பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிடர் ஆரியநாகரிகமேற்ற காலம்

175

இத்தகைய கப்பல் வாணிப முறையினாலேயே, செங்கடல் வணிகரிடமிருந்து திராவிடர்கள் எழுத்து முறை கற்க, அவர்களிடமிருந்து பின்னர் ஆரியர் கற்றனர் என்று டாக்டர் பர்னெலும், வடஇந்தியாவிலுள்ள லாட்[1] என்னும் மொழியின் எழுத்துக்கள் திராவிட எழுத்துக்களை யொட்டி எழுந்தவையே என்று எட்வர்ட் தாமஸ்[2] என்பவரும் கூறுகிறார்கள். இவை ஆராய்ச்சிக்குரியன. மன்னன் சாலமன் காலத்தில் ஆரியர்கள் தொலை நாடுகளுடன் கப்பல் வாணிபம் செய்து வந்ததாக வேதங்கள் கூறுகின்றன; ஆனால் எத்துறைமுகங்களிலிருந்து கப்பலேறிச் சென்றனர் என்பது ஆராய்ச்சிக் குரியதாம்.முற்றிற்று


  1. Lat
  2. Mr. Edward Thomas