உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆரீலியா

விக்கிமூலம் இலிருந்து

ஆரீலியா சொறிமீன் (த.க.) சாதிகளில் ஒன்று.

ஆரீலியா


உதவி : அப்பய்ய ரெட்டி.

1. மேற்புறத் தோற்றம் : a. எதிர் ஆரக் கால்வாய். b. இடை ஆரக் கால்வாய், c. துணை ஆரக் கால்வாய், d. பாலணுச் சுரப்பி, (உடம்பின் உள்ளிருக்கும் பாலணுச் சுரப்பிகளும், கீழ்ப்புறமிருக்கும் வாயும். ஒளிபுகும் ஊன்பசை போன்ற தன்மை யுடைய உடற்பொருள் வழியே மேலே தெரிகின்றன).
2. கீழ்ப்புறத் தோற்றம்: a. வாய். b பாலணுச் சுரப்பி, C. ஓரப்பற்றுறுப்பு. d. வட்டக் கால்வாய், e. உணர்ச்சிக் கருவி. f. வாய்க் கொடி (பாலணுச் சுரப்பியின் உட்பக்கத்தில் கரிய நீள்வட்டமாகத் தெரிவது கருக் கீழ்க் குழி).
3. பக்கத் நோற்றம்: நடுவில் நான்கு வாய்க்கொடிகளும்

ஓரத்தில் பற்றுறுப்புக்களும் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

உலகத்தின் பல கடல்களில் சாதாரணமாகக் காணப்படுவது. இதில் ஆண் வேறு, பெண் வேறு. இதன் வளர்ச்சியில் பல படிகள் உண்டு. இதற்கு இனப்பெருக்கச் சுரப்பிகள் வயிற்றுப் பைகளின் அடிப்பாகத்தில் குதிரைலாட வடிவத்தில் அமைந்துள்ளன. முதிர்ந்த இனப்பெருக்க அணுக்கள் வயிற்றுப்பையில் சிந்தப்படுகின்றன. விந்தணுக்கள் பிராணியினுடம்பினின்று வெளியேறி, இன்னொரு பிராணியின் வயிற்றுப்பைக்குள் உட்செல்லும் நீரோடு சென்று, அங்குள்ள அண்டத்தோடு இரண்டறக் கலக்கின்றன. கரு வளர்ந்து பிளானுலா என்ற லார்வா நிலையடைகின்றது. இந்தச் சிறு பிளானுலா, தன் உடம்பின்மேல் உள்ள நுண் மயிர்களால் நீந்திச்சென்று, ஏதாகிலும் ஓர் அடித்தளத்தில் ஒட்டிக்கொள்கிறது பின்பு நுண்மயிர்கள் விழுந்து விடுகின்றன ; ஒட்டப்படாத நுனியில் வாய் தோன்றுகிறது. பின்னர் நான்கு பற்றுறுப்புக்கள் தோன்றுகின்றன. இந்நிலையில் இப்பிராணிக்கு வெளித் தோலும் உள் தோலும் சீரணக்குழியுமுண்டு. உள்தோல் சீரணச் சுழற்சி வளையுள் நெடுக்காக நான்கு மேடுகள் உடையதாக இருக்கிறது. இம் மேடுகள் அகட்டு மேடுகள் எனப்படும். இவை ஆரிலியா சாதிக்கு உள்ள சிறப்பியல்பு. அடுத்தபடியாக மற்றப் பற்றுறுப்புக்கள் தோன்றுகின்றன. இப்போது லார்வாவுக்கு சைபிஸ்டோமா (Scyphist( ma) என்று பெயர். இந்நிலையில் இப் பிராணிக்கு 10 பற்றுறுப்புக்களுண்டு. பின்பு இப்பிராணி குறுக்காகச் சிறு வளையங்களாக உடைந்து தோன்றுகிறது. அப்போது

ஆரீலியா
வாழ்க்கை வட்டம்

1. பிளானுலா லார்வா: நுண்மயிர்களின் உதவியால் நீந்துவது.
2. இளம் பாலிப்பு நிலை : வாய்மட்டும் உள்ளது.
3. பாலிப்பு: நான்கு பற்றுறுப்புக்கள் உள்ள நிலை.
4. சைபிஸ்டோமா கிண்ண அடுக்கு (ஸ்ட்ரோபிலா) நிலை.
5. எபைரா என்னும் இள மெடுசா நிலை.
6. முழுவதும் வளர்ந்த பாலிப்பு: சைபீஸ்டோமா நிலை.
முழுவதும் வளர்ந்த மேடுசா நிலையை முன் பக்கத்திலுள்ள

படத்தில் காண்க.

இப்பிராணி சற்றுத் தட்டையான பல கோப்பைகளை அடுக்கி வைத்தது போலிருக்கும். ஆகையால் இந்நிலை ஸ்ட்ரோபிலா (Strobila) அல்லது கிண்ண வடுக்கு நிலை என்பார்கள். பின்னர் ஒவ்வொரு கிண்ணத்தின் ஓரமும் பிரிவுபடுகிறது. ஒவ்வொரு கிண்ணம் போன்ற பாகமும் எட்டுப் பாகங்களாலான குடையும், கைப்பிடியும், கைப்பிடியில் சதுரமான வாயுமுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் இப்பிராணிக்கு எபைரா (Ephyra) என்று பெயர். பின்பு ஒவ்வொரு சிறு எபைராவும் தனியாகப் பிரிந்து சென்று, கவிழ்ந்து நீந்தித் தனி வாழ்க்கை நடத்தி வளர்ந்து பெரிய ஆரீலியாவாக மாறுகின்றது. எஸ். ஆ.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆரீலியா&oldid=1457365" இலிருந்து மீள்விக்கப்பட்டது