நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை

விக்கிமூலம் இலிருந்து

சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்[தொகு]

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்[தொகு]

2.பொருட்பால்: 1.அரசியல்[தொகு]

[அஃதாவது, பொருளினுடைய பகுப்பாம்]


பதினேழாம் அதிகாரம் பெரியாரைப் பிழையாமை

[அஃதாவது, பெரியோர்களைப் பிழை சொல்லாமையாம்]

பாடல்: 161 (பொறுப்பரென்)[தொகு]

பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்//பொறுப்பர் என்று எண்ணிப் புரை தீர்ந்தார் மாட்டும்

வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்தபின்//வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்த பின்

னார்க்கு மருவி யணிமலை நன்னாட//ஆர்க்கும் அருவி அணி மலை நல் நாட

பேர்க்குதல் யார்க்கு மரிது. (01)|// பேர்க்குதல் யார்க்கும் அரிது. (௧)

பதவுரை:

ஆர்க்கும் = சத்திக்கும்,
அருவி = வையையாற்றையும்,
அணி = அழகிய,
மலை = பொதியமலையையும்,
நல் = நல்ல,
நாட = பாண்டி நாட்டையுமுடைய பாண்டியனே!,
பொறுப்பர் என்று = குற்றம் பொறுப்பார் என்று,
எண்ணி = நினைத்து,
புரை தீர்ந்தார் = குற்றமற்றவர்,
மாட்டும் = இடத்தும்,
வெறுப்பன = வெறுக்கத்தக்கவைகளை,
செய்யாமை வேண்டும் = செய்யாதிருக்க வேண்டும்;
வெறுத்தபின் = வெறுத்தபின்பு,
பேர்க்குதல் = (அவர் கோபத்தை) நீக்கல்,
யார்க்கும் = யாவர்க்கும்,
அரிது = அருமை.

கருத்துரை:

பாண்டியனே! குற்றமற்றவரிடத்தும் குற்றஞ் செய்யாதிருப்பாயாக. அவர்கள் கோபித்தபின் கோபத்தை நீக்குதல் யார்க்குமரிது.

விசேடவுரை:

பேர்க்குதல் - எழுவாய், அரிது - பயனிலை.

பாடல்: 162 (பொன்னே)[தொகு]

பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்

கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்து - மன்னோகொன்னே தலைக்கூடப் பெற்று இருந்தும் - அன்னோ

பயனில் பொழுதாக் கழிப்பரே நல்லபயன் இல் பொழுதாக் கழிப்பரே நல்ல

நயமி லறிவி னவர். (02)|நயம் இல் அறிவினவர். (௨)


பதவுரை:

பொன் = பொன்னை
கொடுத்தும் = ஈந்தும்,
புணர்தற்கு = சேர்தற்கு,
அரியாரை = அரிய பெரியோரை,
கொன்னே = பயனில்லாமல்,
தலைக்கூட = சிநேகிக்க,
பெற்றிருந்தும் = பெற்று வைத்தும்,
அன்னோ = ஐயோ!,
நல்ல = நல்ல,
நயம் இல் = நயமில்லாத,
அறிவினவர் = அறிவுடையார்,
பயன் இல் = பிரயோசனமில்லாத,
பொழுதா = காலமாக,
கழிப்பர் = போக்குவர்.

கருத்துரை:

அறிவிலார் அறிவுடையாரைப் பெற்றிருந்தும் வீண்காலங் கழிப்பர்.

விசேடவுரை:

நயமிலறிவினவர் - எழுவாய், கழிப்பர் - பயனிலை, ஏ - மூன்றும் அசைகள்.


பாடல்: 163 (அவமதிப்பு)[தொகு]

அவமதிப்பு மான்ற மதிப்பு மிரண்டுஅவ மதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்

மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக்மிகை மக்களால் மதிக்கல் பால - நயம் உணராக்

கையறியா மாக்க ளிழிப்பு மெடுத்தேத்தும்கை அறியா மாக்கள் இழிப்பும் எடுத்து ஏத்தும்

வையார் வடித்தநூ லார். (03)|வையார் வடித்த நூலார். (௩)


பதவுரை:

அவமதிப்பும் = இகழ்வாக மதித்தலும்,

ஆன்ற மதிப்பும் = புகழ்வாக மதித்தலும்,
இரண்டும் = இவ்விரண்டும்,
மிகை மக்களால் = மேன்மக்களால்,
மதிக்கல் பால = மதிக்கத்தக்க தன்மையை யுடையனவாம்;
நயம் = நீதியை,
உணரா = அறியாத,
கை = ஒழுக்கத்தை,
அறியா = தெரியாத,
மாக்கள் = மனிதர்கள்,
இழிப்பும் = பழிப்பையும்,
எடுத்து = எடுத்து,
ஏத்தும் = புகழ்தலையும்,
வடித்த நூலார் = ஆராய்ந்த நூலறிவுள்ளார்,
வையார் = மனதில் வையார்.

