நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்[தொகு]

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்[தொகு]

2.பொருட்பால்: 1.அரசியல்[தொகு]

[அஃதாவது, பொருளினுடைய பகுப்பாம்]


பதினாறாம் அதிகாரம் மேன்மக்கள்

[அஃதாவது, மேன்மக்கள் தலைமையைச் சொல்லுதலாம்]பாடல்: 151 (அங்கண்)[தொகு]

அங்கண் விசும்பி னகனிலா பாரிக்குந்|அம் கண் விசும்பின் அகல் நிலா பாரிக்கும்

திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மற்- றிங்கண்|திங்களும் சான்றோரும் ஒப்பர் மன் - திங்கள்

மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து|மறு ஆற்றும் சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்து

தேய்வ ரொருமா சுறின். (01)|தேய்வர் ஒரு மாசு உறின். (௧)

பதவுரை:


கருத்துரை:


விசேடவுரை:

பாடல்: 152 (இசையுமெனினு)[தொகு]

இசையு மெனினு மிசையா தெனினும்|இசையும் எனினும் இசையாது எனினும்

வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையி|வசை தீர எண்ணுவர் சான்றோர் - விசையின்

னரிமா வுரங்கிழித்த வம்பினிற் றீதோ?|நரி மா உரம் கிழித்த அம்பினில் தீதோ

வரிமாப் பிழைப்பெய்த கோல். (02)|அரிமா பிழைப்பு எய்த கோல். (௨)

பாடல்: 153 (நரம்பெழுந்து)[தொகு]

நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றோர்|நரம்பு எழுந்து நல் கூர்ந்தார் ஆயினும் சான்றோர்

குரம்பெழுந்து குற்றங்கொண் டேறா- ருரங்கவறா|குரம்பு எழுந்து குற்றம் கொண்டு ஏறார் - உரம் கவறு ஆ

வுள்ளமெனு நாரினாற் கட்டி யுளவரையாற்|உள்ளம் எனும் நாரினால் கட்டி உள வரையால்

செய்வர் செயற்பா லவை. (03)|செய்வர் செயல் பால் அவை. (௩)

பாடல்: 154 (செல்வுழிக்)[தொகு]

செல்வுழிக் கண்ணொருநாட் காணினுஞ் சான்றவர்||செல்வுழிக் கண் ஒரு நாள் காணினும் சான்றவர்

தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் - புரிந்தியாப்பர்||தொல் வழி கேண்மையில் தோன்ற - புரிந்து யாப்பர்

நல்லவரை நாட சிலநா ளடிப்படிற்||நல்ல வரை நாட சில நாள் அடி படில்

கல்வரையு முண்டா நெறி. (04)||கல் வரையும் உண்டாம் நெறி. (௪)

பாடல்: 155 (புல்லா)[தொகு]

புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி||புல்லா எழுத்தில் பொருள் இல் வறும் கோட்டி

கல்லா வொருவ னுரைப்பவுங் - கண்ணோடி||கல்லா ஒருவன் உரைப்பவும் - கண் ஓடி

நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன்||நல்லார் வருந்தியும் கேட்பரை மற்று அவன்

பல்லாரு ணாணல் பரிந்து. (05)||பல்லாருள் நாணல் பரிந்து. (௫)

பாடல்: 156 (கடித்துக்)[தொகு]

கடித்துக் கரும்பினை கண்டகர நூறி||கடித்து கரும்பினை கண் தகர நூறி

யிடித்துநீர் கொள்ளினு மின்சுவைத்தே - யாரும்||இடித்து நீர் கொள்ளினும் இன் சுவைத்தே - யாரும்

வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார்||வடு பட வைது இறந்த கண்ணும் குடி பிறந்தார்

கூறார்தம் வாயிற் சிதைந்து. (06)||கூறார் தம் வாயில் சிதைந்து. (௬)

பாடல்: 157 (கள்ளார்)[தொகு]

கள்ளார்கள் ளுண்ணார் கடிவ கடிந்தொரீஇ||கள்ளார் கள் உண்ணார் கடிவ கடிந்து ஒரீஇ

யெள்ளிப் பிறரை யிகழ்ந்துரையார் - தள்ளியும்||எள்ளி பிறரை இகழ்ந்து உரையார் - தள்ளியும்

வாயிற்பொய் கூறார் வடுவறு காட்சியார்||வாயில் பொய் கூறார் வடு அறு காட்சியவர்

சாயிற் பரிவ திலர். (07)||சாயில் பரிவது இலர். (௭)

பாடல்: 158 *(பிறர்மறை)*[தொகு]

பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்||பிறர் மறையின் கண் செவிடு ஆய் திறன் அறிந்து

தேதில ரிற்கட் குருடனாய்த் - தீய||ஏதிலர் இல் கண் குருடனாய் - தீய

புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாது||புறம் கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்

மறங்கூற வேண்டா வவற்கு. (08)||அறம் கூற வேண்டா அவற்கு. (௮)

பாடல்: 159 (பன்னாளுஞ்)[தொகு]

பன்னாளுஞ் சென்றக்காற் பண்பிலார் தம்முழை|பல் நாளும் சென்றக்கால் பண்பு இலார் தம் உழை

யென்னானும் வேண்டுப வென்றிகழ்ப- யென்னானும்|என் ஆனும் வேண்டுப என்று இகழ்ப - என் ஆனும்

வேண்டினு நன்றுமற் றென்று விழுமியோர்|வேண்டினும் நன்று மற்று என்று விழுமியோர்

காண்டொறுஞ் செய்வர் சிறப்பு. (09)|காண் தொறும் செய்வர் சிறப்பு. (௯)

பாடல்: 160 (உடையாரிவ)[தொகு]

உடையா ரிவரென் றொருதலையாப் பற்றிக்||உடையார் இவர் என்று ஒரு தலையா பற்றி

கடையாயார் பின்சென்று வாழ்வ - ருடைய||கடையாயார் பின் சென்று வாழ்வர் -உடைய

பிலந்தலைப் பட்டது போலாதே நல்ல||பிலம் தலை பட்டது போலாதே நல்ல

குலந்தலைப் பட்ட விடத்து. (10)||குலம் தலை பட்ட இடத்து. (௰)


‘மேன்மக்கள்’ அதிகாரம் முற்றிற்று.


பார்க்க[தொகு]

நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரை

2.பொருட்பால்: 1.அரசியல்

நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
[[]]
நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
[[]]