கலைக்களஞ்சியம்/ஆப்டே, ஹரி நாராயண்
Appearance
ஆப்டே, ஹரி நாராயண் (1864-1919) இக்காலத்து மராத்தி நாவலின் தந்தை எனப்பெறுவர். பெரும்பாலும் புனாவில் வாழ்ந்து வந்தார். 15 நாவல்கள் எழுதியுளர். சில வரலாறு பற்றியவை. சமூக நாவல்களே சிறந்தவை. சீர்திருத்த நோக்கத்துடன் எழுதப்பெற்றவை. 'கரமனுகம்' என்னும் இலக்கியப் பத்திரிகையைத் தொடங்கி நடத்திப் பாமர மக்களுக்குங்கூட இலக்கியச்சுவை ஏற்படுமாறு செய்தார். பல சிறு கதைகளும் நாடகங்களும் எழுதியும் மொழி பெயர்த்துமுளர். சிறந்த திறனாய்வாளர். முதிர்ந்த வயதில் அரசியல் இயக்கங்களிலும் ஈடுபட்டிருந்தார். ஆர். எஸ். ஜோ.