குடும்பப் பழமொழிகள்/மரணம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மரணம்

மரணத்தின் காரணம் பிறப்பு.
- பௌத்தம்
மனிதன் பிறந்தவுடன் மரிக்கத் தொடங்குகிறான்.
- இங்கிலாந்து
இறந்தவனுக்குக் குளிரில்லை.
-( , , )
திடீர் மரணம் திடீர் இன்பம்
-( , , )
வைத்தியருக்கும் மரணம் உண்டு.
-( , , )
மரணத்தறகு அஞ்சுபவன் வாழ்பவனாகான்.
-( , , )
பிறப்பது போலவே, இறப்பதும் இயற்கை.
-( , , )
முற்றும் கனிந்த கனி முதலில் விழும்.
-( , , )
பிறக்கும் பொழுதுதான் நாம் அழுகிறோம், மரிக்கும் பொழுதன்று.
-( , , )
எல்லா மனிதரும் சீரஞ்சீவிகளா யிருக்கவே விரும்பு கின்றனர்.
-( , , )
வாழ்வில் (நன்கு) வாழாதவன் மரணத்திற்குப் பின்னும் வாழமாட்டான்.
-( , , )
மறு வாழ்க்கையை அலட்சியம் செய்பவன் இந்த வாழ்க்கைக்குத் தீங்கிழைக்கிறான்.
- யங்
நித்தியமான வாழ்க்கையைத் தவிர வேறில்லை என்றே நான் நினைக்கிறேன் என்பதைச் சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.
-விட்மன்

நித்தியமான வாழ்க்கையை விரும்புதல் ஒரு பெரிய தவறுதலை நிரந்தரமாக நிலைக்கும்படி செய்வதாகும்.

-ஷேக்ஸ்பியர்
நீயோ பழுதி, புழுதிக்கே நீ திரும்பவேண்டும்.
-ப. ஏற்பாடு
இலை வாடுவது போல், நாம் அனைவரும் வாடிவிடுவோம்.
-( , , )
மரணம் கொம்பு ஊதிக் கொண்டு வருவதில்லை.
-டென்மார்க்
அதிருஷ்டம் சிலருக்கே உண்டு, மரணம் எல்லோர்க்கும். உண்டு.
-( , , )

ஒருவருக்காக மற்றொருவர் உயிர் துறக்க முடியாது.

-ஃபிரான்ஸ்
பாம்பு சாகும் பொழுதே அதன் விடமும் செத்துவிடும்.
-( , , )
மரணம் என்பது புனிதமான உறக்கம்.
- கிரீஸ்
பகலை இரவில் புகழுங்கள், வாழ்வை முடிவில் புகழுங்கள்.
-( , , )
புகழ் பெற்ற மனிதர்க்கு உலகு அனைத்துமே சமாதி.
-( , , )
மரணம் ஆண்டிக்கும் உண்டு, போப்பாண்டவருக்கும் உண்டு.
- இதாலி
இறந்தவன் ஒருவனைத் தூக்க நாலு பேர் வேண்டும்.
-( , , )
ஆறடி நிலம் அனைவரையும் சமானமாக்குகின்றது.
-( , , )
மரணம் மருத்துவருக்கு அஞ்சாது.
-லத்தீன்
ஓடுகிறவனுக்கு முன்னால் மரணம் ஓடி நிற்கும்.
-( , , )
மரணம்- வாழ்க்கையின் வாயில்.
-( , , )
இறந்தவனுக்கு மரியாதை நம் நினைவு, கண்ணீர் அன்று.
-( , , )
மரணத்தின் நினைவோடு வாழ்வாயாக.
-( , , )
செத்தவனைத் தொடர்ந்து கொன்றவனும் விரைந்து செல்கிறான்.
-லத்தீன்
தன் காலம் முடியாமல் எவனும் இறப்பதில்லை.
-யூதர்
இளைஞர் இறக்கக்கூடும், முதியோர் இறந்தே ஆகவேண்டும்.
-( , , )
வீட்டிலே மருந்து இருக்கிறது, ஆனாலும் நாம் மரிக்க வேண்டியவர்களே.
- இந்தியா
பிறப்பதற்கு ஒரு நாளுண்டு, இறப்பதற்கும் ஒரு நேரமுண்டு.
-சீனா
பிறத்தல் என்பது வெளியே வருதல், இறத்தல் என்பது திரும்பிச் செல்லல்.
-( , , )
மரணம் நமது விருந்தாளி.
- குர்திஸ்தானம்
மனிதன் பிறக்கும் பொழுது, அவன் அழுகிறான், மற்றவர்கள் சிரிக்கிறார்கள்; அவன் இறக்கும் பொழுது, அவன் சிரிக்கிறான், மற்றவர்கள் அழுகிறார்கள்.
-ஜெர்மனி
சவப் பெட்டி தொட்டிலின் சகோதரன்.
-( , , )
(நாள் பார்த்துவர)
மரணத்திடம் பஞ்சாங்கம் கிடையாது.
- இங்கிலாந்து
செத்த மீன்கள் வெள்ளத்தோடு பேயாவிடும்.
-( , , )
மரணமே உலகின் யசமானன்.
- அயர்லந்து
மரணம் உண்மையே பேசும்.
-பல்கேரியா
மரணமில்லாவிட்டால், வாழ்க்கை அற்புதமானதுதான்.
-( , , )
அவன் பாயைச் சுருட்டும் நேரம் வந்து விட்டது.
-ஜெர்ஸீ

