பயனர்:Balajijagadesh/6

விக்கிமூலம் இலிருந்து

இந்த உண்மையை உணர முடிகிறது. நாயக்க மன்னருக்கு உதவ அவரது எழுபத்து இரண்டு பாளையபட்டுகளில் இருந்து பெரும்படை புறப்பட்டது. என்றாலும் நாயக்க மன்னரது தனிப்படை பிரிவுகளை நடத்தியவர்கள் யார் தெரியுமா ?

„உச்சிமியாவும் உகர்ந்த பெருந்தளமும்
சவ்வாசு கானும் தன்மாவு அத்தனையும்
வாய்பூசு கான் தளமும் வாய்த்த புரவிகளும்
வாவுகான் தன்படையும் வாய்த்த பரிகளும்
சின்னராவுத்தர் சேர்ந்த புரவிகளும்
மூஸாகான் குதிரையுடன் முற்று முதலியாரும்
காதிரு சாயிபு கன்னம் புரவிகளும்
சூரன் தாவூது ராவுத்தன் தன் புரவி அத்தனையும்
மீரா சாகிபும் வேந்தன் பெரும்படையும்
ஆதிரு சாயிபும் அடர்ந்து வரும் சேனைகளும்
மகமது சாகிபு மன்னன் புரவிகளும்
படேகான் கிலிசும் வாய்த்த புரவிகளும்
மகமது கான் கிலிசும் வாய்த்த புரவிகளும்... ..”

என இராமப் பையன் அம்மானை, இனம் சுட்டிப் பாடுகிறது.

நாயக்க மன்னர்களின் ஆட்சியின் பொழுது பல போர்கள் நடைபெற்றன. மக்கள் அமைதியான சூழ்நிலையில் வாழ வாய்ப்பு மிகக் குறைவு. மன்னார் வளைகுடாவில் இருந்து தெற்கே துரத்துக்குடி வரையான கடற்பிரதேசத்தில் போர்த்து கேசியர் கி.பி. 1502 முதல் செல்வாக்கு எய்தினர். அவர்களிடம் சிறந்த கப்பல்படை இருந்தது. இதற்கும் மேலாக எதிரிகளை ஈவு இரக்கம் இல்லாமல் அழித்து ஒழிக்கும் "நல்ல" மனமும் அவர்களுக்கு இருந்தது. ஏற்கனவே இந்தப்பகுதியில் இருந்த இஸ்லாமியரது இறுக்கமான பிடிப்பிலிருந்த பரவர்கள், எளிதில் போர்த்துக்கேலியரது கிறிஸ்துவ மதத்திற்கு மத மாற்றம் பெற்றதுடன் போர்ச்சுகல் நாட்டு மன்னரது பிரஜையாகவும் மாற்றம் பெற்றதுடன் போர்ச்சுகல் நாட்டு மன்னரது பிரஜையாகவும் மாற்றம் பெற்றனர். தூத்துக்குடி, புன்னைக்காயல், மணப்பாடு, வேம்பாறு, வைப்பாறு, வீரபாண்டியன் பட்டினம் ஆகிய ஊர்களும் அவர்களது செல்வாக்கில் இருந்தன. போர்ச்சுகல் நாட்டு அரசியல் முறையிலான ஆட்சிக் குழுக்கள் அங்கு நிர்வாகத்தை இயக்கி வந்தன.[1] பெயரளவில் அவை

  1. Sathianathair - History of Madura Nayaks (1924) P.329-330.
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Balajijagadesh/6&oldid=1280520" இலிருந்து மீள்விக்கப்பட்டது