எக்கோவின் காதல்/வாழ்க்கைக் குறிப்பு

விக்கிமூலம் இலிருந்து
கவியரசர் முடியரசன்
வாழ்க்கைக் குறிப்பு
இயற் பெயர் பெற்றோர்
துரைராசு சுப்புராயலு-சீதாலெட்சுமி
பிறந்த ஊர் வாழ்ந்த ஊர்
பெரியகுளம் காரைக்குடி
தோற்றம் மறைவு
7.10.1920 3.12.1998
கல்வி தமிழாசிரியர் பணி
பிரசேவ பண்டிதம் சென்னை (1947- 49)
வித்துவான் காரைக்குடி (1949 - 78)
திருமணம் துணைவியார்
2.2.1949 கலைச்செல்வி


மக்கள்: மருமக்கள்: பேரப்பிள்ளைகள்:
குமுதம் பாண்டியன் அருள்செல்வம், திருப்பாவை
பாரி பூங்கோதை ஓவியம்
அன்னம் சற்குணம் செழியன், இனியன்
குமணன் தேன்மொழி அமுதன், யாழிசை
செல்வம் சுசீலா கலைக்கோ, வெண்ணிலா
அல்லி பாண்டியன் முகிலன்
இயற்றிய நூல்கள்
1. முடியரசன் கவிதைகள் (கவிதைத் தொகுதி).......... 1954
2. காவியப் பாவை (கவிதைத் தொகுதி).......... 1955
3. கவியரங்கில் முடியரசன் (கவிதைத் தொகுதி).......... 1960
4. பாடுங்குயில் (கவிதைத் தொகுதி).......... 1983
5. நெஞ்சு பொறுக்கவில்லையே (கவிதைத் தொகுதி).......... 1985
6. மனிதனைத் தேடுகிறேன். (கவிதைத் தொகுதி).......... 1986
7. தமிழ் வழிபாடு (கவிதைத் தொகுதி).......... 1997
8. தமிழ் முழக்கம் (கவிதைத் தொகுதி).......... 1999
9. நெஞ்சிற் பூத்தவை (கவிதைத் தொகுதி).......... 1999
10. ஞாயிறும் திங்களும் (கவிதைத் தொகுதி).......... 1999
11. தாய்மொழி காப்போம் (கவிதைத் தொகுதி).......... 2001
12. புதியதொரு விதி செய்வோம் (கவிதைத் தொகுதி).......... 1999
13. வள்ளுவர் கோட்டம் (கவிதைத் தொகுதி).......... 1999
14. மனிதரைக் கண்டுகொண்டேன் (கவிதைத் தொகுதி)..........
15. பூங்கொடி காப்பியம்.......... 1964
16. வீரகாவியம் (கவிதைத் தொகுதி).......... 1970
17. ஊன்றுகோல் காப்பியம்.......... 1983
18. கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்
(அன்புள்ள பாண்டியனுக்கு - இளவரசனுக்கு)
(கடித இலக்கியமி).......... 1999
19. எப்படி வளரும் தமிழ் (கட்டுரை)..........
20. எக்கோவின் காதல் (சிறுகதைகள்)................................. 1999

21. சீர்திருத்தச் செம்மல்வை.க.சண்முகனார் (கட்டுரை)..............1990

22. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு)*

(★உடுக்குறியிட்டவை வெளிவர வேண்டியன ஆகும்.)
தேடிவந்த சிறப்புகள்
(விருது, பட்டம், பரிசு - வழங்கியவர் இடம், ஆண்டு)
  • 'அழகின் சிரிப்பு' என்ற கவிதைக்கு முதல் பரிசு - பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை - 1950
  • 'திராவிட நாட்டின் வானம்பாடி' பட்டம்- பேரறிஞர் அண்ணா -1957.
  • 'கவியரசு பட்டம்', பொற்பதக்கம் - குன்றக்குடி அடிகளார். பாரி விழா, பறம்பு மலை - 1966
  • 'முடியரசன் கவிதைகள்' நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1966
  • 'வீர காவியம்' நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1973.
  • 'நல்லாசிரியர் விருது', வெள்ளிப் பதக்கம் - கே.கே. ஷா, ஆளுநர்,
  • தமிழ் நாடு அரசு - 1974.
  • 'சங்கப்புலவர்' பட்டம் - குன்றக்குடி அடிகளார் - 1974.
  • 'பாவரசர்' பட்டம், பொற்பேழை - ஞா. தேவநேயப் பாவாணர், உலகத் தமிழ் கழகம், பெங்களுர் - 1979
  • ‘பொற்கிழி’ - பாவாணர் தமிழ்க் குடும்பம், நெய்வேலி - 1979.
  • ‘பொற்குவை’ - ரூ.10,000,- மணிவிழா எடுப்பு - கவிஞரின் மாணாக்கர்கள் - காரைக்குடி - 1979
  • பொற்கிழி - பாரதியார் நூற்றாண்டு விழாக்குழு, சிவகங்கை
  • ‘கவிப் பெருங்கோ’ பட்டம், பொற்கிழி ரூ.10,000, - மணிவிழா எடுப்பு -கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க. மாநில இலக்கிய அணி, சென்னை - 1980
  • ‘தமிழ்ச் சான்றோர்’ விருது பதக்கம் - தமிழகப் புலவர் குழு, சேலம் - 1983.
  • ‘கலைஞர் விருது’ - என்.டி. இராமராவ், ஆந்திர முன்னாள் முதலமைச்சர்,

கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க.முப்பெரும் விழா, சென்னை - 1988

  • ‘பாவேந்தர் விருது’ (1987 க்குரியது) , பொற்பதக்கம், கலைஞர் மு. கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1989
  • ‘பொற்கிழி’ - விக்கிரமன்- அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர், காரைக்குடி கவிஞர் இல்லம் - 1993
  • ‘பூங்கொடி’ நூலுக்கு இந்திராணி இலக்கியப் பரிசு ரூ.5,000, - இந்திராணி அறக்கட்டளை, கரூர்-1993
  • சிறந்த தமிழ்த் தொண்டிற்கான அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில்- வெள்ளிப் பேழை, பொற்குவை ரூ. 50,000,அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை -1993.
  • ‘இராணா இலக்கிய விருது’, பொற்குவை ரூ.10,000,- தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு - 1994.