[மரணத் தருவாய்]

மனிதன் மரணத்தின் குழந்தை.
- எஸ்டோனியா
சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டியுள்ளது மரணம்.
-எஸ்டோனியா
பிறப்பைத் தப்ப முடியாதவன் இறப்பையும் தப்பமுடியாது.
- பின்லந்து
உலகத்தைவிட்டு வெளியேறுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன; ஆனால் இங்கு வருவதற்கு ஒரே வழிதான் உண்டு.
-போர்ச்சுகல்
மரணத்திற்கு விலை உண்டு; வாழ்வைக் கொடுத்து மரணத்தை வாங்க வேண்டியிருக்கிறது.
-ரஷ்யா
மரணம் வீட்டுக்கு வந்துவிட்டால், மரண அவஸ்தை தீர்ந்தது.
-( , , )
கண்ணீர் உயிரைப் பிடித்து வைக்க முடியாது.
- ஆப்பிரிகா
செத்தவற்றிலும் உயிருள்ளவை இருக்கும், உயிருள்ளவைகளிலும் இறந்தவை இருக்கும்.
-( , , )
மரணம் வீட்டின் உடைமைக்காரன், அந்நியனல்லன்.
-( , , )
தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருப்பதைவிட, ஒரேயடியாக மரித்தல் மேலானது.
-கிரீஸ்
மனிதர் நியாயமற்ற முறையில் மரணத்தை வெறுக்கின்றனர்; அவர்களுடைய பல துயரங்களுக்கும் அதுவே காப்பாயிருக்கின்றது.
-( , , )
மரணத்தில் பயங்கரம் ஒன்றுமில்லை, கேவலமான மரணமே அத்தகையது.
-( , , )

நல்ல மரணம் வாழ்வு முழுவதும் பெருமையளிப்பது.

- இதாலி

உழைப்பு, கவலைகளிலிருந்து ஓய்வு பெறுவது மரணம்.

-லத்தீன்
மரணம் எல்லாப் பொருள்களையும் சமமாக்குகின்றது.
-( , , )
மரணம் உனக்காக எங்கே காத்திருக்கும் என்பது நிச்சயமில்லை; ஆதலால் அதை எங்குமே எதிர்பார்க்க வேண்டும்.
-லத்தீன்
போய் விட்டான் என்று நீங்கள் சொல்பவன் (நமக்கு) முன்னால் போய் நிற்கிறான்.
-( , , )
உன் கடைசி நாளை எண்ணி அஞ்சவும் வேண்டாம், அதை விரும்பவும் வேண்டாம்.
-( , , )
இறந்தோரைப் பற்றிப் பெருமையாக மட்டும் பேசு.
-லத்தீன்
மரணத்திற்கு மருந்தில்லை.
-( , , )
மரணம் வயது முதிர்ந்ததைக் கொண்டு போவதில்லை, பழுத்ததையே கொண்டு போகின்றது.
-ரஷ்யா
மரணம் குட்டிகளையும், ஆடுகளையும் சேர்த்து விழுங்குகின்றது.
- ஸ்பெயின்
மரணம் உண்மையைப் புலப்படுத்துகின்றது.
- யூதர்