நான் நாத்திகன் – ஏன்?

விக்கிமூலம் இலிருந்து
கீழ்கண்ட வடிவங்களில் பதிவிறக்கலாம்

புது மின்கருவிகளுக்கான, ePub-3ஆக பதிவிறக்குகmobi (kindle) ஆக பதிவிறக்குகtxt கோப்பாக பதிவிறக்குக

A4 pdfஆக பதிவிறக்குகrtfஆக பதிவிறக்குகhtmlஆக பதிவிறக்குக

A5 pdfஆக பதிவிறக்குகA6 pdfஆக பதிவிறக்குகUS-letter-pdfஆக பதிவிறக்குக

பழைய கருவிகளுக்கான, ePub-2ஆக பதிவிறக்குக

 

நான் நாத்திகன் ஏன்?

 

– பகத்சிங்

 

 

நான் நாத்திகன் – ஏன்?

 

ஆக்கியோன்‌ :

K. பகத்சிங்‌

 

மொழிபெயர்ப்பாளர்‌:

தோழர்‌ ப. ஜீவானந்தம்‌

 

பெரியார்‌ சுயமரியாதைப்‌ பிரசார நிறுவன வெளியீடு,


50, ஈ. வெ. கி. சம்பத்‌ சாலை, சென்னை - 600 007

1932

 

முதற்பதிப்பு — 1934

அய்ந்தாம் பதிப்பு — 1982

 

© பதிப்புரிமை பெற்றது

 

விலை:75 காசுகள்‌

 

அறிவுக்கடல் அச்சகம், வேப்பேரி, சென்னை-600 007.

 

முதற்பதிப்பின்
முன்னுரை

நான் நாத்திகன் — ஏன்? என்னும் இந்நூல் தோழர் சர்தார் கே. பகத்சிங் அவர்களால் லாகூர் சிறைக்கோட்டத்திலிருந்து அவரது தந்தையார்க்கு காவற்கூட அதிகாரிகளின் அனுமதியின் மீது எழுதப்பட்ட ஓர் கடிதமாகும். அக்கடிதத்தை தோழர் பகத்சிங் அவர்களின் தகப்பனார் லாகூரிலிருந்து வெளிவரும் “ஜனங்கள்” என்னும் ஆங்கிலக்கிழமை வெளியீட்டில் பிரசுரித்திருந்தார். அக்கடிதத்தை மொழிபெயர்த்து புத்தக ரூபமாய் வெளியிட வேண்டுமென்று பல தோழர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சென்னை மாகாண நாத்திக சங்க அமைச்சர் தோழர். ப. ஜீவானந்தம் அவர்களால் இனிய தமிழில் மொழிபெயர்த்து நமக்குக் கொடுக்கப்பட்டதாகும்.

தோழர் பகத்சிங் அவர்களின் அரசியல் கொள்கைகள் முழுவதும் நமக்கு உடன்பாடல்லவெனினும், கடவுள் சம்பந்தமாய் அவரது அபிப்பிராயத்தை பொதுவாய் தமிழ்நாட்டாரும் — சிறப்பாய் காங்கிரஸ்காரர்கள் என்போரும் தெள்ளிதில் அறிந்துய்யும் பொருட்டே இந்நூலை வெளியிட முன்வந்தோம்.

தனது பல நற்பணிகளுக்கிடையே மொழிபெயர்த்துக் கொடுத்த தோழர் ப. ஜீவானந்தம் அவர்கட்கு நமது நன்றியுரித்தாகுக.

ஈரோடு,
2 - 4 - 1934

பகுத்தறிவு
நூற்பதிப்புக் கழகத்தார்

 

பதிப்புரை


“நான் நாத்திகன் — ஏன்?” என்ற நூல் தோழர் பகத்சிங்கின் புகழ்பெற்ற நூலாகும். தோழர் பகத்சிங் ‘புரட்சி வீரன்,’ ‘தூக்குக் கயிற்றை முத்தமிட்ட தீரன் என்று வெளி உலகம் அறிந்த அளவுக்கு, அவற்றை எல்லாம் விட ‘அவன் ஒரு நாத்திகன்’ என்பதை அறிய முடியாமல் அவன் நாத்திகம் மிக ஜாக்கிரதையாக இருட்டடிக்கப்பட்டு விட்டது இந்நாட்டில். 1934-ம் ஆண்டு முதன் முதலாக இந்நூலை வெளியிட்டோம். அடுத்து, “உண்மை” இதழில் இதாடர்ந்து வெளியிடப்பட்டது. அது மீண்டும் நூல் வடிவில் வெளிவர வேண்டும் என்று அன்பர்கள் ஆர்வம் காட்டினர். இப்பொழுது மீண்டும் அய்ந்தாம் பதிப்பாக வெளிவருகிறது. படியுங்கள் — அந்தப் பச்சை நாத்திகனை அறியுங்கள்!

–பதிப்பகத்தார்

 

உள்ளடக்கம்
"https://ta.wikisource.org/w/index.php?title=நான்_நாத்திகன்_–_ஏன்%3F&oldid=1520010" இலிருந்து மீள்விக்கப்பட்டது