உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றில் வந்த கவிதை/கேலிப் பாட்டு

விக்கிமூலம் இலிருந்து
கேலிப் பாட்டு

சோம்பலை யாரும் பாராட்டமாட்டார்கள். சோம்பித் திரிகின்றவர் வாழ்க்கையிலே வெற்றி பெற முடியாது. அதனால்தான் பாரதியார் தமது பாப்பாப் பாட்டிலே, சோம்பல் மிகக் கெடுதி பாப்பா' என்று பாடி இருக்கிறார் .

நாட்டுப்புறத்தில் உள்ள மக்களில் பெரும்பாலோர் உடல் உழைப்பினலே வாழ்க்கை நடத்துகின்றவர்கள். அவர்கள் சோம்பேறிகளாக இருக்க முடியாது.

ஆளுல், அங்கேயும் சில சோம்பேறிகள் இருப்பார்கள். அவர்களே யாரும் மதிப்பதில்லை. அவர்கள் எல்லோருடைய இகழ்ச்சிக்கும் கேலிக்கும் ஆளாவார்கள். அப்படிப்பட்ட சோம்பேறி ஒருவனைக் கேலி செய்வதுபோல ஒரு பாட்டுண்டு. அந்தச் சோம்பேறி மண்வெட்டி வேலை செய்யாவிட்டாலும், ஆடுகளையாவது மேய்க்கக்கூடாதா? அதையும் செய்யமாட்டானாம். வெய்யிலே அவன் மேல் படக்கூடாது. அதே சமயத்தில் சோளச் சோறு அவன் தொண்டையில் இறங்காது. கேழ்வரகிலே களி செய்து ப்ோட்டால் கிளிபோலத் தின்பாளும். கூட்டில் அடைத்து வைத்துள்ள கிளி ஒரு வேலையும் செய்யாமல் சாப்பிடுகிறதல்லவா? கிளியாவது சொன்ன சொல்லைத் திருப்பிச் சொல்லுகிறது. இவன் யார் சொல்லையும் கேட்க மாட்டான். இவனைப் பற்றிய பாட்டைப் பார்க்கலாம்.

வெள்ளாடு மேய்க்க மாட்டான்
வெய்யிலிலே அலைய மாட்டான்
சோளச் சோறு தின்ன மாட்டான்
சொன்ன சொல்லைக் கேட்க மாட்டான்
களிக்கிண்டிப் போட்ட வுடன்
கிளி போலத் தின்பான் ஐயா!

இது வேலை செய்யாத சோம்பேறியாகத் திரியும் ஆண் மகனைக் கேலி செய்யும் பாட்டு. பெண்களைக் கேலி செய்கின்ற பாட்டும் உண்டு.

பெண்கள் தங்களுடைய அழகிலே பெருமையடைவார்கள். அவர்களைக் கேலி செய்வதாளுல் அவர்களுடைய அழகைப்பற்றி ஏதாவது சொன்னல் போதும், அதைவிட வேறு கேலி வேண்டாம்.

சின்னப்பன் என்கிற ஒருவன் ஒரு தூரி கட்டிளுைம். காட்டிலே நடந்த செய்தி இது. இரண்டு மரக்கிளைகளின் உதவியைக் கொண்டு அவன் தூரி அமைக்கிருன். ஊணுன் கொடி என்று ஒரு வகைக் கொடி உண்டு. அது நீளமாகப் படர்ந்திருக்கும். அது உறுதி வாய்ந்தது. எளிதில் அறுந்து போகாதது. அக்கொடியைக் கொண்டு காட்டிலே துரி கட்டி ஆடுவார்கள். சின்னப்பன் அப்படி ஒரு தூரி கட்டுகிறான்.

அவன் எப்படிப் பட்டவன்? கோணலான காலை உடையவன். அவன் போட்ட தூரியிலே ஒரு மங்கை ஆடுகிறாள். அவள் எப்படி இருக்கிருள்? பாட்டிலேயே அவளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

அந்த மரத்துக்கும் இந்த மரத்துக்கும்
                                                விட்டம் போட்டு
அழகான மாமரத்திலே தூரி போட்டு
கோணைக் காலுச் சின்னப்பன் போட்ட தூரி
குரங்கு மூஞ்சி நஞ்சக்காள் ஆடுந் தூரி !

கடவுளிடத்திலே பக்தி வேண்டும். அந்தப் பக்தியினலே மனிதன் உயர்வடைகிருன். பக்தியின் பெருமை கொஞ்ச மல்ல. நம் நாட்டிலே எத்தனையோ மகான்கள் தோன்றியிருக்கிருர்கள். பக்தியால் அடையக்கூடிய பெருமையை அவர்கள் நமக்குக் காட்டியிருக்கிருர்கள். அவர்களுடைய உபதேசங்களைப் பின்பற்றி நாம் இறைவனிடத்திலே பக்தி செலுத்தினால் உயர்ந்த வாழ்வு பெற முடியும்.

பக்தி என்பது உள்ளத்திலிருந்து தோன்ற வேண்டும்: வெளி வேஷமாக மட்டும் இருக்கக்கூடாது. பார்ப்பதற்குச் சிறந்த பக்தியுடையவன் போல இருப்பதில் பயனில்லை. உண்மையான பக்தியினுல்தான் பெருமை ஏற்படும்.

ஒருவன் திருப்பதிக்குப் போகிருன்; தலையை மொட்டையடித்துக் கொள்கிருன். ஆனால், அவன் மனம் தூய்மையடையவில்லை. அதில் கெட்ட எண்ணங்கள் நிறைந்திருக் கின்றன. அவற்றைப் போக்காமல் தலையை மட்டும் மொட்டை யடித்துக் கொண்டதால் என்ன பயன்?

