குடும்பப் பழமொழிகள்/மருந்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மருந்து

சுத்தமான தண்ணீரே உலகின் முதன்மையான மருந்து.

-ஸ்லாவேகியா
இனிப்பான மருந்துகளும், இன்பமான நோய்களும் உண்டா ?
- இந்தியா
சாவைத் தடுக்க மருந்தில்லை.
-( , , )
ஒற்றடம் போடுதல் பாதி வைத்தியம்.
-( , , )
பூடு தின்ற பின்னும் நோய் தீரவில்லை.
-( , , )

[உள்ளிப்பூடு அவ்வளவு விசேஷமாகக் கருதப்படுகின்றது.]

பட்டினி யிருத்தல் பரம ஔடதம்.
-( , , )
விடத்திற்கு மருந்து விடம்தான்.
-( , , )
மருந்து கால் பாகம், மதி முக்கால் பாகம்.
- தமிழ்நாடு
குரங்குப் புண்ணுக்கு மருந்தில்லை.
-( , , )

மருந்தை உண்டு பத்தியம் காவாதவன் வைத்தியரின்

திறமையை வீணாக்குகிறான்.
சீனா
மருந்து கொல்லுவதில்லை, வைத்தியரே கொல்லுகிறார் .
-( , , )

பல மனிதர்கள் நோய்களால் மடிவதில்லை, தாம் உண்ட

மருந்துகளாலேயே மடிகின்றனர்.
- ஃபிரான்ஸ்
அளவில்லாவிட்டால், மருந்தும் விஷமாகும்.
- போலந்து
கடவுள் ஒவ்வொரு பிணிக்கும் ஒரு பச்சிலை அளித்திருக்கிறார்.
-பல்கேரியா
வாழவேண்டியவனுக்கு மருந்துக்குப் பஞ்சமில்லை.
-( , , )

பச்சிலைகளில் சிறந்தவை பசி, உழைப்பு, வியர்வை.

- குரோஷியா
நாள்தோறும் ஆப்பிள் உண்பவன் வைத்தியர் பிழைப்பைக் கெடுக்கிறான்.
- ஸெக்
நாய்க்கடிக்கு நாயின் ரோமம் மருந்தாகும்.
-ஹங்கேரி
வெந்நீரும், 'எனிமா'வும் கொண்டே எல்லாப் பிணிகளையும் குணமாக்கலாம்.
- இதாலி
[குடலில் நீரேற்றும் குழாய் 'எனிமா.']
பூடு ஏழு பிணிகளைத் தீர்க்கும்.
-ரஷ்யா
தலையில் வலி யெடுத்தால், மூட்டில் தைலம் தடவு.
-ஸ்பெயின்

உணவோடு சேர்த்து மருந்தைக் கொடுத்தால், நோய் குணமாகா விட்டாலும், பசியாவது ஆறும்.

- ஆப்பிரிகா