காற்றில் வந்த கவிதை/மழைக் கஞ்சி

விக்கிமூலம் இலிருந்து

மழைக் கஞ்சி

ழையின் அவசியத்தை எல்லோரும் உணர்ந்திருக்கிறோம். அது உயிர்களைக் காக்கும் வானமுது. மழை இல்லாவிட்டால் விளைவு இல்லை; அறுவடை இல்லை. உணவு இல்லை. பசிப்பிணியால் வாடி மக்கள் மடிய வேண்டியது தான். மழையே வாழ்விற்குப் பிரதானம் என்பதை நிலத்தை உழுது, தாமும் உண்டு, உலகத்திற்கும் உண வளிக்கும் குடியானவர்களே மிக நன்கு உணர்வார்கள்.

பருவத்தில் மாரி பெய்யாது போனல் நிலம் வரண்டு விடுகிறது. பசும்புல் அற்றுப் போய் விடுகிறது. கால் நடைகள் வாடுகின்றன. மக்கள் வயிறு காய்கின்றது. உழவன் இதைக் கண்டு வருந்துகிருன்: உழத்தி சோர் வடைகின்ருள்.

மழை பெய்யுமா, நாடு செழிக்குமா என்று ஆவலோடு குறி கேட்கிறார்கள். மழைப் பாட்டுப் பாடிக்கொண்டு யாராவது வருகிரு.ர்களா என்று பார்க்கிருர்கள். அவர்கள் ஒருவரையெருவர் சந்திக்கும்போதெல்லாம் மழையைப்பற்றியே பேசிக் கொள்ளுகிருர்கள். வேற்றுார்களிலிருந்து யாராவது வந்தால் அவரிடம் மழை வளத்தைப் பற்றித் தான் விசாரணை.

சில சமயங்களில் பருவம் கடந்தாவது வானம் பெய்துவிடும். சில சமயங்களில் அதுவும் இல்லாமல் போய்விடும். கொங்கு நாட்டில் சில பகுதிகளில் இப்படி ஏற்படுவது சகஜம். குடிக்கக் கஞ்சி இராது. அதோடு தண்ணீரும் சில ஊர்களில் அற்றுப் போய்விடும். கிணறுகளெல்லாம் வறண்டு கிடக்கும்.

இப்படிப் பெரிய நெருக்கடி ஏற்படும் காலத்தில்தான் மழைக் கஞ்சி எடுக்க வேண்டும் என்று ஊர் மக்கள் முடிவு கட்டுகிருர்கள். ஊரிலுள்ள பெண்களெல்லாம் சேர்ந்து கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று பிச்சை எடுப்பார்கள். அரிசி, ராகி, சோளம், கம்பு என்று இப்படி எல்லாத் தானியங்களும் கிடைக்கும். அவற்றை எல்லாம் ஒன்ருகச் சேர்த்து அரைத்து மாவாக்கி ஊர்ப் பொது இடத்தில் ஒரு பெரிய பானையில் இட்டுக் கஞ்சி காய்ச்சுவார்கள்.

உப்பு இல்லாத கஞ்சி அது. ஆண் பெண் அனைவருக்கும் வழங்கப்படும். எல்லோரும் அதை அங்கேயே குடித்தானவுடன், பெண்கள் தங்கள் குழந்தைகளை எடுத்துக்கொண்டு பரதேசம் போவதாகப் பாவனை செய்து புறப்படுவார்கள்.

இந்தச் சமயத்தில் அவர்கள் மழையில்லாது படும் கஷ்டங்களெல்லாம் ஒரு பாட்டாக வெளிவரும்.

வருண தேவனைக் குறித்து அந்தப் பெண்கள் புலம்புகிறார்கள். வருணன்தானே மழைக்குக் காரணம்? அதனல் அவனை அடிக்கடி, 'ஐயோ வருணதேவா' என்று கூப்பிட்டுத் தங்கள் முறையீட்டைத் தெரிவிக்கிருர்கள். 'பூமி எந்நாளும் செழித்திருந்து உணவளிக்கும் என்று நம்பி அல்லவா நாங்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்தோம்? இப்பொழுது மழையில்லாமையால் பூமி செழிக்கவில்லையே, அதனால் எங்கள் மக்கள் வயிறு வாடுகின்றதே" என்று அவர்கள் நெஞ்சம் குமுறுகிருர்கள்.

பூமியை நம்பியல்லோ
      ஐயோ வருண தேவா
புள்ளைகளைப் பெத்துவிட்டோம்
      ஐயோ வருண தேவா
பூமி செழிக்கவில்லே
      ஐயோ வருண தேவா
புள்ளை வயிறு வாடறதே
      ஐயோ வருண தேவா
மானத்தை நம்பியல்லோ
      ஐயோ வருண தேவா
மக்களையும் பெத்து விட்டோம்
      ஐயோ வருண தேவா
மாணஞ் செழிக்கவில்லை
      ஐயோ வருண தேவா
மக்கள் வயிறு வாடறதே
      ஐயோ வருண தேவா

[புள்ளைகள்-பிள்ளைகள்; மானம்-வானம்: ம ைழ. பெத்து-பெற்று.]

