உள்ளடக்கத்துக்குச் செல்

உண்மைவிளக்கம்

விக்கிமூலம் இலிருந்து
உண்மை விளக்கம் (மூலம்)
எழுதியவர்: திருவதிகை மனவாசகங்கடந்தார்


நூலாசிரியர் குறிப்பு

[தொகு]
உண்மை விளக்கம் என்ற இந்நூலின் ஆசிரியர் திருவதிகை மனவாசகங் கடந்தார் ஆவார். இவர், சிவஞான போதம் இயற்றிய மெய்கண்டாரின் மாணவர்களில் ஒருவர் ஆவார். திருவதிகை எனும் ஊரில் பிறந்தவர்.
இந்நூல் காப்பு, சிறப்புப்பாயிரம் நீங்கலாக 53 வெண்பாக்களால் ஆனது. தத்துவங்களை இந்நூல் சுருக்கமாக உரைக்கின்றது.
இந்நூலி்ன் அமைப்பு, தத்துவங்கள் பற்றித் தம்குருநாதரிடம், அவரின் மாணவராகிய இந்நூலின் ஆசிரியர் வினவ, அதற்கு அவர் பதில் கூறுவதுபோல் 'வினா-விடை'ப் போக்கில் அமைந்துள்ளது. குருநாதர், உண்மை என்ன எனத் தன் சீடருக்கு விளக்குவதால் இது 'உண்மை விளக்கம்' எனப்பெயர் பெற்றது. சி்த்தாந்த அறிவுபெற விரும்புவோர் முதலில் பயிலவேண்டிய நூல் இதுவே எனக் கூறுவர்.
இந்நூலில் ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சுத்த தத்துவம், ஆணவம், கன்மம் , மாயை எனும் மும்மலங்கள், உயிரியல்பு, பதியியல்பு, ஐந்தெழுத்து, நடராசத் தத்துவம், அத்துவித முத்தி, குரு லிங்க சங்கம வழிபாடுகள் முதலியவை விளக்கப்படுகின்றன.
தத்துவம் என்றாலே தலைதெறிக்க ஓடாது, உண்மை அறிய வேண்டும் எனக் கற்க விழைந்தால், இது ஓர் அருமையான சுவை மிக்க கருத்துகள் அடங்கிய நூலாகும். சைவசித்தாந்தம் என்பது, ஏதோ ஒருதனிப்பட்ட குழுவினருக்கு மட்டும் சொந்தம் அன்று, அது தமிழர்கள் இவ்வுலகின் மேல்கொண்ட ஓர் உலகளாவிய தத்துவப்பார்வை ஆகும், அனைவருக்கும் பொருந்துவது. அதனை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் சூழலுக்கேற்ப அமையும். ஆனால், ஓர் உண்மையை -கருத்தை- தெரிந்துகொள்வதில் தவறில்லையே!


உண்மை விளக்கம்-வெண்பா 01-10காப்பு

உண்மை விளக்கம்-வெண்பா 11-20

உண்மை விளக்கம்-வெண்பா 21-30

உண்மை விளக்கம்-வெண்பா 31-40

உண்மை விளக்கம்-வெண்பா 41-53

பார்க்க:

[தொகு]
சிவஞானபோதம்
உண்மைநெறிவிளக்கம்
திருவருட்பயன்
வினாவெண்பா
இருபாஇருபது
சித்தாந்தச் சாத்திரங்கள்
"https://ta.wikisource.org/w/index.php?title=உண்மைவிளக்கம்&oldid=1551255" இலிருந்து மீள்விக்கப்பட்டது