உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றில் வந்த கவிதை/ஏலேலோ ஐலலோ

விக்கிமூலம் இலிருந்து

ஏலேலோ ஐலலோ

பாட்டுக்கு ஒரு அற்புதமான சக்தி இருக்கிறது. அது உள்ளத்தை நெகிழ வைக்கிறது. கரையாத மனத்தையும் கரையச் செய்கிறது. கடவுளே பாட்டில் உருகி விடுவதாகச் சொல்லுகிறார்கள்.

சிரமப்பட்டு வேலை செய்யும் உழைப்பாளி பாடிக் கொண்டே வேலை செய்கிருன். அதனல் அவனுடைய சிரமம் குறைகிறதை அவன் உணர்கிருன்.

படகு தள்ளுகிறவன் பாட்டுப் பாடுகிருன். அவனுக்கும் தனது வேலையிலே இன்பம் பிறக்கிறது. படகிலே செல்லுகின்றவர்களும் அவன் பாட்டிலே லயித்து இன்பமடைகிறார்கள்.

ஒடப் பாட்டு என்று பல பாடல்கள் தமிழிலே இருக்கின்றன. ஏலேலோ ஐலலோ என்றும், ஏலேலோ ஏலலிலோ என்றும் அந்தப் பாட்டுக்களில் அடிக்கடி வரும். கேட்பதற்கு இன்பமாக இருக்கும்.

ரெயில் வண்டி வேகமாகப் போகிறதைப் பார்த்திருக் கிறீர்களா? பக்கத்திலிருந்து கவனித்தால் பூமியே நடுங்கு கிறதைப் போலிருக்கும். குப் குப் என்று ரெயில் செய்கின்ற சத்தமும் பயங்கரமாக இருக்கும்.

இந்த ரெயில் வேகத்தையும் சத்தத்தையும் ஒடக்காரன் பாட்டு ஒன்று அழகாகக் கூறுகிறது. வானம் நடுங்குகிறது. மத்தள ஓசை பொங்குகிறது. பூமி நடுங்குகிறது. இப்படி ரெயில் போகிறதாம்.

மானம் நல்ல ஏலேலோ கிடுகிடுங்க-ஐலலோ
                  கிடுகிடுங்க-ஐலலோ
மத்தளமே ஏலேலோ ஒசையிட-ஐலலோ
                  ஒசையிட-ஐலலோ
பூமிநல்ல ஏலேலோ கிடுகிடுங்க-ஐலலோ
                  கிடுகிடுங்க-ஐலலோ
போகுதடா ஏலேலோ ரயிலு வண்டி-ஐலலோ
                  ரயிலு வண்டி ஐலலோ
[குறிப்பு: இப்பாடலிலே ஐலலோ என்ற பகுதியை மட்டும் ஒடக்காரனேடு சேர்ந்து வேருெருவன் பாடுவான்.]

பாட்டு இத்துடன் முடிந்து விடவில்லை. ஒடக்காரன் மேலும் பாடுகிருன். ஆனால் இப்பொழுது பாட்டின் விஷயம் மாறுகிறது. ஒடக்காரன் கிளியைப் பற்றிப் பாடத் தொடங்குகிருன்.

அன்போடு வளர்த்தால் பிள்ளையைப்போலக் கிளி பழகும். வளர்ப்பவரிடத்திலே தாராளமாக வரும். அவர் தோளின்மீது உட்காரும். அவரோடு அன்போடு பேசவும் செய்யும். ஆனால், அன்பில்லாதவிடத்திலே அது பழகாது. அன்பில்லாமற் கூறும் சொல்லேக்கூட அது புரிந்து கொள்ளும். அப்படி அன்பில்லாத வார்த்தையைக் கேட்டு ஒரு கிளி பறந்தோடி விட்டதாம். அதை ஏலேலப் பாட்டுக் கூறுகிறது.

ஆலநல்ல ஏலேலோ மரத்துக்கிளி-ஐலலோ

மரத்துக்கிளி-ஐலலோ

ஆளைக் கண்டால் ஏலேலோ பேசுங்கிளி-ஐலலோ

பேசுங்கிளி-ஐலலோ

நான் வளர்க்கும் ஏலேலோ பச்சைக்கிளி-ஐலலோ

பச்சைக்கிளி-ஐலலோ

நாளைவரும் ஏலேலோ கச்சேரிக்கே-ஐலலோ

கச்சேரிக்கே-ஐலலோ

ஆசைக்குத்தான் ஏலேலோ கிளிவளர்த்து-ஐலலோ

கிளிவளர்த்து-ஐலலோ

அக்கரையில் ஏலேலோ மேயவிட்டேன்-ஐலலோ

மேயவிட்டேன்-ஐலலோ

பாவிப்பயல் ஏலேலோ சொன்ன சொல்லு-ஐலலோ

சொன்ன சொல்லு-ஐலலோ

பாவி சொல்லு ஏலேலோ பறந்திடுச்சு-ஐலலோ

பறந்திடுச்சு-ஐலலோ

[ஆல நல்ல மரத்துக்கிளி-ஆல மரத்தில் வளர்ந்த நல்ல கிளி. பறந்திடுச்சு-பறந்து விட்டது.