உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

கிரிக்கெட்
ஆட்டத்தின் கதை


தேசிய விருது பெற்ற நூலாசிரியர்

பல்கலைப் பேரறிஞர்

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

M.A., M.P.Ed., Ph.D., D.Litt., D.Ed., FUWAI

முன்னாள் பேராசிரியர், ஆய்வுத்துறைத் தலைவர்,

ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்விக் கல்லூரி,

சென்னை - 600 035.



ராஜ்மோகன் பதிப்பகம்

‘லில்லி பவனம்’

8. போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,

தி.நகர், சென்னை - 600 017.

தொலைபேசி : 044 - 24332696

நூல் விபர அட்டவணை

நூலின் பெயர் :கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

மொழி : தமிழ்

பொருள் : கிரிக்கெட் வரலாறு

ஆசிரியர் : டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா (1937-2001)

முதல் பதிப்பு : 1980

இரண்டாம் பதிப்பு : 1988

மூன்றாம் பதிப்பு : 1996

நான்காம் பதிப்பு : 2009 - நவம்பர்

நூலின் அளவு : கிரவுன்

படிகள் : 1200

அச்சு : 12 புள்ளி

தாள் : என்.எஸ்.

பக்கங்கள் : 96

நூல்கட்டுமானம் : பேப்பர் அட்டைக்கட்டு


விலை ரூ. 35.00


உரிமை : பதிப்பகத்தாருக்கு

தயாரிப்பு : ஆர். ஆடம் சாக்ரட்டீஸ்

வெளியிட்டோர் : ராஜ்மோகன் பதிப்பகம்

'லில்லி பவனம்'

8,போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,

தி.நகர், சென்னை-600 017.

அச்சிட்டோர் : கலர்விங்ஸ்

சென்னை - 600 005.

முன்னுரை

கிரிக்கெட் ஆட்டம் பற்றி வருகின்ற எனது இரண்டாவது நூலாகும் கிரிக்கெட் ஆட்டத்தின் கதை' எனும் இந்நூல். ஏற்கெனவே, கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதசில என்ற முதல நூல் வெளி வந்து, மாணவர்களிடையேயும் பொது மக்களிடையேயும் சிறந்த வரவேற்பினைப் பெற்றிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, கிரிக்கெட் விளையாடுவது, எப்படி? ‘கிரிக்கெட் ஆட்டத்தில் சுவையான நிகழ்ச்சிகள்‘ எனும் நூல்களும் விரைவில் வெளிவர இருக்கின்றன.

எனது விளையாட்டுத்துறை தமிழ் இலக்கிய நூல்களைப் பார்க்கும் அன்பர்கள், ஏன் நீங்கள் கிரிக்கெட் பற்றி எழுதுவதில்லை. என்று அடிக்கடி கேட்டதின் விளைவாகவும்; கிரிக்கெட் பற்றி தமிழில் எழுதவே முடியாது என்று அடித்துச் சொன்னவர்களுக்குப் பதிலாகவும், கிரிக்கெட் நூல்கள் இப்பொழுது தொடர்ந்து வெளிவருகின்றன.

மக்களிடையே அதிகம் வரவேற்பினைப் பெற்றிருக்கும் கிரிக்கெட் ஆட்டம், அதிகமான அளவில் ஆங்கிலச் சொற்களாலேயே பேசப்படுகிறது. அதற்குரிய கலைச் சொற்களாக தமிழில் சொற்களை உருவாக்கி கற்கிற பொழுது, ‘இவை வேண்டாமே’ என்று கேட்கின்றவர்களும் உண்டு.

'தமிழில் விளையாட்டுகளுக்கும் ஏற்ற கலைச் சொற்கள் இருக்கின்றன. ஏற்ற சொற்களை முயன்றால்' நிச்சயம் உருவாக்க முடியும்’ என்ற நம்பிக்கையில் தான் மிகவும் முயன்று, பல கலைச்சொற்களை உருவாக்கி இருக்கிறேன்.