கருத்துரை:

ஒருவரை இகழ்தலும் புகழ்தலும் பெரியோர்க்கு இல்லை. பிறர் இகழினும் அவர்க்கு மனக்குறையில்லை.

விசேடவுரை:

நூலார் - எழுவாய், வையார் - பயனிலை.

இலக்கணத்திரட்டு

“எதிர்மறைப் பெயரெச்சத் திசைவலி யியல்பு

மீறு கெடுங்கான் மிகுதலு மியல்பாம்”

இவ்விதியால் உணராத என்னும் எதிர்மறைப் பெயரெச்சம் ஈறுகெட்டு ஒற்று மிக்கது.

பாடல்: 164 (விரிநிற)[தொகு]

விரிநிற நாகம் விடருள தேனு() () - - - - - - - - - -விரி நிறம் நாகம் விடர் உளதேனும்

முருமின் கடுஞ்சினஞ் சேணின்று முட்கு() () - - - உருமின் கடும் சினம் சேண் நின்றும் உட்கும்

மருமை யுடைய வரண்சேர்ந்து முய்யார்() () - - - -அருமை உடைய அரண் சேர்ந்தும் உய்யார்

பெருமை யுடையார் செறின். (04)|() () - - - - - - -பெருமை உடையார் செறின். (௪)


பதவுரை:

விரி = மிக்க,

நிறம் = நிறமுள்ள,
நாகம் = பாம்பானது,
விடர் = மலைப்பிளப்பில்,
உளதேனும் = உள்ளதானாலும்,
உருமின் = இடியின்,
கடும் = கடிய,
சினம் = உக்கிரம்,
சேண் நின்றும் = ஆகாயத்தில் இருக்கவும்,
உட்கும் = பயப்படும்; (அதுபோல)
பெருமை உடையார் = பெரியோர்கள்,
செறின் = கோபித்தால்,
அருமைஉடைய = அரிய,
அரண் சேர்ந்தும் = கோட்டையைச் சேர்ந்தும்,
உய்யார் = பகைவர் பிழையார்.

கருத்துரை:

பாம்பானது, வெடிப்புள் இருப்பினும் இடியைக் கேட்டு அஞ்சும்; அதுபோல, பகைவர், பெரியோர் கோபிக்கில் கோட்டையைச் சார்ந்தும் பிழையார்.

விசேடவுரை:

(பகைவர்) - தோன்றா எழுவாய், உய்யார் - பயனிலை.

பாடல்: 165 (எம்மையறிந்)[தொகு]

எம்மை யறிந்திலி ரெம்போல்வா ரில்லென்று - - எம்மை அறிந்திலிர் எம் போல்வார் இல் என்று

தம்மைத்தாங் கொள்வது கோளன்று - தம்மை - - தம்மைத் தாம் கொள்வது கோள் அன்று - தம்மை

யரியரா நோக்கி யறனறியுஞ் சான்றோர் - - - - - - அரியர் ஆ நோக்கி அறன் அறியும் சான்றோர்

பெரியராக் கொள்வது கோள். (05)| - - - - - - - - - - - - - - பெரியர் ஆக் கொள்வது கோள் (௫).


பதவுரை:

எம்மை = எங்களை,

அறிந்திலிர் = அறியீர்,
எம் போல்வார் = எங்களை நிகர்த்தவர்,
இல் என்று = இல்லையென்று,
தம்மைத் தாம் = தங்களைத் தாமே,
கொள்வது = உயர்த்திக் கொள்வது,
கோள் அன்று = கொள்கை யன்று;
தம்மை = தங்களை,
அரியர் ஆ = எளியராக,
நோக்கி = பார்த்து,
அறன் = தருமத்தை,
அறியும் = உணரும்,
சான்றோர் = மேன்மக்களால்,
பெரியர் ஆ = பெரியோராக,
கொள்வது = மதித்துக்கொள்வது,
கோள் = கொள்கை.

