விக்கிமூலம் பேச்சு:நாட்டுடைமை நூலாசிரியர்களின் விவரம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 1 மாதத்துக்கு முன் by Arularasan. G
பயனர்:TVA ARUN இந்தப் பட்டியலில் நூலாசிரியர் பெயர் என்ற வரிசையில் உள்ள நூலாசிரியர் பெயர்களுக்கான உள்ளிணைப்பு விக்கிப்பீடியா பக்கங்களுக்கு கொடுக்கபட்டுள்ளது. அதில் பல ஆசிரியர்களுக்கு விக்கிமூலத்தில் அறிமுகப் பக்கம் உள்ளது. விக்கிமூலத்தில் அறிமுகப்பக்கம் உள்ள ஆசிரியர்களுக்கு விக்கிமூலத்திற்கே உள்ளிணைப்பு தருவதே பொருத்தமாக இருக்கும் நன்றி--அருளரசன் (பேச்சு) 13:39, 1 செப்டம்பர் 2022 (UTC)
- நன்றி. //பல ஆசிரியர்களுக்கு விக்கிமூலத்தில் அறிமுகப் பக்கம் உள்ளது.// முழுமையாக விக்கிபீடியா பக்கத்திலும் இல்லை. விக்கி பக்கத்தில் உழவன் சில ஆசிரியர்களுக்கு விவரங்கள் (ஜீலை,ஆகஸ்ட்டு-2022) எழுதியுள்ளதையும், விக்கிமூலத்தில் தங்களின் பங்களிப்பாக (ஆகஸ்ட்டு-2022) ஆசிரியர்களுக்கு அறிமுகப்பக்கம் உருவாக்கி வருவதையும் கவனித்து வருகின்றேன். முழுமையான பக்கமாக அறிமுகப்பக்கம் உருவாக்கிய உடன் தாங்கள் சொல்வதுபோல மாற்றம் செய்துகொள்ளலாம். அல்லது நூல்பட்டியல் என்னும் தலைப்பில் உரிய ஆசிரியருக்கான விக்கிமூலப் பக்கத்தின் இணைப்பைத் தருவது சரியாக இருக்குமா? (விக்கிமூலம்/ஆசிரியர்/பட்டியல் என நூல்பட்டியல்கள் உருவாக்கியுள்ளதால் இந்த கருத்து உள்ளது.) தங்களது கருத்துகளை வழங்க வேண்டுகிறேன். நன்றி.--TVA ARUN (பேச்சு) 05:48, 2 செப்டம்பர் 2022 (UTC)
பயனர்:TVA ARUN விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலம் பெற்ற உரிம ஆவணங்கள் என்ற பக்கத்தில் நாட்டுடமையாக்கம் தொடர்பான அரசாணைகள் இடம்பெற்றுள்ளன. அதைக் கொண்டு இப்பக்கத்தை மேம்படுத்தலாம்--கு. அருளரசன் (பேச்சு) 15:20, 19 நவம்பர் 2024 (UTC)