முதலில படிக்கத் தொடங்கினால், நாளாவட்டத்தில் வாய்மொழியில் பழக்கமாகிவிடும் என்ற நம்பிக்கை உண்மையாகிக் கொண்டு வருவதையும் நான் உணர்கிறேன்.

கிரிக்கெட் ஆட்டத்தின் வரலாற்றைத்தான், கிரிக்கெட் ஆட்டத்தின் கதை என்ற பெயரில் எழுதியுள்ளேன். மிகவும் சிக்கலான வரலாறுதான். ஆங்காங்கே குழப்பங்களும், குறிப்புச் சிக்கல்களும் கிளைத்தெழுந்து என்னை கலக்கியிருக்கின்றன.

என்றாலும், முடிந்த அளவு, நீரோட்டம் போல நிகழ்ச்சிகளையும், வரலாற்றுக் குறிப்புக்களையும் வடிவமைத்து இங்கே தந்திருக்கிறேன்.

எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளவும், தொடர்ந்து ரசித்துப் படிக்கவும் ஏற்ற வகையில் சுவையாகவே எழுதிச் சென்றிருக்கிறேன். இன்னும் எவ்வாறு எழுதவேண்டும். எழுதினால் நன்றாக அமையும் என்று வாசகர்கள் எடுத்துரைத்தால், அக்கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். பின்பற்றுகிறேன்.

கிரிக்கெட் ஆட்டத்தின் தொடக்கம் சரிவரத் தெரியாவிட்டாலும், வளர்ச்சி ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாகவே எழுதப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு முக்கியத் திறனும் எவ்வாறெல்லாம் காலத்தால் மாறி வந்தது, ஆட்டக்காரர்களால் மெருகேறி வந்தது என்கிற நிகழ்ச்சிகள் எல்லாம். நாவலில் வருகின்ற நிகழ்ச்சிகள் போலவே அமைந்து, நம்மை வியப்படையவும், திகைப்படையவும் செய்கின்றன.

ஆட்டத்தில் பங்கு பெற்றவர்கள், பொழுது போக்குக்காக, மகிழ்ச்சிக்காக மட்டும் ஆடாமல், இதை ஒரு உயிரினும் மேலான ஆட்டமாக எண்ணி ஆடியதின் விளைவே, காப்பாற்றியதின் முடிவே, இந்த ‘உலக மகா புகழ்பெற்ற நிலைக்குக்’ கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

தாய்நாட்டு சட்டத்தைப் போலவே, கிரிக்கெட்டின் விதிகளை மதித்தார்கள் ஆங்கிலேயர்கள் என்றால், அந்த உணர்வே, ஆட்டத்தின் செழுமைக்கும் சீரிய வளர்ச்சிக்கும் வித்தாக, சத்தாக விளங்கியிருக்கிறது.

'கிரிக்கெட் ஆடுபவர்கள் பண்பாளர்கள்' என்று பேசுகின்ற அளவில் ஆட்டம் பண்பு நடைபோடுவதால்தான், மக்கள் மிகவும் விரும்புகின்றார்கள். மதித்துப் பேசுகின்றார்கள். பாராட்டி மகிழ்கின்றார்கள்.

அத்தகைய அரிய ஆட்டத்தின் வரலாற்றை, வளர்ச்சியைத்தான், கிரிக்கெட் ஆட்டத்தின் கதை என்று உங்கள் கையில் உருவாக்கித் தந்திருக்கிறேன்.

நூலைப் படிக்கத் தொடங்கும் உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகிறது. படித்து மகிழுங்கள். என் முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்.

மேலும் பல விளையாட்டுத்துறை தமிழ் இலக்கிய நூல்களை எழுதி வெளியிடும் ஆற்றலை எனக்குத்தாருங்கள் என்று உங்கள் கையில் நூலைப் படைக்கிறேன்.

வணக்கம்.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா