விக்கிமூலம் பேச்சு:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வ உ சிதம்பரனார் நூற்கள் குறித்த இணையத் தகவல்கள்[தொகு]

(1) திருக்குறள், சிவஞானபோதம், இன்னிலை போன்ற நூல்களுக்கு எழுதிய உரைகள் மூலம் வ.உ.சி.யின் ஆழந்த புலமையை இனங்கண்டு கொள்ளலாம். [பன்முகம் கொண்ட வ உ சிதம்பரனார்]

(2) [வ.உ.சி எழுதிய நூல்கள்]

(3) நூல்கள் :வ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை 1.மெய்யறம் 2.மெய்யறிவு 3.பாடல் திரட்டு 4.சுயசரிதை.
உரை எழுதிய நூல்கள்: வ.உ.சி. இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதி உள்ளார்.
வ.உ.சி. யால் பதிப்பிக்கப்பட்ட நூல்கள்: திருக்குறள் (மணக்குடவர் உரையுடன்)-1917, தொல்காப்பியம் (இளம்பூரனார் உரையுடன்)-1928
கட்டுரைகள்: கடவுளும் பக்தியும், கடவுள் ஒருவரே, மனிதனும் அறிவும், மனமும் உடம்பும், வினையும் விதியும், விதி அல்லது ஊழ் [வ. உ. சிதம்பரம்பிள்ளை]

(4) வ.உ.சி எழுதியுள்ள அனைத்துப் புத்தகங்களும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

[`கப்பலோட்டிய தமிழன் விருது முதல் திரைப்படம் வரை' வ.உ.சி-யின் பெயரில் வெளியான 14 அறிவிப்புகள்!]

(5) வ.உ.சி எழுதிய நூல்கள் : மெய்யறம் - 1914. மெய்யறிவு - 1915. கவிதை தொகுதி (தனிப்பாடல் திரட்டு) - 1915. திருக்குறள் - மணக்குடவர் உரை - 1917. தொல்காப்பியம் - இளம்பூரணார் உரை - 1928.சுயசரிதை - 1946.
பல இதழ்களில் கட்டுரை மொழிபெயர்ப்புகள்: அமைதிக்கு மார்க்கம்"; ";சாந்திக்கு மார்க்கம்" போன்ற ஜேம்ஸ் ஆலனின் சுயமுன்னேற்ற நூல்கள் - ஆங்கிலத்திலிருந்து தமிழில்.
நடத்திய இதழ்கள் - விவேகபானு, இந்துநேசன்.
[V.O.Chidambaranar]

(6) வ.உ.சி.4 நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அவையனைத்தும் ஜேம்ஸ் ஆலன் என்பவரால் எழுதப்பட்டது. மொழிபெயர்ப்புப் பணி அவ்வளவு எளிதானதல்ல. எளிதாகப் புரிந்து கொள்வதற்காக சில வார்த்தைகளைச் சேர்த்தும் சில வார்த்தைகளைச் தவிர்த்தும் மொழிபெயர்த்துள்ளதாக வ.உ.சி.கூறுகிறார். வ.உ.சி.யின் மொழிபெயர்ப்பு நிறைவானதாகவும் மதிப்பு மிக்கதாகவும் அவரது திறமையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. அவை அனைத்துமே அறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய நூல்களாகும்.

[வ. உ. சிதம்பரம்பிள்ளை]

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 13:15, 8 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

வ உ சி அவர்களின் இரு நூற்கள் :[தொகு]

@Info-farmer:

வ உ சி அவர்களின் இரு நூற்களைக் கீழ்க்கண்ட கோப்பில் தரவேற்றியுள்ளேன். இவற்றையும் தொகுப்பில் இணைத்துக் கொள்ளவும்.

(1) அகமே புறம்.

(2) தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணையியலும், புறத்திணையியலும் - வ உ சி, பிரம்பூர்.

வ உ சி கோப்பு

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 05:35, 11 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

மெய்யறம் நூல்[தொகு]

@Info-farmer: மெய்யறம் நூலின் மெய்ப்புப் பணி நிறைவுற்றது. உள்ளுறையும் உருவாக்கப்பட்டது.

-- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 17:35, 11 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

தனிநபர் வலையகம்[தொகு]

திருக்குறள் மணக்குடவருரை நூல்[தொகு]

@Info-farmer:

திருக்குறள் மணக்குடவருரை நூலின் மெய்ப்புப் பணி நிறைவுற்றது. உள்ளுறையும் உருவாக்கப்பட்டுள்ளது.

-- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 14:40, 22 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]