முதற் குலோத்துங்க சோழன்
முதற்
குலோத்துங்க சோழன்
முதற்
குலோத்துங்க சோழன்
ஆக்கியோர் :
T. V. சதாசிவ பண்டாரத்தார்
Retd. Lecturer, Tamil Research Department,
Annamalai University.
சிடைக்குமிடம் :
பாரி நிலையம்
59, பிராட்வே, சென்னை-1
நான்காம் பதிப்பு 1954
உரிமை ஆசிரியர்க்கே
விலை ரூபா 2
சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை, சென்னை - 14
அதிகாரம்
பக்கம்
| 1. | 7 |
| 2. | 13 |
| 3. | 22 |
| 4. | 28 |
| 5. | 31 |
| 6. | 35 |
| 7. | 40 |
| 8. | 58 |
| 9. | 61 |
| 10. | 65 |
| 11. | 70 |
| 12. | 75 |
| 13. | 80 |
| 14. | 101 |
சேர்க்கை:
| I. | 104 |
| II. | 109 |
| III. | 110 |
௨
சிவமயம்
முகவுரை
திருவாங்கூர் இராச்சியத்தின் கல்வெட்டுப் பரிசோதகர் காலஞ்சென்ற திரு. T. A. கோபிநாதராயர் அவர்கள் M. A. எழுதிய 'சோழவமிச சரித்திரச் சுருக்கம்' என்ற நூலை நான் படித்தபோது நம் தமிழகத்தில் பண்டைக் காலத்தில் அரசாண்ட சேர சோழ பாண்டியரது வரலாறுகளை இயன்றவரையில் விரிவாக அறிந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பம் உண்டாகவே, கல்வெட்டுக்களையும் செட்பேடுகளையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆராயத் தொடங்கினேன். எனது ஆராய்ச்சியிற் புலப்பட்ட சரித்திர உண்மைகளை மதுரைத் தமிழ்ச்சங்கம். கரந்தைத் தமிழ்ச்சங்கம், இவற்றின் திங்கள் வெளியீடுகளாகிய 'செந்தமிழ்' 'தமிழ்ப்பொழில்' என்ற இரண்டிலும் அவ்வக் காலங்களில் நான் வெளியிட்டு வந்ததை அன்பர் பலரும் அறிவர். நம் தமிழகத்திலும் பிறநாடுகளிலும் தன் ஆணை செல்லச் செங்கோல் செலுத்திய சக்கரவர்த்தியாகிய முதற் குலோத்துங்க சோழன் வரலாற்றை விரித்தெழுதுவதற்குரிய கருவிகள் எனக்குக் கிடைத்தமையின் காலக் குறிப்புக்களுடன் இந் நூலை ஒருவாறு எழுதி முடித்தேன்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அந்நாட்டின் உண்மைச் சரித்திரம் தாய்மொழியில் வெளிவருதல் பெருந் துணையாகும் என்பது அறிஞர்களது துணிபு. ஆதலால் , இது, முதலில் - 'தமிழ்ப்பொழில்' இரண்டு மூன்றாம் துணர்களில் வெளியிடப்பட்டது; பிறகு 1930-ஆம் ஆண்டில் தனி நூலாக வெளிவந்தது.
சென்னைப் பல்கலைக் கழகத்தார் (Madras University) இதனை நன்கு மதித்து இண்டர்மீடியேட் (Intermediate) பரீட்சைக்குரிய பாடங்களுள் ஒன்றாக அமைத்தமைபற்றிப் பெரிதும் மகிழ்ச்சியுறுவதோடு அக்கழகத்தார்க்கு என்றும் நன்றி பாராட்டுங் கடமையுமுடையேன்.
இதனைப் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்ச்சித்துறையில் ஊக்கம் பிறக்குமாறு உரிய இடங்களில் பல மேற்கோள்கள் ஆங்காங்குக் கீழ்க் குறிப்புக்களாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
சரித்திர ஆராய்ச்சியில் எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் முதலில் உண்டுபண்ணியது திரு. T. A. கோபிநாதராயர் அவர்கள் M. A. எழுதிய - 'சோழவமிச சரித்திரச் சுருக்க' மாதலின் அப் பெரியார்க்கும் எனது நன்றியுரியதாகும்.
இத்தகைய ஆராய்ச்சி நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடு நிகழ்தலும், இனி கிடைக்கும் கருவிகளால் சில செய்திகள் மாறுபடுதலும் இயல்பு என்பது அறிஞர்கள் நன்கறிந்ததேயாகும்.
இந்நூலைத் திருந்திய முறையில் வெளியிட்டு தவிய சென்னை சாது அச்சுக்கூடத்தாரது பேரன்பு பாராட்டுதற்குரியதாகும்.
| அண்ணாமலைநகர் | T. V. சதாசிவ பண்டாரத்தார் |
| 15-5-54 |