நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
நெஞ்சை உருக்கும்
நீதிக் கதைகள்
கவிஞர் வெள்ளியங்காட்டான்
Nenchai Urukkum Neethi Kathaigal (Stories on Morality)
• Velliyamkaattaan • First Edition : Dec. 2005 • © : V.R. Nalini
• Published by : V.R. Nalini, 1/52, Arasa Mara Street,
Aavarampalayam, Coimbatore - 641 006, ✆ : 2561015
• Paper Size : Crown 1/8 e Pages : 104
• Printed at : Thilaga Offset, 169-A, 6th Street Extension,
Gandhipuram, Coimbatore - 641 012. ✆ : 2523205
Price: Rs.27.00
நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள் • கதைகள்
கவிஞர் வெள்ளியங்காட்டான் • முதற்பதிப்பு: டிசம்பர் 2005
• உரிமை : வெ. இரா. நளினி • வெளியீடு: வெ. இரா. நளினி
1/52, அரசமர வீதி, ஆவரம்பாளையம், கோயமுத்துர் - 641 006. ✆ : 2561015.
• நூலின் அளவு: கிரெளன் 1/8 பக்கங்கள் : 104
அச்சாக்கம் : திலகா ஆப்செட், 169-ஏ, 6வது வீதி தொடர்ச்சி,
காந்திபுரம், கோயமுத்துர் - 641 012. ✆ : 2523205
விலை: ரூ.27/–
என்,
தந்தையின் பரிசாக
அருமைத் தாய்க்கு
அர்ப்பணம்...
அது ஓர் அழகான மணம் பரப்பும் மலர்
ஒரு நாள் காலையில் மலர்ந்தது
கொஞ்ச நேரம் மகிழ்ந்தது, பிறகு
மெல்ல, மெல்ல வாடியது,
காற்று வீசியது,
மலர் உதிர்ந்தது.
வாழ்க்கை என்பதும் அம் மலர்
போன்றதே!
அம்மலர் தான் வாழும் காலம்
வரை தன்
நறுமணத்தை எங்கும் பரப்பியது.
காற்று மரணத்தைக் கொடுத்த போது
மகிழ்வோடு ஏற்றுக் கொண்டது!
இது தான் வாழ்க்கை.
இது தான் மரணம், பின்
அழுது புலம்புவது எதற்காக?
-கன்னடக் கவிதை
இத்தொகுப்பில் உள்ள கர்நாடகக் கதைச் சிற்பிகளின் பெயர்களை அறியாத போதும் நன்றிகள் அவர்களின் பணிக்காக!
- மறைந்த கவிஞர் வெள்ளியங்காட்டான்
“அழகான கதைகள் மலர்வதென்றால் அதற்கு வளம் மிகுந்த ஒரு வளர்ப்புப் பண்ணை வேண்டும். அப்பண்ணையில், உருவிலா மணமிலாப் பூக்கள் பல பூத்து, வாடி, மண்ணோடு மண்ணாக மக்கி எருவாகி இருக்கவேண்டும். இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. முன் பூத்து வாடிய மலர்களே இப்போதுள்ள கதைகளுக்கு உரமாகி விடுகின்றன. நம்முடைய சாரமற்ற கதைகளே இனிப் பூக்கும் வாடாத மலர்களுக்கு எருவாகி விடுகின்றன”.
வெளியிடுவோர் குறிப்பு
கன்னடச் சான்றோர்கள் கூறக்கேட்டுக் கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்களால் தமிழில் எழுதி வைக்கப்பட்டவை இக்கதைகள்! இவற்றின் மூல நூல்கள் பற்றிய விபரம் தெரிய வரவில்லை. விபரங்கள் கிடைத்தால் அடுத்த பதிப்பில் தவறாது வெளியிடுவோம். இக்கதைகளில் பொதிந்திருக்கும் உயர்ந்த கருத்துகள் மனித மனங்களில் பாய வேண்டும் என்ற அவாவினால் இவற்றை நூலாக வெளியிடுகிறோம்.