கருத்துரை:

தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்வது கொள்கையல்ல; தங்களை எளியராகத் தாழ்த்திக் கொள்வது பெரியோர் கொள்கை.

விசேடவுரை:

கொள்வது - எழுவாய், கோள் - பயனிலை.

பாடல்: 166 (நளிகடற்)[தொகு]

நளிகடற் றண்சேர்ப்ப நாணிழற் போலநளி கடல் தண் சேர்ப்ப நாள் நிழல் போல

விளியுஞ் சிறியவர் கேண்மை - விளிவின்றிவிளியும் சிறியவர் கேண்மை - விளிவு இன்றி

யல்கு நிழற்போ லகன்றகன் றோடுமேஅல்கு நிழல் போல் அகன்று அகன்று ஓடுமே

தொல்புக ழாளர் தொடர்பு. (06)|தொல் புகழ் ஆளர் தொடர்பு. (௬)


பதவுரை:

நளி = அகன்ற,

கடல் = கடலையும்,
தண் = குளிர்ந்த,
சேர்ப்ப = கரையையும் உடைய பாண்டியனே!
சிறியவர் = சிறியோர்கள்,
கேண்மை = சிநேகம்,
நாள் = முற்பகல்,
நிழல்போல = நிழலைப் போல,
விளியும் = வரவரக் குறையும்;
தொல் = பழைய,
புகழ் ஆளர் = பெரியோர்கள்,
தொடர்பு = சிநேகம்,
விளிவு இன்றி = கேடில்லாது,
அல்கு = பிற்பகல்,
நிழல் போல் = நிழலைப் போல,
அகன்று அகன்று = வளர்ந்து வளர்ந்து,
ஓடும் = செல்லும்.


கருத்துரை:

பாண்டியனே! சிறியவர் சிநேகம் முற்பகல் நிழலைப் போற் குறையும்; பெரியவர் சிநேகம் பிற்பகல் நிழலைப்போல் வளரும்.


விசேடவுரை:

கேண்மை - எழுவாய், விளியும் - பயனிலை. தொடர்பு - எழுவாய், ஓடும் - பயனிலை. ஏ - அசை.


பாடல்: 167 (மன்னர்திரு)[தொகு]

மன்னர் திருவு மகளி ரெழினலுமுந்மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்

துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்துன்னியார் துயப்பர் தகல் வேண்டா - துன்னி

குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாகுழை கொண்டு தாழ்ந்த குளிர் மரம் எல்லாம்

முழைதங்கட் சென்றார்க் கொருங்கு. (07)|உழை தங்கண் சென்றார்க்கு ஒருங்கு. (௭)(

பதவுரை:

துன்னி = நெருங்கி,

குழைகொண்டு = தளிர்கொண்டு,
தாழ்ந்த = தாழ்ந்த,
குளிர் = குளிர்ந்த,
மரம் எல்லாம் = மரங்கள் எல்லாம்,
தங்கண் = தம்மிடத்து,
சென்றார்க்கு = வந்தவர்க்கு,
ஒருங்கு = ஒருமிக்க,
உழை = புகலிடம் ஆவது போல,
மன்னர் = அரசர்,
திருவும் = செல்வமும்,
மகளிர் = பெண்களுடைய,
எழில் = அழகின்,
நலமும் = நன்மையும்,
துன்னியார் = சேர்ந்தவர்,
தகல் வேண்டா = தடையில்லாமல்,
துய்ப்பர் = அனுபவிப்பர்.


கருத்துரை:

அரசர் செல்வத்தையும், பெண்கள் நலத்தையும் அங்கிருந்தோர் அநுபவிப்பார்.


விசேடவுரை:

துன்னியார் - எழுவாய், துய்ப்பர் - பயனிலை.


பாடல்: 168 (தெரியத்தெரி)[தொகு]

தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும் | -----தெரிய தெரியும் தெரிவு இலார் கண்ணும்

பிரியப் பெரும்படர்நோய் செய்யும் - பெரிய | --பிரிய பெரும் படர் நோய் செய்யும் - பெரிய

வுலவா விருங்கழிச் சேர்ப்பயார் மாட்டுங் | -----உலவா இரும் கழி சேர்ப்ப யார்மாட்டும்

கலவாமை கோடி யுறும். (08)| | -----------------கலவாமை கோடி உறும். (௮)


பதவுரை:

பெரிய = பெரிதாகிய,

உலவா = வற்றாத,
இரும் = மிக்க,
கழி = கழியையும்,
சேர்ப்ப = கரையையும் உடைய பாண்டியனே!
தெரிவு இலார்கண்ணும் = தெரிவில்லாரிடத்தும்,
தெரிய = சிநேகம் செய்தறிய,
தெரியும் = அவரின் குணாகுணந் தெரியும்;
பிரிய = அவர் சிநேகம் பிரிய,
பெரும் = பெரிய,
படர்நோய் = துன்ப நோய்,
செய்யும் = செய்யும்; (ஆதலால்),
யார் மாட்டும் = யாவரிடத்தும்,
கலவாமை = சிநேகியாமையே,
கோடி உறும் = (சிநேகஞ்செய்து பிரிதலினும்) கோடிபங்கு அதிகம்.