உயிர்களை எல்லாம் காப்பாற்றும் உழவன் இன்று முகம் சோர்ந்து நிற்கிறான். உழத்தியர்கள் உணவுக்காக வேலியில் வறண்டு போகாது தப்பி இருக்கும் ஒன்றிரண்டு தழைகளைப் பறித்து விரலெல்லாம் கொப்புளித்துப் போய்விட்டார்கள். வருணதேவனுக்கு இன்னும் கருணை இல்லையா?

மேழி பிடிக்குங் கை முகஞ் சோர்ந்து நிற்கிறதே
கலப்பை பிடிக்குங் கை கை சோர்ந்து நிற்கிறதே
வேலித் தழைபறித்து விரலெல்லாம் கொப்புளமே
காட்டுத் தழைபறித்துக் கையெல்லாம் கொப்புளமே

என்று அங்கலாய்க்கிறார்கள்.

"கையலம்பத் தண்ணீர் இல்லையே, குழந்தை குளிப் பதற்குத் தண்ணிர் இல்லையே. இப்படி எத்தனை நாட்களுக்கு நாங்கள் இங்கு இருந்துகொண்டு பரிதவிப்பது?" என்று மேலும் அவர்கள் கூவுகின்ருர்கள்.

கலியான வாசலிலே கையலம்பத் தண்ணியில்லை பிள்ளை பெத்த வாசலிலே பிள்ளையலம்பத் தண்ணியில்லை

இதைவிடக் கஷ்டம் வேறு என்ன வேண்டும்? ஆதலினாலே, இவற்றை எல்லாம் தாங்க முடியாமல் நாங்கள் ஊரைவிட்டுப் போகிருேம் என்று சொல்லி அழுதுகொண்டு பெண்கள் புறப்படுவார்கள்.

அவர்களுடைய பாட்டிலே உண்மையான சோகம் தொனிக்கிறது. அந்தப் பாட்டை முழுதும் கேளுங்கள்.

பூமியை நம்பியல்லோ
      ஐயோ வருண தேவா
பிள்ளைகளைப் பெத்துவிட்டோம்
      ஐயோ வருண தேவா
பூமி செழிக்கவில்லை
      ஐயோ வருண தேவா
புள்ளே வயிறு வாடறதே
      ஐயோ வருண தேவா

மானத்தை நம்பியல்லோ
      ஐயோ வருண வேதா
மக்களையும் பெத்துவிட்டோம்
      ஐயோ வருண தேவா
மானஞ் செழிக்கவில்லை
      ஐயோ வருண தேவா
மக்கள் வயிறு வாடறதே
      ஐயோ வருண தேவா
மேழி பிடிக்குங் கை
      முகஞ்சோர்ந்து நிற்கிறதே
கலப்பை பிடிக்குங் கை
      கைசோர்ந்து நிற்கிறதே
வேலித் தழை பறித்து
      விரலெல்லாம் கொப்புளமே
காட்டுத் தழை பறித்து
      கையெல்லாம் கொப்புளமே
கலியான வாசலிலே
      ஐயோ வருண தேவா
கையலம்பத் தண்ணியில்லை
      ஐயோ வருண தேவா
பிள்ளை பெத்த வாசலிலே
      ஐயோ வருண தேவா
பிள்ளையலம்பத் தண்ணியில்லை
      ஐயோ வருண தேவா

இப்படி அவர்கள் பாடிக்கொண்டு புறப்படும் தருணத்தில் அவ்வூரிலுள்ள பெரிய தனவந்தர்கள் அவர்களைத் தடுத்து, "நீங்கள் ஊரைவிட்டுப் போக வேண்டாம். சீக்கிரம் மழை பெய்து நாடு செழித்துவிடும். பயப்படாதீர்கள். அதுவரை வேண்டுமாளுல் நாங்கள் சேமித்து வைத்துள்ள தானியங்களை உங்களுக்குக் கொடுக்கிருேம். சேரைப் பிரித்துத் தாராளமாகத் தானியம் வழங்குகிருேம். ஊரைவிட்டுப் போகாதீர்கள்" என்று நல்ல வார்த்தை சொல்லுவது போலப் பின்வரும் பாடலைப் பாடுவார்கள்.

சேரைப் பிரிச்சுத்தாரேன் சிராட்டுப் போவாதீங்கோ
குத்தாரி பிரிச்சுமக்குக் கூடைத்தவசம் நான்தாரேன்
சீமை செழித்துவிடும் செல்லமழை பேஞ்சுவிடும்
நாடு செழித்துவிடும் நல்ல மழை பேஞ்சுவிடும்

இப்படிப் பாடுகின்ற சமயத்திலே பெய்துவிடுமாம். மழைக் கஞ்சி எடுத்தால் நிச்சயம் மழை பெய்தே தீரும் என்று கிராமத்து மக்கள் சொல்லுகிரு.ர்கள். எல்லோரும் பரிந்து கேட்கிறபோது வருண தேவனுக்குத்தான் இரக்கம் உண்டாகாமலா போய்விடும்?