பயனர் பேச்சு:Iswaryalenin

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

வரவேற்புரை[தொகு]

விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Iswaryalenin!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

தகவலுழவன் (பேச்சு).  04:19, 16 செப்டம்பர் 2022 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்வோரை தேர்ந்தெடுக்க வருக[தொகு]

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. தொகை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, உங்கள் எண்ணங்களை அத்திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, நான் எனது பரிந்துரையை வழங்கியிருப்பது போல தாருங்கள்.
  • பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். இச்சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலை, அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும், தருக. உங்கள் பெயரினை தலைப்பாக இட்டு, பிறரைப் போல தருக. பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரியப்படுத்தலாம். எனவே, தவறாமல் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுங்கள்.
  • வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
  • இறுதிநாளாக, இம்மாதம் இறுதிநாளை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நிகழ்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து இது குறித்த செய்திகளை, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற அதே பேச்சுப்பக்கத்தில் மறவாமல் கண்டு அறியவும். --தகவலுழவன் (பேச்சு). 17:21, 14 மார்ச் 2023 (UTC)
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Iswaryalenin&oldid=1490527" இலிருந்து மீள்விக்கப்பட்டது