• ‘கல்வி உலகக் கவியரசு’ விருது - அகில இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், (அழகப்பா பல்கலைக் கழகம்) காரைக்குடி - 1996

• "பொற்கிழி’ பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க் கல்லுரி, மேலைச்சிவபுரி - 1997

• 'கலைமாமணி’ விருது - பொற்பதக்கம் - செல்வி பாத்திமா பீவி, ஆளுநர், கலைஞர் மு.கருணாநிதி, முதலமைச்சர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1998.

பிற குறிப்புகள்

• 21ஆம் அகவையில் இயற்றிய சாதி என்பது நமக்கு ஏனோ? என்ற கவிதையே முதல்முதலில் அச்சு வாகனம் ஏறியது. இது பேரறிஞர் அண்ணாவால் திராவிட நாடு இதழில் வெளியிடப்பட்டது (1940).

• தந்தை பெரியாரின் தன்மான இயக்கத் தொடர்பு (1940)

• "சாதி மறுப்புத் திருமணம் செய்யவாவது இசைவு கொடுங்கள்" என அன்னையாரிடம் வேண்டுதல், பெற்றோர் இசைதல். பெற்றோர் மூலம் ஞகலைச்செல்விஞ எனும் நலத்தகையாரை பேராசிரியர் மயிலை சிவமுத்து தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார் (1949)

• திருமணமான ஆண்டே தமது துணைவியாருடன் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றார் (1949)

• கலப்புத் திருமணத்தின் தேவையைப் பற்றிக் கவிதை பல பாடியதோடு இருந்து விடாமல் தாமும் கலப்புத் திருமணம் செய்து கொண்டு, தம் பிள்ளைகள் அனைவருக்கும் அவ்வாறே செய்துவித்துத் தம் கொள்கைக்கு வெற்றி தேடித்தந்ததன் மூலம் அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்னும் வள்ளுவன் வாக்கைத் தோல்வியுறச் செய்தார்.

• காரைக்குடியில் மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணியேற்றார் (1949)

• 'முடியரசன்........எனக்குப் பின் கவிஞன்' எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாராட்டப் பெற்றார் (1950)

• இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டதாகக் காவல் துறையினர் வழக்கு (1965)

• கவிஞரது கவிதைகள் பல சாகித்திய அகாதமியால் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கன்னடத்திலும், உருசிய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

• கவிஞரது நூல்கள் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பல்கலைக் கழகங்களில் இவர்தம் நூல்கள் ‘முனைவர் மற்றும் எம்.ஃபில்’ பட்டத்திற்காகவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

• 'கவியரசர் முடியரசனார் முத்தமிழ் மன்றம்’ என்னும் பெயரில் புலவர் தி.மு. அரசமாணிக்கம் என்பார், ஈரோட்டில் மன்றம் அமைத்துத் தமிழ்த்தொண்டு செய்து வருகிறார்.

சிறப்பியல்புகள்

வள்ளுவர் நெறியில் வாழ்ந்தவர், சொல்லும் செயலும் ஒத்த வாழ்வினர், வறுமையிலும் செம்மை போற்றியவர், திமிர்ந்த ஞானச் செருக்குடைய சங்கப் புலவரனையர், சங்கத் தமிழனைய துயவர், பீடுநடையினர், பெருமித வாழ்வினர், நிமிர்ந்த நடையினர், நேர் கொண்ட பார்வையர், அண்டிப்பிழையார். ஆர்த்த வாழ்வினர், ஒட்டார் பின் செல்லாதவர், நல்லாசிரியர், ஆசிரியர் போற்றுபவர், நன்றி மறவாதவர். நட்புப்பெரிதென வாழ்ந்தவர், பகுத்தறிவாளர், மனிதநேயர், பழகுதற்கினிய பண்பாளர், பிறர்க்குதவும் ஏந்தல், சாதி தொலைத்தவர், சமயம் அறுத்தவர், பதவி வெறுத்தவர், சமத்துவம் விரும்பி, விளம்பரம் விரும்பார், எளிமை வாழ்வினர், புகழ் கண்டு கூசுவார். அன்பு நெஞ்சினர். குழந்தை உள்ளத்தினர், பூமனத்தினர், இனிமைப் பேச்சினர், இளமை விரும்பி, அமைதி விரும்பி, குறிக்கோள் வாழ்வினர்.

இடர்ப்பாடுகளும், இன்னல்களும் வந்தபோதும் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை வழுவாமல் தடம்புரளாத் தங்கமாக திகழ்ந்தவர்.

தமது வாழ்நாளில் இறுதியாக அவர் இயற்றிய கவிதை

வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக் கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ் நாளெல்லாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே.

தொகுப்பு :

கவியரசர் முடியரசனார் முத்தமிழ் மன்றம்

ஈரோடு.

உள்ளுறை