பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ராட்டைப் பாட்கு ராட்டையிலே நூல் நூற்கும் பழக்கம் வெகு காலமாக இந்நாட்டில் இருக்கிறது. இடையிலே இந்தப் பழக்கம் விட்டுப் போயிற்று. மறுபடியும் ராட்டைக்குப் புத்துயிர் கொடுத்தவர் காந்திமகான். ஆளுல், ராட்டைப் பாட்டு என்ற நாடோடிப் பாடல் இப்பொழுது ஏற்பட்டதல்ல. இது பழங்காலத்திலிருந்து கிராமங்களிலே ஒலிக்கும் ஒரு நகைச்சுவைப் பாட்டு. ஒருத்தி ராட்டையிலே நூல் நூற்ருளாம். அந்த நூலைச் சந்தையிலே கொண்டுபோய் விற்ருளாம். நூலை விற்ற காசைக் கொண்டு அவள் பலவகையான பண்டங்கள் வாங்குகிருள். அடடா, அவளுக்குக் கிடைத்த காசில் என்னென்ன வாங்க முடிகிறது! பாட்டைப் பார்ப்போம். முதலில் அவள் நூல் நூற்ற பெருமையைக் கேட்கலாம்.