கருத்துரை:

பாண்டியனே! தெளிவிலார் நட்புச் சிநேகஞ் செய்தறியத் தெரியும்; யாவரிடத்துஞ் சிநேகஞ் செய்யாதிருக்கை நல்லது என்பதாம்.

விசேடவுரை:

கலவாமை - எழுவாய், கோடியுறும் - பயனிலை.

பாடல்: 169 (கல்லாது)[தொகு]

கல்லாது போகிய நாளும் பெரியவர்கட் ()------கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்

செல்லாது வைகிய வைகலு - மொல்வ ()-------செல்லாது வைகிய வைகலும் - ஒல்வ

கொடாஅ தொழிந்த பகலு முரைப்பிற் ()--------கொடாது ஒழிந்த பகலும் உரைப்பில்

படாஅவாம் பண்புடையார் கண். (09)| ()---------படா ஆம் பண்பு உடையார் கண். (௯)


பதவுரை:

பண்புடையார் கண் = நற்குணம் உடையாரிடத்து,

கல்லாது = நூலைக் கற்காது,
போகிய = கழிந்த,
நாளும் = நாள்களும்,
பெரியவர்கண் = பெரியோரிடத்து,
செல்லாது = போகாது,
வைகிய = இருந்த,
வைகலும் = நாள்களும்,
ஒல்வ = பொருந்தியவற்றை,
கொடாது = கொடுக்காது,
ஒழிந்த = கழிந்த,
பகலும் = நாள்களும்,
உரைப்பில் = சொல்லில்,
படா ஆம் = இவை பொருந்தாவாம்.


கருத்துரை:

பெரியோரிடத்தில் கற்காத காலமும், தம்மிற் பெரியோரிடத்திற் செல்லாத காலமும், கொடாத காலமும் உண்டாகாவாம்.


விசேடவுரை:

நாள், வைகல், பகல் - எழுவாய், படாவாம் - பயனிலை.

பாடல்: 170 (பெரியார்பெருமை)[தொகு]

பெரியார் பெருமை சிறுதகைமை யொன்றிற் |-----பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு

குரியா ருரிமை யடக்கந் - தெரியுங்காற் |-----------உரியார் உரிமை அடக்கம் - தெரியும் கால்

செல்வ முடையாருஞ் செல்வரே தற்சேர்ந்தா |--------செல்வம் உடையாரும் செல்வரே தன் சேர்ந்தார்

ரல்லல் களைப வெனின். (10)| |-----------------------அல்லல் களைப எனின். (௰)


பதவுரை:

பெரியார் = பெரியோர்க்கு,

பெருமை = பெருமையாவது,
சிறுதகைமை = பணிந்து நடக்குதல்;
ஒன்றிற்கு = ஒரு கல்விக்கு,
உரியார் = உரியவர்களுக்கு,
உரிமை = தகுதியாவது,
அடக்கம் = அடங்கியிருக்கை;
தெரியும் கால் = ஆராய்ந்தால்,
தன் சேர்ந்தார் = தன்னைச் சேர்ந்தவர்கள்,
அல்லல் = துன்பங்களை,
களைப = நீக்குவர்,
எனின் = என்றால்,
செல்வம் உடையாரும் = செல்வம் உள்ளவரும்,
செல்வரே = செல்வம் உள்ளவர்களே.


கருத்துரை:

பெரியோர்க்குப் பணிவும், கற்றோர்க்கு அடக்கமும், செல்வர்க்கு ஈகையும் வேண்டும்.

விசேடவுரை:

செல்வமுடையார் - எழுவாய், செல்வர் - பயனிலை. ஏ - அசை.


பெரியாரைப் பிழையாமை முற்றிற்று.




பார்க்க[தொகு]

நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரை

2.பொருட்பால்: 1.அரசியல்

நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
[[]]
நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
[[]]