திருப்பதியிலிருந்து அவன் வருகிருன். வழியிலே ஒரு கொல்லையைப் பார்க்கிருன். அதிலே கம்பு நன்ருக விளைந்திருக்கிறது. அவனுக்குக் கம்பங் கதிரிலே ஆசை விழுந்து விடுகிறது. இரண்டு கதிர் ஒடித்துக்கொள்கிருன். அந்தச் சமயத்திலே கொல்லைக்காரன் பார்த்துவிடுகிருன். பிறகு அவன் சும்மா இருப்பானா?

இந்தத் திருப்பதி மொட்டையைக் கேலி செய்து ஒரு பாடல் உண்டு. சிறுவர்கள் ஆடிக்கொண்டே இப்பாடலைப் பாடுவார்கள்.

திருப்பதிக்குப் போய் வந்தேன் நாராயணா
திருமொட்டை அடித்து வந்தேன் நாராயணா
அங்கே ஒரு கம்பங் கொல்லை நாராயணா
அதிலே ரண்டு கதிர் ஒடிச்சேன் நாராயணா
கொல்லைக்காரன் பார்த்து விட்டான் நாராயணா
கோலெடுத்து ஓடி வந்தான் நாராயணா !

பெண்கள் கூட்டமாகக் கூடிக் கும்மியடித்து விளையாடிக் கொண்டிருக்கிருர்கள். சாதாரணமாகக் கும்மியடிப்பதை எல்லோரும் பார்த்து மகிழ்வார்கள். அவர்களுடைய மகிழ்ச்சியிலே கும்.மியடிக்கிற பெண்களுக்கு உற்சாகம் இன்னும் அதிகமாகக் கிளம்பும்.

இது வழக்கமாக நடக்கிற நிகழ்ச்சி. ஆனால், அன்று அவர்கள் கும்.மியடிக்கிறபோது அத்தை மகனொருவன் அங்கு வந்து சேருகிருன். அவனைக் கேலி செய்யவேண்டுமென்று பாட்டை முதலில் தொடங்கும் பெண்ணுக்குத் தோன்றியது.

முதலில் கும்மிப் பாட்டு ஒழுங்காகத்தான் ஆரம்பிக்கிறது. அண்ணன்மாருடைய பெருமையை அது கூறுகிறது.

பெரிய கிணத்திலே பாம்படிச்சுப்
      பேரூரு வீதியில் வேட்டையாடி
வேட்டை யாடித்தானே வீட்டுக்கு வந்தார்கள்
      அண்ணன்மார் வந்தார்கள் தண்ணிர்கொடு.

சின்னக் கிணத்திலே பாம்படிச்சுச்
      சிங்காரத் தோப்பிலே வேட்டையாடி
வேட்டை யாடித்தானே வீட்டுக்கு வந்தார்கள்
      அண்ணன்மார் வந்தார்கள் தண்ணிர்கொடு.

அதற்கு மேலே விஷமம் தொடங்குகிறது. அத்தை மகனைக் கிண்டல் செய்கிருள் கும்மிப் பாட்டிலே.

நெல்லு விளஞ்சதைப் பாருங்கடி நெல்லுச் சாய்ந்ததைப் பாருங்கடி நேத்துப் பிறந்த அத்தை மகனுக்கு மீசை முளைச்சதைப் பாருங்கடி ஆத்திலே தண்ணிதான் ஓடாதா ஆராக் குஞ்சுதான் மேயாதா நேத்துப் பிறந்த அத்தை மகனுக்கு மீசை முளைச்சதைப் பாருங்கடி

[விளஞ்சதை-விகளந்ததை. நேத்து-நேற்று முளைச்சதை-முளைத்ததை, ஆத்திலே-ஆற்றிலே. தண்ணி தான்-தண்ணீர்தான். ஆராக்குஞ்சு-ஆரா என்னும் ஒரு வகை மீனின் குஞ்சு.]

இதைக் கேட்டதும் அத்தை மகனுக்கு ரோசம் வந்து விட்டது. அவனும் பதிலுக்குப் பாட ஆரம்பிக்கிருளும். அதுவும் கும்மிப் பாட்டுத்தான்.

கும்மி யடிக்கிற பெண்டுகளா ஒரு
கோளாறு சொல்லுறேன் கேளுங்கடி
அம்மியைத் தூக்கி மடியில் கட்டி
ஆழக் கிணற்றில் இறங்குங்கடி

[கோளா று-சூழ்ச்சி. கிணத்தில்-கிணற்றில்.] யாருமே வராத இடமாக வேண்டுமென்ருல் அத்தை மகன் சொல்கிற யோசனை சரியானதுதான்! அம்மியை மடியில் கட்டிக்கொண்டு ஆழக்கிணற்றில் இறங்கினல் என்ன ஆகும்? நீங்களே யோசனை செய்து கொள்ளுங்கள். ஆனல், அந்தப் பெண்கள் அத்தை மகனுடைய யோசனையைக் கேட்க வில்லை. அவனையே மடக்கி மேலும் பாடுகிருர்கள். அத்தை மகனுக்கு அவர்கள் சளைத்தவர்கள் அல்ல.

கும்மி யடிக்கிற பக்கத்திலே
      கூட்டமென்னடி ஆண் பிள்ளைக்கு?
பல்லுக் காரப் பையன் பல்லைப் பிடுங்கிக்
      குப்புறத் தள்ளடி ஆண் பிள்ளையை
கும்மியடிக்கிற பக்கத்திலே
      கூட்டமென்னடி ஆண் பிள்ளைக்கு
கம்பத்து மூளியின் பல்லைப் பிடுங்கிக்
      குப்புறத்தள்ளடி ஆண் பிள்ளையை