பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 காற்றில் வங்த கவிதை ராட்டை யென்ருல் ராட்டை கருங்காலி ராட்டை ஒரு பூட்டு நூலைத்தான் ஒடி ஒடி நூற்ருளாம் ஒடி ஒடி தூற்ருளாம் ஒன்பது பலம் நூற்ருளாம் பாடிப் பாடி நூற்ருளாம் பத்துப் பலம் நூற்ருளாம் வேளை வேளை நூற்ருளாம் விசுக் கூடையில் போட்டாளாம். விசுக் கூடையில் நூலைப் போட்டாயிற்று. இனிச் சந்தைக்குப் போக வேண்டியதுதான். தனியாகச் சந்தைக் குப் போக முடியுமா? துணை வேண்டாமா? அதற்காக அவள் மாமியையும், மதனியையும் மற்றவர்களையும் கூப்பிடுகிருள். சந்தைக்கு வரவில்லையா என்று அவர்களைக் கேட்கிருள். மாமி வல்லையா சந்தைக்கு மதனி வல்லையா சந்தைக்கு சின்னக்கா வல்லையா சந்தைக்கு பொன்னக்கா வல்லையா சந்தைக்கு நங்கை வல்லையா சந்தைக்கு கொழுந்தி வல்லையா சந்தைக்கு கடைசியிலே அவள் சந்தைக்குப் போகிருள். ஆனல் ஒரே சந்தையில் அவளால் நூலே விற்க முடியவில்லை. எத் தனையோ சந்தைகளில் நூலை விற்க முயற்சி செய்கிருள்.