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு
அன்புடன்
வெளியீட்டாளர்
பதிப்புரையாக
ஏனெனில் - எனது வாழ்க்கையின் அடித்தளத்தை ஆழமாக அமைத்து அதன் ‘அகல - நீள - ஆழ - அடர்த்தியின்’ அர்த்தங்களை அவ்வப்போது அறிவுறுத்துகிறார் அவர்.
“அவரை” எனது தாத்தா என்று குறிப்பிடுவதை விடவும் “எனது ஆசான்” என்று அழைப்பதே அறிவுப்பூர்வமானது என அறிகிறேன். ஆனந்திக்கிறேன்.இன்னும், அவரது அற்புதப் படைப்புகள் அனைத்தையும் அச்சேற்றி அருமைப் புத்தகங்களாக்கி உலக மக்களுக்கு அர்ப்பணிக்கவே அதிகம் ஆவலுறுகிறோம்.
மேலும், "நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்" என்னும் இப்புத்தகத்தை நமது "பிரபஞ்ச அமைதி ஆசிரமம்" சார்பாக எனது தாத்தா கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்களின் நினைவாக, எனது உயிர்த் தாய் வெ.இரா.நளினி நாராயணசாமி அவர்கள் வழியாக வெளியிடுவதில் ஆத்ம ஆனந்தம் அடைகிறோம்.என்றென்றும்
N. சிவா சித்ரா M.Sc..,M.Ed.,M.Phil.,
பிரபஞ்ச சேவா மையம்
நல்ல கவுண்டம்பாளையம், பதுவம்பள்ளி
கருமத்தம்பட்டி வழி, கோவை - 641659
98422 80205, 98422 20285, 98422 20295
நாம் அமைதியாக வாழவும் பிறரை வாழ வைக்கவும், குற்றமற்ற, சுயநலமற்ற மனம் வேண்டும்.
கலாமின் கனவுகள் நனவாகட்டும். பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அகிம்சையில், கருணையில், தியாகத்தில் மிஞ்சியது 'பாரதம்' எனப் போற்றிப் பேசட்டும்.
உங்கள் அனைவரின் தாயாகி வாழ்த்தும்,
வெ.இரா.நளினி
போராடிப் போராடித் தோற்றுப் போன தந்தை!
போராடித் தோற்றுவிடுவேன் என
மரணத்தை அழைக்கும் வயதில்,
“மனித நேயம் மிச்சமின்றி” என,
இதயம் உருகி,
இருகை நீட்டி,
இருநூல்கள் வெளிவர உதவிய
புவியரசு என்னும் கவிஞர் பெருந்தகை...
மாபெரும் கவிஞன் மக்களுக்காகச்
சூடிக்கொடுத்த சுடர்க் கதை மாலை
இது என்று கனிந்து
நெகிழ்ந்து இனிய நன்மொழி கூறி,
அழிந்து விடுமோ என நான்
அஞ்சி நினைத்ததை,
முழு முயற்சியோடு
அழகாக்கி, உயிர்கொடுத்து
நீங்கள் உட்கொள்ளக் கொடுத்த சகோதரர்,
கவிஞரைக் கொண்டாடும் கவிஞர்,
ஸ்ரீ சே.ப. நரசிம்மலு நாயுடு நினைவு
உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்
இரணியன் என்னும் அன்பு நெஞ்சினர்...
என் தந்தையின் நூல்கள்
“கவியகம்”, “நீதிக் கதைகள்”
ஆகியவற்றை அழகுற அச்சிட்டுக் கொடுத்த
நந்தினி அச்சகம் தோழர் வேனில்...
மற்றும் அச்சக நண்பர்கள்
அனைவருக்கும்
என் தந்தையின் ஆசியும் என்றும் என் நன்றியும்.
-வெ.இரா.நளினி
பொருளடக்கம்
1. | 1 |
2. | 5 |
3. | 11 |
4. | 15 |
5. | 21 |
6. | 26 |
7. | 32 |
8. | 37 |
9. | 42 |
10. | 49 |
11. | 58 |
12. | 67 |
13. | 76 |
மனிதத்தை மாண்புறச் செய்தல்
அறிவுப் புலத்தில் எத்தனையோ ஒளிச்சுடர்கள் எழுந்து ஒளிவீசியுள்ளதை வரலாற்றில் காண்கிறோம். ஆனால் அச்சுடர்கள் வீசிய ஒளியை மனித சமூகம் பயன்படுத்திக் கொண்டதா என்பதுதான் கவலையோடு நம் நெஞ்சில் எழும் கேள்வி.
