமத்தைக் கூறுவதிலிருந்தே உழவுத் தொழிலில் உள்ள சிரமத்தையெல்லாம் அறிந்து கொள்ளலாம். 'என்றும் உழவே இனிது' என்பது உண்மையான வாசகந்தான். உழவுத் தொழில் இனிது என்ருலும் எளிது அன்று. தினை விதைப்பைப் பற்றிய பாடலை இப் பொழுது பார்ப்போம்:கள்ளி வெட்டி-ஏலேலோ
முள் பெருக்கி-ஆமடி தங்கம்
முள் பெருக்கி-சொல்லடி மயிலே
கள்ளி வெட்டும்-ஏலேலோ
குழிதனிலே-ஆமடி தங்கம்
குழிதனிலே-சொல்லடி மயிலே
மான் வந்து ஏலேலோ
ஈனிடவே-ஆமடி தங்கம்
ஈனிடவிே-சொல்லடி-மயிலே
மானை நல்ல-ஏலேலோ
வலத்தில் கட்டி-ஆமடி தங்கம்
வலத்தில் கட்டி-சொல்லடி மயிலே
மனித ரிஷபம்-ஏலேலோ
இடத்தில் கட்டி-ஆமடி தங்கம்
இடத்தில் கட்டி-சொல்லடி மயிலே
என்ன தினை-ஏலேலோ
விதைப்ப மென்று-ஆமடி தங்கம்
விதைப்ப மென்று-சொல்லடி மயிலே
கருந்தினையும்-ஏலேலோ
செந்தினையும்-ஆமடி தங்கம்
செந்தினையும்-சொல்லடி மயிலே
ஒன்ருவது-ஏலேலோ
மாதத்திலே-ஆமடி தங்கம்
மாதத்திலே-சொல்லடி மயிலே
ஒரு சுருளாம்-ஏலேலோ
தினம்பயிரும்-ஆமடி தங்கம்
தினைப்பயிரும்-சொல்லடி மயிலே
இரண்டாவது-ஏலேலோ
மாதத்திலே-ஆமடி தங்கம்
மாதத்திலே-சொல்லடி மயிலே
இரு சுருளாம்-ஏலேலோ
தினைப் பயிரும்-ஆமடி தங்கம்
தினைப்பயிரும்-சொல்லடி மயிலே
மூன்ருவது-ஏலேலோ
மாதத்திலே-ஆமடி தங்கம்
மாதத்திலே-சொல்லடி மயிலே
காகம் வந்து-ஏலேலோ
தினையழிக்கும்-ஆமடி தங்கம்
தினையழிக்கும்-சொல்லடி மயிலே
யாராரை-ஏலேலோ
காவல் வைப்போம்-ஆமடி தங்கம்
காவல் வைப்போம்-சொல்லடி மயிலே
அசலாளை-ஏலேலோ
காவல் வைத்தால்-ஆமடி தங்கம்
காவல் வைத்தால்-சொல்லடி மயிலே
அடிமடியில்-ஏலேலோ
கதிர் ஒளிப்பாள்-ஆமடி தங்கம்
கதிர் ஒளிப்பாள்-சொல்லடி மயிலே
உள்ளாளை-ஏலேலோ
காவல் வைத்தால்-ஆமடி தங்கம்
காவல் வைத்தால்-சொல்லடி மயிலே
உள் மடியில்-ஏலேலோ
கதிர் ஒளிப்பாள்-ஆமடி தங்கம்
கதிர் ஒளிப்பாள்-சொல்லடி மயிலே
தங்கைதனை-ஏலேலோ
காவல் வைப்போம்-ஆமடி தங்கம்
காவல் வைப்போம்-சொல்லடி மயிலே