திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-பவ்வருக்கம்

விக்கிமூலம் இலிருந்து

திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை[தொகு]

ஆசிரியர்: தெரியவில்லை[தொகு]

பவ்வருக்கம்-12 பாடல்கள் [தொகு]

பாடல் 64 (பந்தாடுமோ)[தொகு]

(பாங்கன் குறிவழிச் சேறல்)

ந்தாடு மோபொற் கழங்கா டுமோபொற் படர்முலைக்குச் ()

சந்தாடு மோவுஞ்ச லாடு மோவெண் டரளமுந்தி ()

நந்தாடு செங்கையர் ஞானப்பி ரான்சந்த னாசலப்பூங் ()

கொந்தாடு மார்பன் குறிப்பையெல் லாந்திறை கொண்டகொம்பே. ()


பாடல் 65 (பாயுங்)[தொகு]

(களிறு வினாதல்)

பாயுங் கடமும் பிறைவாண் மருப்பும் பணைக்கையுமாய்க் ()

காயுங் களிறொன்று வந்ததுண் டோகையுங் காலுங்கண்ணும் ()

வாயுஞ் செவேலென்ற கார்மேனி யாதி வராகர்வெற்பிற் ()

றேயும் பிறைநுத லீர்நீங்கள் காக்குந் தினைப்புனத்தே. ()


பாடல் 66 (பிரசத்தழை)[தொகு]

(இறைவனை நகுதல்)

பிரசத் தழைகொண்டு போர்வேழ மெய்த பெருமையெல்லா ()

மரசர்க் குரைக்கில் வெகுமானஞ் செய்வ ரராமகுடச் ()

சிரசிற் றிருநடஞ் செய்தார் வராகர்செந் தேன்புனத்தின் ()

பரசக் குயின்மொழி யாரறிந் தேது பலமதனே. ()

பாடல் 67 (பீதாம்பரர்)[தொகு]

(இதுவுமது)

பீதாம் பரர்பன்ன காசனர் ஞானப் பிரான்கரந்தை ()

மாதாம் பிரபன்னித் தென்கரை யார்வரை வஞ்சியன்னீர் ()

போதாம் பரவன்னக் கைவாளி யும்வில்லும் போலுமிவர் ()

ஏதாம் பிரபன்ன ரானையெய் தோமென் றியம்பியதே. ()


பாடல் 68 (புனையுந்)[தொகு]

(நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கல்)


புனையுந் துளபத் திருமால் வராகர் பொருப்புமின்னே ()

பனையன் றிலையு மருந்ததி வாழ்வையும் பார்த்திலையோ ()

நினையுந் தொறும்விரும் பேனெருப் பாய்நெடு மூச்செறிந்து ()

வனையுந் துணைமுலை முத்தா ரமும்பொரி மாப்படுமே. ()


பாடல் 69 (பூணாரமார்பர்)[தொகு]

(பகலினும் இரவினும் பயின்று வருகென்றல்)


பூணார மர்பர்மெய்ஞ் ஞான வராகர் பொதியவெற்பில் ()

வாணாள் கணவர் மருவிய நாள்மட வார்க்குப்பஞ்ச ()

பாணாவ தாரகெம் பீரரிங் கும்மைப் பகலிரவாய்க் ()

காணா திருக்கப் பொருந்தாள் சுரத கலாமயிலே. ()


பாடல் 70 (பெருகும்)[தொகு]

(காம மிக்க கழிபடர் கிளவி)

பெருகும் பொருநைத்துறைக்குரு கீரெம் பிரான்கரந்தை ()

வருகின்ற நாட்சொல்லி மாநிதிக் கேகின்ற வஞ்சர்பின்போ ()

யுருகின்ற தென்னெஞ்ச மூருங்கண் ணீரு முலர்ந்துடலங் ()

கருகின்ற தென்றிவை காண்கின்ற நீரொரு காற்சொலுமே. ()


பாடல் 71 (பேராயிர)[தொகு]

(இதுவுமது)

பேரா யிரமுள்ள ஞான வராகப் பிரானருள்போற் ()

சீராய் வளருஞ் செழுஞ்சாலிச் செய்யிற் சிறையுலர்த்தி ()

வாரா யிருக்கின்ற நாராயென் கொங்கை மழைத்தடங்கண் ()

ணீராய் நிறைந்தது பாராய் வாரார்வஞ்ச நெஞ்சகரே. ()


பாடல் 72 (பைத்தேறு)[தொகு]

(பாகனோடு சொல்லல்)

பைத்தேறு பாம்பணை யாதி வராகர்தென் பால்வலவா ()

முத்தேறு கொங்கைமுன் கார்செல்லு மால்முடி தாங்குகன ()

கத்தேருந் தானையுங் காணாவென் றேங்கிக் கபோலமிற்கை ()

வைத்தே மனமலைத் தேனிற்கு மேதெரு வாசலுற்றே. ()


பாடல் 73 (பொன்னுடன்)[தொகு]

(கலந்துடன் வருவோர்க் கண்டு கேட்டல்)

பொன்னுடன் முத்து மகிலுடன் சாந்தும் பொருதெறியுங் ()

கன்னடி யன்பெருங்கா லாதி வராகர் கரந்தைவெற்பில் ()

மன்னுடன் செல்லும் வயங்கிழை யேயுங்கள் வாசனைக்கோர் ()

மின்னுடன் மேகஞ் செலக்கண்ட தோவிந்த வெஞ்சுரத்தே. ()


பாடல் 74 (போனது வேனில்)[தொகு]

(பருவங்கண்டு பெருமகள் புலம்பல்)

போனது வேனில் புகுந்தது காரென் புணர்முலைபொன் ()

னானது கண்டு மவரோவந் தாரிலை யாழியிலோர் ()

மீனது வானவர் ஞான வராகர் விளங்குவெற்பிற் ()

றேனது வார மலர்ந்தது பூங்கொன்றை செம்பொனென்றே. ()


பாடல் 75 (பௌவமனைய)[தொகு]

(வலம்புரி கிழத்தி வாழ்த்தல்)

பௌவ மனைய படைவேந்தர் தேரிற் பணித்தசங்கந் ()

தைவிகச் சங்கத் தமிழ்வாணர் வாழ்த்தசற் சங்கமொய்க்குந் ()

தெய்வ வராகப் பெருமாள்பொற் கோயிற் றிருச்சங்கமுங் ()

கைவரு சங்கமும் போல்வாழி யாயிரங் காலங்களே. (60)



பார்க்க[தொகு]

திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-உயிர்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-கவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-ஞவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-தவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-நவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-சவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-மவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-யவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-வவ்வருக்கம்