கடந்த நூற்றாண்டில் இக்கொங்கு மண்ணில், தன்மானத்தோடும் தமிழ் நேயத்தோடும் வாழ்வியல் செம்மையோடும் வாழ்ந்து, அரிய சிந்தனைகளைப் பாடல்களாகவும் உரைநடையாகவும் எழுதிக் குவித்த ஒரு மாபெரும் தமிழ் மகன் கவிஞர் வெள்ளியங்காட்டான், எத்துணை தமிழரால் அறியப்பட்டிருந்தார் என்பதுதான் நம்மை வருத்தமுறச்செய்யும் வினாவாகும்.
ஒருதொழிலாளியாக அவர் வாழ்ந்தார். படிப்பாளியாகவும் சிந்தனையாளராகவும் படைப்பாளியாகவும் அவர் திகழ்ந்தார். “அறம் செயும் வகை” அறிந்திருந்த அவருக்குப் ‘பொருள் செயல் வகை’ தான் புலப்படாததாய் இருந்தது. பொருளை நேசித்த மக்களுக்கு, அருள் நேயராகவும் அறநேயராகவும் அறிவு நேயராகவும் வாழ்ந்த ஒருவரை அடையாளங் காண இயலவில்லை!
இருள் விலகுகிறது இன்று! சிதலை தின்னப்பட்ட ஆலமரத்தை அதன் விழுது தாங்கி நிமிரச் செய்வது போல, தந்தையின் அறிவுச் செல்வத்தைத்தாம் ஏந்தி வந்து தந்தையின் புகழைத் தமிழ் வானில் நிமிரச் செய்கிறார் அவர் திருமகள்! நளினி அம்மையார் எனும் நற்றாய்! மகள் தந்தைக்கு ஆற்றும் பணியைக் கண்ணுறும்போது, ‘இவா்தந்தை என் நோற்றாரோ?’ என்று எண்ண வேண்டி இருக்கிறது! மக்களைப் பயந்த தாய் தந்தையரைத் தான் உலகம் அறிந்துள்ளது. ஆனால் தந்தையைப் பயந்த மகளை இப்போதுதான் உலகம் அடையாளம் காண்கிறது.
அம்மையார் அவர்களின் அரு முயற்சியால், கவிஞாின் கவிதைத் தொகுப்புகள் இரண்டு வெளியாகின! இப்போது இளம் உள்ளங்களைப் பண்படுத்தும் ஓர் அருமையான சிறுகதைத் தொகுப்பு நம் கைகளில் தவழ்கிறது. கவிஞா் தமிழை ஆழக்கற்றதுடன் கன்னடமும் கற்றுத் தோ்ந்தவர். கன்னட மொழியில் வழங்கும் நல்ல கதைகளை,நல்ல வரலாற்றுச் செய்திகளை அன்னைத் தமிழில் அழகுறப் படைத்திருக்கிறார்.
நெஞ்சை நெகிழ்விக்கும் மேலான நீதிகள் அடங்கிய கதைகள் இவை! மனித மனங்களில் நற்பண்புகளைச் செழிக்கச் செய்பவை!
“மனிதாிலும் மேலான தாய்மைப் பண்பு வாய்ந்த கொரில்லாக் குரங்கு; மக்கள் உயிா்கள் காக்கப்
படுவதற்காகத் தம் உயிரை ஈந்த மகா நாமா்; சொற்பிறழாது ஏழைக்குப் பெருந் தொகை நல்கியமனிதத்தை மாண்புறச் செய்யும் இந்நூலை அழகாக அச்சிட்டளித்த நந்தினி அச்சகம் திரு.வேனில் அவர்களும் அச்சகப் பணியாளர்களும் நம் பாராட்டுக்குரியவர்கள். இந்நூலை அரிதின் முயன்று வெளியிடும் கவிஞரின் பேத்தி சிவா சித்ரா அவர்கள் நம் போற்றுதலுக்குரியவர்.
–இரணியன்