நன்னூல் சொல்லதிகாரம் 5. உரியியல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

நன்னூல் சொல்லதிகாரம் 5. உரியியல்[தொகு]

உரிச்சொல்லி்ன் பொதுவிலக்கணம்[தொகு]

நூற்பா: 442

பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி
ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை
ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல். (01)


நூற்பா: 443

(பண்பு இதுவென்பது)


உயிருயி ரல்லதாம் பொருட்குணம் பண்பே. (02)நூற்பா: 444


(ஐவகையுயிர்)
மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின்
ஒன்றுமுத லாக்கீழ்க் கொண்டுமே லுணர்தலின்
ஓரறி வாதியா வுயிரைந் தாகும். (03)


நூற்பா: 445


(ஓரறிவுயிர்)


புன்மர முதலவுற் றறியுமோ ரறிவுயிர். (04)


நூற்பா: 446

(ஈரறிவுயிர்)


முரணந் தாதிநா வறிவோடீ ரறிவுயிர். (05)


நூற்பா: 447


(மூவறிவுயிர்)


சிதலெறும் பாதிமூக் கறிவின்மூ வறிவுயிர். (06)


நூற்பா: 448


(நாலறிவுயிர்)


தும்பிவண் டாதிகண் ணறிவினா லறிவுயிர். (07)


நூற்பா: 449


(ஐயறிவுயிர்)


வானவர் மக்க ணரகர் விலங்குபுள்
ஆதிசெவி யறிவோ டையறி வுயிரே. (08)


நூற்பா: 450


(உயிரல்பொருள்)


உணர்விய லாமுயி ரொன்று மொழித்த
உடன்முத லனைத்து முயிரல் பொருளே. (09)


நூற்பா: 451


ஒற்றுமை நயத்தி னொன்றெனத் தோன்றினும்
வேற்றுமை நயத்தின் வேறே யுடலுயிர். (10)


நூற்பா: 452


(உயிர்களின் குணப்பண்பு)


அறிவரு ளாசை யச்ச மான
நிறைபொறை யோர்ப்புக் கடைப்பிடி மையல்
நினைவு வெறுப்புவப் பிரக்கநாண் வெகுளி
துணிவழுக் காறன் பெளிமை யெய்த்தல்
துன்ப மின்ப மிளமை மூப்பிகல்
வென்றி பொச்சாப் பூக்க மறமதம்
மறவி யினைய வுடல்கொ ளுயிர்க்குணம். (11)


நூற்பா: 453

(உயிர்களின் தொழி்ற்பண்பு)
துய்த்த றுஞ்ச றொழுத லணிதல்
உய்த்த லாதி யுடலுயிர்த் தொழிற்குணம். (12)


நூற்பா: 454


(உயிரல்பொருள்களின் குணப்பண்பு)


பல்வகை வடிவிரு நாற்றமை வண்ணம்
அறுசுவை யூறெட் டுயிரல் பொருட்குணம். (13)


நூற்பா: 455


(இருபொருள்களுக்குமான பொதுப்பண்பு)


தோன்றன் மறைதல் வளர்தல் சுருங்கல்
நீங்க லடைத னடுங்க லிசைத்தல்
ஈத லின்னன விருபொருட் டொழிற்குணம். (14)


ஒருகுணந் தழுவிய உரிச்சொற்கள்[தொகு]

நூற்பா: 456

சால வுறுதவ நனிகூர் கழிமிகல். (15)


பலகுணந் தழுவிய உரிச்சொற்கள்[தொகு]

நூற்பா: 457

கடியென் கிளவி காப்பே கூர்மை
விரையே விளக்க மச்சஞ் சிறப்பே
விரைவே மிகுதி புதுமை யார்த்தல்
வரைவே மன்றல் கரிப்பி னாகும். (16)


ஒருகுணந் தழுவிய உரிச்சொல்- சொல்[தொகு]

நூற்பா: 458


மாற்ற நுவற்சி செப்புரைகரை நொடியிசை
கூற்றுப் புகறன் மொழிகிளவி விளம்பறை
பாட்டுப் பகர்ச்சி யியம்பல் சொல்லே. (17)


நூற்பா: 459

முழக்கிரட் டொலிகலி யிசைதுவை பிளிறிரை
இரக்கழுங் கியம்ப லிமிழ்குளி றதிர்குரை
கனைசிலை சும்மை கவ்வை கம்பலை
அரவ மார்ப்போ டின்னன வோசை. (18)


நூற்பா: 460

(இயல் புறனடை)
இன்ன தின்னுழி யின்னண மியலும்
என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள்
சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா
நல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே. (19)


நூற்பா: 461


(அதிகாரப் புறனடை)
சொற்றொறு மிற்றிதன் பெற்றியென் றனைத்து
முற்ற மொழிகுறின் முடிவில வாதலிற்
சொற்றவற் றியலான் மற்றைய பிறவும்
தெற்றென வுணர்த றெள்ளியோர் திறனே. (20)


நூற்பா: 462

(நூற் புறனடை)


பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே. (462)


நன்னூல் சொல்லதிகாரம் ஐந்தாவது உரியியல் முற்றிற்று[தொகு]

நன்னூல் சொல்லதிகாரம் முற்றுப்பெற்றது[தொகு]

நன்னூல் மூலம் முற்றுப்பெற்றது[தொகு]

பவணந்தி யடிகள் திருவடி சரணம்[தொகு]

பார்க்க: [[]]

நன்னூல் மூலம்
நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 2. பதவியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 3. உயிரீற்றுப்புணரியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 4. மெய்யீற்றுப்புணரியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 5. உருபுபுணரியல்
நன்னூல் சொல்லதிகாரம் 1. பெயரியல்
நன்னூல் சொல்லதிகாரம் 2. வினையியல்
நன்னூல் சொல்லதிகாரம் 3. பொதுவியல்
நன்னூல் சொல்லதிகாரம் 4. இடையியல்
நன்னூல் சொல்லதிகாரம்
[[]]

நன்னூல் சொல்லதிகாரம் 5. உரியியல்